பேச்சுத் தமிழில் மிகுதியும் வழங்கும் ஒரு சொல் கேடி என்பதாகும்.
கேடி என்ற சொல்லுடன் ஒருவனின் பெயரையும் இணைத்தும் குறிப்பதுண்டு. சிங்கப்பூரில் பெயர்பெற்ற கேடிகள் யாரும் இருப்பதாக நாம்
கேள்விப்படுவதில்லை. மலேசிய நகரங்களில் உள்ளனர் என்பது பலரும்
அறிந்ததே. பிற நாடுகளில் மாஃபியா என்னும் பெரிய கேடிகள் இருப்பதாகத் தெரிகிறது.
கேடி என்ற சொல் தமிழா என்று முன்னர் ஒருவர் கேட்டதுண்டு. சுருக்கமாகச் சொல்வோம்/
கேடு + இ = கேடி கேடு செய்வோன் என்பது பொருள்.
முன் அஞ்சடிக்காரன் என்று ஒரு வழக்கு இருந்தது. கடைவீடுகளுக்கு வெளியே ஐந்து அடி அகலமுள்ள நடை இருக்கும். வெயில் மழை படாமல் இவற்றினூடே நடந்து செல்லும் வசதி இருக்கும். இவ்விடங்களில் படுத்து உறங்கி வீட்டுக்காரர்கள் தரும் உணவை
உண்டு வாழ்ந்தவர்கள் இப்பெயரால் அழைக்கப்பட்டனர்.
முன் ஒரு தமிழன் ஒரு மலாய்க் குடும்பத்தின் வீட்டின் அஞ்சடியில்
இரவில் படுத்துறங்கிக் காலங்கழித்து வந்தான்/ அந்த வீட்டுத் தவழும்
குழந்தை அதன் தாய் அறியாமல் வெளியில் வந்து தூங்கிக் கொண்டிருந்த
அவனைத் தட்டிற்று. அவன் அதை ஒரு கம்பால் அடித்துக் கொன்றான்.. பாவம், ஒரு பெரிய துயர நிகழ்வாகிவிட்டது, இப்போது
அஞ்சடிக்காரர்கள் யாரையும் காண முடியவில்லை.
இவர்கள் கேடிகள் அல்லர்; ஆனால் சிலர் பித்தர்கள் என்று தோன்றுகிறது.