சனி, 3 செப்டம்பர், 2016

உதிரம்

சொல்லமைப்பு:உதரம் ‍  உதிரம்

இங்கு குறித்த இரு சொற்களில் உதிரம் என்ற சொல்லை முதலில் எடுத்துக்கொள்வோம்.

உடலில் எப்பகுதியில் வெட்டு, கீறல் முதலியன ஏற்பட்டாலும் , இரத்தம் வருகிறது.  அரத்தம் என்பதே சரியான சொல் என்பதும்,  அர் என்பது
சிவப்பு நிறம் குறிப்பது என்பதும்,  அர்+அத்து+அம் = அரத்தம், இதுபின் ரத்தம் என்று தலையிழந்து, பின் ரகரத்தில் சொல் தொடங்கக் கூடாது என்பதால்
இகரம் சேர்த்து இரத்தம் ஆனது என்பதும்  நமக்கு முந்திய ஆய்வாளரால் நிறுவப்பட்ட ஒன்றாம்.

அரத்தம்   சொட்டும்,  வடியும்  அல்லது உதிரும் தன்மை உடையது. அதனால் அது உதிர்+அம் = உதிரம் எனப்பட்டதென்பது  அறிதற்குரியது.

போரில் இ/அரத்தம் அல்லது உதிரம் சிந்தியோருக்கு  மன்னர்களால் வழங்கப்  பட்ட நிலம்  உதிரப்  பட்டி  எனப்பட்டது  காண்க.

அரத்தம் =  குருதி எனவும் படும்.

உதரம் என்பது வயிறு. இதை அடுத்துக் காண்போம்.


கேடிகள்

பேச்சுத் தமிழில் மிகுதியும் வழங்கும் ஒரு சொல் கேடி என்பதாகும்.
கேடி என்ற சொல்லுடன் ஒருவனின் பெயரையும் இணைத்தும் குறிப்பதுண்டு. சிங்கப்பூரில் பெயர்பெற்ற கேடிகள் யாரும் இருப்பதாக நாம்
கேள்விப்படுவதில்லை. மலேசிய நகரங்களில் உள்ளனர் என்பது பலரும்
அறிந்ததே. பிற நாடுகளில் மாஃபியா என்னும் பெரிய கேடிகள் இருப்பதாகத் தெரிகிறது.

கேடி என்ற சொல் தமிழா என்று முன்னர் ஒருவர் கேட்டதுண்டு. சுருக்கமாகச் சொல்வோம்/

கேடு + இ =  கேடி   கேடு செய்வோன் என்பது பொருள்.

முன்  அஞ்சடிக்காரன் என்று ஒரு வழக்கு இருந்தது.  கடைவீடுகளுக்கு வெளியே ஐந்து அடி அகலமுள்ள நடை இருக்கும். வெயில் மழை படாமல் இவற்றினூடே நடந்து செல்லும் வசதி இருக்கும்.  இவ்விடங்களில் படுத்து உறங்கி  வீட்டுக்காரர்கள் தரும் உணவை
உண்டு வாழ்ந்தவர்கள் இப்பெயரால் அழைக்கப்பட்டனர்.

முன் ஒரு தமிழன் ஒரு மலாய்க் குடும்பத்தின் வீட்டின் அஞ்சடியில்
இரவில் படுத்துறங்கிக் காலங்கழித்து வந்தான்/ அந்த வீட்டுத் தவழும்
குழந்தை அதன் தாய் அறியாமல் வெளியில் வந்து தூங்கிக் கொண்டிருந்த‌
அவனைத்  தட்டிற்று.  அவன் அதை ஒரு கம்பால் அடித்துக் கொன்றான்.. பாவம், ஒரு பெரிய துயர நிகழ்வாகிவிட்டது,  இப்போது
அஞ்சடிக்காரர்கள் யாரையும் காண முடியவில்லை.

இவர்கள் கேடிகள் அல்லர்; ஆனால் சிலர் பித்தர்கள் என்று தோன்றுகிறது.

வெள்ளி, 2 செப்டம்பர், 2016

Narayana and Water, நீராயினன்

நாராயணன்

நீராயினன் என்பதே பிற்காலத்தில் நாராயணன், நாரா என்று மாற்றம் பெற்றதென்பதை இணையத்தில் எழுதி வெளியிட்டிருந்தோம்.  இது சில‌
ஆண்டுகளின் முன்.  இது இங்கும் பதிவு பெற்றது.

ஆயினான் என்பது ஆயணா.

இது பிறரால் இங்கு புகுந்து அழிக்கப்பட்டுள்ளது.  இதை மீண்டும் பதிவு
செய்கிறோம்,

மேலும் புதிய இடுகையும் கீழே குறிக்கப்பட்டுள்ளது.

குறிப்புகள் :

பரந்தாமன்     https://sivamaalaa.blogspot.sg/2016/05/blog-post_7.HTML

நீராயினன்  >  நாராயணன்

மனு  Part 1  Ch  1  :  10. The waters are called narah, (for) the waters are, indeed, the offspring of Nara; as they were his first residence (ayana), he thence is named Narayana. Translated by George Buhler.  
If you have a copy of the old post, you may kindly transmit it to us.