ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

"காக்காய்ப் பொன்"

உண்மையான் பொன் அல்லது தங்கத்தைத்தான் நீங்கள் பாதுகாத்து
வைப்பீர்கள்.  ஆகவே அது காக்கும் பொன்.

போலிப் பொன்னும் உண்டு.  அதை யாரும் பெரிய கவனத்துடன் காப்பது
இல்லை. இவை காக்காத பொன்  அல்லது காக்காப் பொன்.

இத்தொடர் பின் திரிந்து "காக்காய்ப் பொன்" ஆயிற்று.

இதற்கும் காக்கைக்கும் தொடர்பு இல்லை.   கருத்துக் போனாலும் போகாவிட்டாலும்  காக்காப்  பொன் காக்காத பொன்தான் .

காதகன்


காதகன் என்ற சொல்லைக் கேட்டால் அது ஏதோ காதலுடன்  தொடர்புடையது போல அன்றோ தோன்றுகிறது?  காதகன் எனின்
கொலையாளி என்று பொருள்.

கொலை செய்தவர்களை உடனடியாகக் காவலில் வைக்கவேண்டியது மன்னர்காலத்திலும் இப்போதும் நடைமுறையிலுள்ள கட்டளை ஆகும்.
மிகக் கொடிய குற்றம்.   ஐம்பொருங் குற்றங்களில் ஒன்றாகும் இது.

எனவே காதகனுக்கும் காதலுக்கும் தொடர்பில்லை.

கா ‍  காவலில் வைக்க;

தகன்  :  உடன் தகுதி பெறுபவன்.

வேறு காரணங்கள் எவையும் தேவையில்லை.

தகன் : தகு+ அன்.

பெண்பால் :  காதகி.

கொலை ஏதும் செய்யாதவனையும்  காதகன் என்பதுண்டு. இது   ஒரு
கொலை செய்தவனோடு ஒப்பாக வைத்துப் பேசுவது. பொருள் விரிப்பு
ஆகும்.

கருவி -- சொல்லும் அடிச்சொல்லும்

.

வி என்ற இறுதிநிலையைப் பார்த்தாலே கருவி என்னும் சொல்லில்  வி என்பது ‍விகுதி என்று நன்கு தெரிகிறது.  சொல்லின் பகுதி கரு என்பதே.

கரு என்ற அடிச்சொல்லின் அனைத்துப் பொருள்களும் கிடைத்துவிடவில்லை.  கருத்தல் அதாவது கரு நிறமாதல் என்பது கிட்டியுள்ளது.  ஆனால் கருவிக்கு அடியான கருத்தல் கிடைக்கவில்லை.

கருவியிலிருந்து கரு என்றால் செய் என்பது பொருளென்று புரிகிறது.
ஆனால் இப்பொருளில் சொல் வழங்கிய எந்த  நூலும் கிடைக்கவில்லை.

கருமம் என்றால் செய்கை.ஆனால் கரு >  செய் என்ற பொருள் தொலைந்துவிட்டது,

இதை மேலும் ஆய்வு செய்வோம், இதற்கிடையில் நீங்களும் சிந்திக்கவும்.