செவ்வாய், 21 ஜூன், 2016

அக்கிரகாரம்.

பின்புலக் கருத்துக்கள் :


இச்சொல் சமஸ்கிருதத்துக்கு உரியதென்ப.  இது தமிழ்ச்சொல் என்று நிலைநாட்டுவதற்காக இதை எழுதவில்லை. இச்சொல்லில் தமிழ் மூலங்கள் உண்டா என்று கண்டறிய முற்படுவதே நோக்கமாகும்.

இந்தச் சமயத் தொண்டர்களின்  குடியிருப்புகள் அமைக்கப்பட்ட காலை
பெரும்பாலும் திருமணமாகாத பூசாரிகளே அமர்த்தப்பட்டதுபோல் தெரிகிறது.   அவர்கள் தங்குவதற்கு  வேண்டிய வசதிகள் உள்ள இடங்களே  அமைக்கப்பட்டன. இவை சிறிய இடங்களென்று தெரிகிறது. ஆனால் பூசாரிகள் எல்லாம் ஒரு வட்டத்துக்குள் அடக்கப்பட்டனர். அப்போதிருந்த பாதுகாப்புகள் மேம்பாடு அடையாமையும், மக்களுடன் சேர்ந்து வாழப் பிறர் ஒத்துக்கொள்ளாமையும் காரணங்களாகவிருக்கலாம்.  சொல் அமைந்த காலம் ஆய்வுக்குரியது என்றாலும் ஆய்வதற்குரிய சான்றுகள் மிகக் குறைவே எனலாம்.

அக்கிரகாரம். -  சொல்லாமைப்பு

அஃகுதல் ‍   :   குறைவு. சுருக்கம்.

இரு +அகம் ‍     இரகம்.   :  இருக்கும் வீடு

ஆரம் :   சுற்று, ஒரு மாலை போல சுற்றான இடம்.

அஃகு+ இரு + அக +  ஆரம் =   அஃகிரகாரம் ;  அக்கிரகாரம்.

குறைவான  குடி  இருக்கும் வீடுகள்  அமைந்த  சுற்றிடம்

இதை  அக்ர  agricola    என்ற  இலத்தீன் மொழிச் சொல்லுடன் தொடர்பு படுத்தி
உழவு செய்தோர் எனலாம்.  இவர்கள்   உழவில் ஈடுபட்ட தகவல் ஏதும்  இல்லை.

இவர்கள் முழு நேரம் பூசாரிகள் ஆனதால்  ஓரிடத்தில் இருந்தனர்.


அங்கு + இரு + கு + ஆரம்  =  அங்கிரகாரம்,   அங்கு அல்லது கோயிலுக்கு அருகில் அமைந்த குடியிருப்பு.  புணர்ச்சியில்,  அங்கு என்பது அக்கு என வந்தது,  இரும்பு + பாதை > இருப்புப்பாதை என்பது போலும் வலித்தல் விகாரம். கு என்ற சேர்விடக் குறிப்பு உருபு இங்கு இடைநிலையாக வந்தது.   ஆரம் _ கோயிலைச் சுற்றி அமைந்த குடியிருப்பு.  இவ்வாறு சில வகைகளில் விளக்கம் பெறவல்ல சொல் இதுவாம்.










திங்கள், 20 ஜூன், 2016

சுட்டடிச் சொற்கள் : இயங்கு, அவை.

அவை
 == = = =

ஒருவன் இன்னொருவனைக் கேட்கிறான்.

கூட்டத்தை எங்கே வைத்திருக்கிறார்கள்?
=
அங்கே,  அதோ அங்கே, எப்போதும் கூடுகிற இடத்தில் வைத்திருக்கிறார்கள்.

அ ‍=   அங்கே.  இது சுட்டுச் சொல்.

வை=  வைத்தல். (அ + வை)

அது  "அவை"   (அ + வை) ஆகிறது.  அங்கு சிறப்பான வேலைகளைச் செய்வோர் கூடியிருக்கிறார்கள்.

அவை என்பது சவை ஆனது.   அகரத்தின்முன் சகர ஒற்று ஏறியது.

"மேலாடை இன்றிச் சவை புகுந்தால் மேதினியில்..."

சவை>  சபை   வ> ப திரிபு. இத்தகு     திரிபுகள் மிகப்பல.


