நான் அழைத்தேன் ஒரு நிகழ்ச்சிக்கு;
அவன் சிரித்துக்கொண்டான்
ஆனால் அவன் வரவில்லை; இப்போது
இரண்டு மூன்று வேலைகள்
எனக்காகக் காத்துகொண்டிருப்பவை ;
அவற்றை நான் நாளைத் தொடங்கவிருக்கிறேன்;
இன்று அவன் அழைக்கின்றான்
ஆனால் என் தோழி மூலமாக;
நேரடியாகக் கூப்பிடத்
தொடர்பு கிடைக்கவில்லை .என்கிறானாம்
அவனே இவன்
இவனுக்காக என் வேலைகளை மாற்றிவைக்க
என்னால் இயல வில்லை ;
காரணம் இது மற்றவர்கள் தொடர்புடையது.
மூஞ்சியை இவன் இழுத்துக்கொண்டாலும்
நான்செய்வனவற்றை எப்போதும்
தள்ளி வைத்துக் கொண்டிருக்க முடியாதே
பிறர்க்கும் வேலை இருக்கும் என்பதை
இவன் உணராதவன்....
இவன் வேலை மட்டும்
இவன் விழித்திரையில்
இவனுக்கு வெளிச்சமாய்த் தெரிகிறது.
அவன் சிரித்துக்கொண்டான்
ஆனால் அவன் வரவில்லை; இப்போது
இரண்டு மூன்று வேலைகள்
எனக்காகக் காத்துகொண்டிருப்பவை ;
அவற்றை நான் நாளைத் தொடங்கவிருக்கிறேன்;
இன்று அவன் அழைக்கின்றான்
ஆனால் என் தோழி மூலமாக;
நேரடியாகக் கூப்பிடத்
தொடர்பு கிடைக்கவில்லை .என்கிறானாம்
அவனே இவன்
இவனுக்காக என் வேலைகளை மாற்றிவைக்க
என்னால் இயல வில்லை ;
காரணம் இது மற்றவர்கள் தொடர்புடையது.
மூஞ்சியை இவன் இழுத்துக்கொண்டாலும்
நான்செய்வனவற்றை எப்போதும்
தள்ளி வைத்துக் கொண்டிருக்க முடியாதே
பிறர்க்கும் வேலை இருக்கும் என்பதை
இவன் உணராதவன்....
இவன் வேலை மட்டும்
இவன் விழித்திரையில்
இவனுக்கு வெளிச்சமாய்த் தெரிகிறது.