திங்கள், 12 செப்டம்பர், 2016

சங்கதத்தில் தமிழ்.

சமஸ்கிருத மொழியில்  மோனியர் வில்லியம்ஸ் ஆக்கிய அகரவரிசையில் 166,434 க்கு மேற்பட்ட சொற்கள் இருந்தன. .இவர் பிரிட்டீஷ் காலத்தில் இதை ஆக்கித் தந்தவர்.  பின்னாளில்  டாக்டர் லகோவரி  என்னும் பிரஞ்சு ஆய்வாளரும் அவர்தம்  ஆய்வுக் குழுவும் செய்த ஆராய்ச்சியின் படி . 1/3 பகுதி சமஸ்கிருதச் சொற்கள் திராவிடமொழிகளில். அதாவது பெரும்பாலும் தமிழிலிருந்து பெறப்பட்டு அமைக்கப்பட்டவை. அடுத்த 1/3 விழுக்காடு  மேலை ஆரியத்தோடு தொடர்புள்ளாவை. அவற்றின் மூலங்களைத் திராவிடமொழிகளில் தெளிவாகக் காண இயலவில்லை. ஈரான் முதல் மேல்நோக்கிச் செல்லச் செல்ல வழங்கும்  இந்தோ ஐரோப்பிய மொழிச் சொற்களோடு  தொடர்புகண்டவை. மீதமுள்ள 1/3 எங்கிருந்து வந்தவை என்று குழுவினரால் அறுதியிட்டு நிறுவ இயலவில்லை. மொழிநூல் சொன்னூல்  முதலிய கற்பாருக்கும் ஆய்வு செய்வார்க்கும் இவர்களின் ஆய்வுகள்  இன்றியமையதனவாகும்.

நாம் இதுவரை சில சொற்களைத் தாம் இங்கு ஆய்வு செய்துள்ளோம். அவை சொற்பமே. அதாவது கொஞ்ச நேரத்தில் சொல்லியோ படித்தோ முடிக்கக்கூடிய தொகையின. ஆகவே சொற்பம் ( சொல்+பு+ அம்)..

அற்பத் தொகையின என்றும் சொல்லலாம்.   அதாவது ஆங்கிலத்தில் negligible.  அல்+பு+அம் = அற்பம்.  தன்மையிலும் தொகையிலும் குறிப்பிடத் தக்கவை அல்லாதவை.

சமஸ்கிருதம் நன்கு செய்து திருத்தப்பட்ட மொழி.  பல ஆய்வாளார்கள் முயன்று முடித்துவைத்த மொழி.  அதன் பெயரே அதைத்  தெளிவிக்கும்.

சமஸ்கிருதச்  சொல்லமைப்பு  தமிழ் நாட்டிலும் கேரளாவிலும் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகட்கு முன்னும் பின்னுமாய் நன்கு நடைபெற்றன. பல சொற்கள் அமைக்கப்பட்டன. பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரும்  இதனை விவரித்துள்ளார்.

கமில் சுவலாபெல் கணக்கிட்டபடி  ருக்கு வேதத்தில் 800 தமிழ்ச் சொற்கள் உள்ளன.  அவர் ஆய்வின்பின் வேறு சிலரும்  சில கண்டுள்ளனர்.

சங்கதத்தில் தமிழ்.

You may also like:

வாத்தியம்





சாய்த்தலும் ஆற்றலும் 








பர என்ற அடிச்சொல்லில்.....

பர  என்ற  அடிச்சொல்லில் திரிந்த சொற்கள் சிலவற்றை முன் இடுகைகளில் கண்டு மகிழ்ந்தாலும் . இன்னும் பல உள்ளன. அவற்றைப் பற்றி நேரம் கிட்டுங்கால் கண்டு இன்புறலாம்.

இப்போது சில,முன் கூறியவை, பொழிப்பாக:

பர > பரவை   பரந்தது:    கடல்.
பர > பரமன்   பரந்தது:    கடவுள்.
பர > பரயன் >பரையன் > பறையன்
               ஐவகை நிலங்களிலும் பரந்து காணப்படுவோன்.
பர > பராக்கு  கவனம் பரவ நிற்றல்.

பர > பற      ஓரிடத்தினினின்று  இன்னோர் இடத்துக்கு வானிற்
போதல்.

பர > பரன்   எங்கும் பரந்திருப்போன்.

பர > பார் :  பரக்க நோக்குதல்.

பர > பார்  (பரந்த இப்பூமி ).

பர  > பார் >  பாரித்தல்    பரவுதல் .

பர > பார்ப்பு:  பார்த்துக்கொள்ளவேண்டிய பருவத்தின.  குஞ்சுகள்.

பர > பார் > பார்ப்பான்.  கோயிற்காரியம் பார்ப்பவன்.(வேறு பொருளும்
       கூறுவர் ). அரசின் பார்வை பெற்றோன் .

பர > பரயன் > பரையன் > பறையன்.
       ஐந்து நிலங்களிலும் பரந்து காணப்படுவோர்.  செய்தி பரப்புவோர்.

பர > பறை > பறைதல் : சொல்லுதல்  ( செய்தி பரப்பு )

பர > பரை > பறை:  அடித்துச் செய்தி பரப்பும் கருவி.

இவை அனைத்தையும் அவ்வப்போது தொட்டு மேலும் ஆய்வோம்.

இவற்றுள் "பரவு , பரப்பு" என்னும் கருத்துக்கள் எந்த அளவுக்குத் தெளிந்து காணப்படுகிறது ?


 



ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

பராக்கு ! ‍ கவன ஈர்ப்பு



பராக்கு என்பது ஒரு கவன ஈர்ப்புச் சொல். பராக்கு என்று அணித்தலைவன்
கத்தினால் மறவர்கள் கவன நிலைக்கு வந்துவிடவேன்டும்.

பர > பரத்தல்.  ஓரிட‌த்திலிருந்து  பரவுதல்.
பர > பார் :  முதனிலை திரிந்து தொழிற்பெயர் ஆனது. குறிப்பிட்ட இடத்தை நோக்காமல் பரக்கக் கண்ணுறுதல்.  பார்த்தல்
Compare difference between Look and See in English.  Also tengok, pandang, nampak in Malay.
"Attention!"  in Malay is "Sedia"  as drill command.

பர + ஆக்கு : >  பராக்கு > பராக் .    இங்கு ஆக்கு என்பது முதனிலைத் தொழிற்பெயர். பரவலாகப் பார்வை செலுத்து என்பது பொருள்.