இப்படி மெய் எழுத்துக்கள் முன் நின்று திரிந்தவற்றை இங்கு அவ்வப்போது
காட்டியிருக்கிறோமே, மறந்திருக்கமாட்டீர்களே! மெய் எழுத்து முன் ஏறிநின்று  சொல் திரிந்தால். சிலபொழுதில் பொருளும் சற்று மாறும். சில வேளைகளில் பொருள் மாறுவதில்லை. பொருள் திரிபுக்கோர் எடுத்துக்காட்டாகச் சண்டை என்ற சொல் உள்ளது. பழைய இடுகைகளிற்
காண்க.

அடுத்து: இயங்கு.
================

இங்கிருப்பது இங்கேயே இருந்துவிடுமாயின்  அதில் என்ன இயக்கம் இருக்கிறது. இங்கிருப்பது அங்கு போகவேண்டும். அல்லது  சுற்றி வரவேண்டும்,  அதுவன்றோ இயக்கம் என்பது!

இடப் பெயர்ச்சியும்  இருந்தவிடத்திலேயே தன்னைத்தான் சுற்றிக்கொள்ளலும்  (சுழற்சி )   மற்றும் சுழற்சியுடன் கூடிய இடப்பெயர்ச்சியும்  இயக்கத்தில்  அடங்கும். நேர்கோடாகத் தரை நகர்வும்  மேலெழுகையும்  அடங்கும்.

Horizontal and vertical as well as circular --  all forms of movements are included.

இ =  இங்கு இருப்பது;
அங்கு =  அங்கு போகிறது.

இறுதியில் உள்ள கு என்பதற்கும் பொருள் உள்ளது.  அது பின்பு காண்போம்.

இ+ அங்கு =  இயங்கு.  இதில் யகர உடம்படு மெய் வந்தது.

இ + அ + திறம் >  இயந்திறம்  -   இயந்திரம்.

ஆறு + கரை =  ஆற்றங்கரை என்பதில் அம் வந்தது போலவேதான்.   அங்கு இது  சாரியை.

இ+ அ+ அம் +  திறம்  ( சுட்டு , சுட்டு ,  இடைநிலை, பின்னொட்டு )
இ + அ + ம்+ திறம்  ( ஓர் அகரம் கெட்டது  )
இ + ய் + அம் + திரம்  (யகர உடம்படுமெய் )  (  திறம் -  திரம்  திரிபு )
இயந்திரம்.

இயந்திரம்   - எந்திரம்.   இ > எ திரிபு.

தமிழை ஆய்வு செய்யச் செய்ய அது உங்களுடன் பேசத் தொடங்கிவிடும்.
காரணம் அது மூலமொழி ஆனதே.

Ignore any question marks appearing on your screen.

ஞாயிறு, 19 ஜூன், 2016

நவ்யா நய்யா names.

நல்   -  இது  நன்மை  என்று பொருள்படும் அடிச்சொல்.

நல்  என்பது ந  என்று மட்டும் வரின் அது கடைக்குறை எனப்படும்.

ந என்பது பின் பெயர்களுக்கு முன்  ஒரு முன்னொட்டாக வரும் .

ந + பின்னை  = நப்பின்னை   ( நப்பின்னையார் )

ந + செள்ளை  = நச்செள்ளை   (  நச்செள்ளையார் )

பழமை   காரணமாக    பொருள் கேடுறுமாதலின் ,  அது பழுது எனப்பட்டது.   இதற்கு மாறானது   நல்லது, பழுதற்றது.  பழுதில்லாதது  பழையதல்லாதது   ஆகவே புதியது.  

எனவே  நல்லது என்பதில் இயற்கையாகவே புதுமைக் கருத்துத் தோன்றியது.

நல்  >  ந >   ந +  அம்  =  நவம்  .   நல்லது.   புதுமை. :

ந +  அம்  =  நயம் . (நன்று )

ஆய்  >    ஆயா  >  ஆயாள் (  அம்மா )
ஆய்  >  ஆயி .

ஆயா என்பது முதற்குறைந்து   - யா   ஆகும்.

ஆயாவை  யா  என்றும் விளித்தல்  உண்டு.

ந +  யா =   நவ்யா    :   நல்ல  அம்மா ,   நல்ல ஆயா ,  புதிய  பெண் .  புதுமைப் பெண் .

ந + யா  =  நய்யா .  அதே பொருள் .

வகர யகர உடம்படு மெய்கள் .

நவ்யா   நய்யா என்ற பெயர்கள் வழங்கும்  -  சில இடங்களில் .