திங்கள், 29 ஆகஸ்ட், 2016

Why this rejection?

Well, suddenly,  my thumb drives are rejected by the computer:


குரலினிது செவியடையச்
செவிப்பறைகள் மறுக்குமோ
விரற்சொருகி கணினிபுக‌
வேறிதென்று வெறுக்குமோ
தரும்நறவு மலர்களுமே
வண்டிணைதல் ஒதுக்குமோ
கருமுகிலும் மழைபொழிதல்
காலமிது சிதைக்குமோ

A trojan virus sent by someone to this site was last night blocked by anti-virus.
However it has done a certain damage.

விரற்சொருகி  a thumb drive

\

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

"காக்காய்ப் பொன்"

உண்மையான் பொன் அல்லது தங்கத்தைத்தான் நீங்கள் பாதுகாத்து
வைப்பீர்கள்.  ஆகவே அது காக்கும் பொன்.

போலிப் பொன்னும் உண்டு.  அதை யாரும் பெரிய கவனத்துடன் காப்பது
இல்லை. இவை காக்காத பொன்  அல்லது காக்காப் பொன்.

இத்தொடர் பின் திரிந்து "காக்காய்ப் பொன்" ஆயிற்று.

இதற்கும் காக்கைக்கும் தொடர்பு இல்லை.   கருத்துக் போனாலும் போகாவிட்டாலும்  காக்காப்  பொன் காக்காத பொன்தான் .

காதகன்


காதகன் என்ற சொல்லைக் கேட்டால் அது ஏதோ காதலுடன்  தொடர்புடையது போல அன்றோ தோன்றுகிறது?  காதகன் எனின்
கொலையாளி என்று பொருள்.

கொலை செய்தவர்களை உடனடியாகக் காவலில் வைக்கவேண்டியது மன்னர்காலத்திலும் இப்போதும் நடைமுறையிலுள்ள கட்டளை ஆகும்.
மிகக் கொடிய குற்றம்.   ஐம்பொருங் குற்றங்களில் ஒன்றாகும் இது.

எனவே காதகனுக்கும் காதலுக்கும் தொடர்பில்லை.

கா ‍  காவலில் வைக்க;

தகன்  :  உடன் தகுதி பெறுபவன்.

வேறு காரணங்கள் எவையும் தேவையில்லை.

தகன் : தகு+ அன்.

பெண்பால் :  காதகி.

கொலை ஏதும் செய்யாதவனையும்  காதகன் என்பதுண்டு. இது   ஒரு
கொலை செய்தவனோடு ஒப்பாக வைத்துப் பேசுவது. பொருள் விரிப்பு
ஆகும்.