இப்போது சங்கிலி என்ற சொல்ல்லைக் கவனிப்போம்.
மிகப் பழங்காலத்து மக்கள் சங்குகளை நூலிலோ கயிற்றிலோ கோத்துக் கழுத்தில் அணிந்துகொண்டனர். பின்பு சங்கு கோக்கும் பழக்கம் போய், சற்று முன்னேறிச் சங்கு இல்லாத பிற கழுத்தணிகள் வந்தன. இவற்றுக்கும் சங்கணி என்றே பெயர் வைத்துக்கொண் டிருந்திருக்கலாம். சங்கு அதில் இல்லாமையாலும் சங்கு என்ற சொல் வழக்கி லிருந்துகொண்டு சங்கை நினைவு படுத்தி உறுத்திக்கொண்டிருந்ததாலும்
வேறு பெயரிட முந்தாமல், "சங்கிலி" என்றே குறித்தனர்.
சங்கு +இல் +இ = சங்கிலி. சங்கு இல்லாத அணி. சங்கு இல்லாமற் போன அணி கண்டும் சிலர் கவலை கொண்டிருக்கலாம் மஞ்சட் கயிற்றில் மாட்டாத தாலி கண்டு சிலர் கவல்வது போலும்.
கோயில் தொழுகை நடைமுறைகளில் சங்கிற்கு இன்றும் பெரும் பங்கு
இருக்கிறது. பெருமிதத்துக்கு உரிய நேரங்களில் சங்கு ஊதுவதும், மணி காட்ட சங்கு ஊதுவதும் வழக்கம். சங்கில் பல, பெரியன, சிறியன, நடுத்தரத்தன என்று வேறுபாடு காணலாம். சங்கிலிருந்து எழும் நாதம் சங்க நாதம்.
தமிழர் முன் அறிந்தது நாவிலிருந்து எழும் நாதம். (நா> நாதம் ) தம் நாவில் எழுவது, பிற பின் வந்தன. வாயிலிருந்து வருவது வாயு ஆனதுபோல் நாவில் எழுவது நாதம். இவற்றுள் வாய், நா என்பன
பின் தம் பொருள்குன்றின.
தங்கு என்பதினின்று சங்கு என்பது வந்தது, த > ச திரிபு. ஓர் உயிர் தங்கும் கூடு.
இப்போது சங்கிலி யாது என்று புரிந்துகொண்டிருக்கலாம்.