கவை என்பதன் அடிப்படைப் பொருள் பிரிவு என்பது. ஒரு மரக்கொம்பு, இரண்டாகப் பிரிந்திருப்பது, நண்டுக்கால் கொடுக்கு இரண்டாகப் பிரிந்திருப்பது, ஒரு இரும்புக்கருவி இறுதியில் இரண்டாகப் பிரிந்து பயன்படுவது ..... எனப் பல. இந்தக் கவை, இரண்டாகிப் பிற பொருளை
பற்றி எடுக்க உதவுகிறது. அல்லது ஒன்றாக வருங்கால் எதையாவது பிடிக்க அல்லது "கடிக்க"ப் பயன்படுகிறது.
மனத்தில் ஏதேனும் துன்பமிருந்து, என்ன செய்வது என்ற போராட்டமிருந்தால் அதை நாம் கவலை என்கிறோம். மனம் இரண்டு பட்டுவிட்டது என்றும் சொல்வர். கவை என்ற சொல்லிலிருந்து தொடர்புடைய பிற அமைந்த விதம் காண்போம்.
கவ > கவர் > கவர்தல்
கவ > கவை ( க வ + ஐ )
கவ > கவடு > கபடு > கபடம் வ > ப திரிபு .
கவ > கவல் > கவல்தல்
கவ > கவல் > கவலை . ஐ விகுதி .
கவ > கவல் > கவலி > கவனி > கவனித்தல் ல > ன திரிபு.
கவல்தலின் காரணமாகத் தோன்றுவது கவனம்.
கவலைப் படாதவனுக்குக் கவனம் இல்லை .
விளைவுகள் பற்றியதே கவலை .(கவலை காரணமாகத் தோன்றுவது கவனம் .) கவல்தல் = கவலை .
கவனி > கவனம் .
பிற மொழிகட்கும் சில கொடை செய்யப்பட்டன. அவை பின் பேசப்படும்,
kavanam not gavanam,
இதனைப் அறிஞர் பிறரும் கூறியுள்ளனர் அறிந்து இன்புறுக .