திங்கள், 30 மே, 2016

கூடு, கூட்டு, பெருக்கு

கூடு :

கூடு என்ற சொல்லின் இன்னொரு பொருளை நோக்குவோம்நம் உடலில்கண்,காதுமூக்குவாய் என்ற உறுப்புகளும் உள்ளுறுப்புகளும் கூடி அமைந்துள்ளனஆகவேஉடலையும் ஒரு கூடு எனலாம்.கூடுதல் ஒன்று சேர்தல்.மேல்தோலானதுபொருத்துவாய் தெரியாதபடி ஒன்றாய்க் கூடியுள்ளதுஇதனாலும் உடலைக் கூடு என்பது பொருத்தமாகிறது.ஆன்மாவை உள்பொதிந்து வைத்திருக்கும் இவ்வுடல்,ஆன்மாவிற்கு ஒரு கூடு ஆகிறது.கூட்டுக்குள் குருவி இருப்பதுபோலஉடலுக்குள் ஆன்மா உள்ளது.ஒப்பீட்டினாலும் ஏனை
உடலியல் அமைப்பினாலும் இது பொருத்தமாகவே இருக்கிறது.தேய்ந்து அழிதலின் தேகமாயது (தே தேய்கு தேய்கம் தேகம்போலுமேகூடு என்பதும் காரணப் பெயர்.
கூடுவிட்டு ஆவிதான் போனபின் ஆரே அனுபவிப்பார்பாவிகாள் அந்தப் பணம் என்ற செய்யுளில் கூடு எனற்பாலது பொருந்தவே இடம்பிடித்துள்ளது.

கூட்டுவதும் பெருக்குவதும்

தெருவை யாராவது பெருக்கும்போது நீங்கள் கவனித்திருப்பீர்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடக்கும் காகிதம், சருகு, எறியப்பட்ட பிற என யாவற்றையும் கூட்டுமிலாரால் கூட்டி ஒன்று சேர்த்ததும் அவை "பெருகி" விடுகின்றன. அதாவது,எல்லாம் அங்கு கிடந்த குப்பைதான் - சேர்த்து நோக்க, அதிகமாகிவிடுகிறது. எனவே பெருக்குதல் பொருத்தமான பதம். கூட்டுதல் என்பதும் பொருத்தமானதே. இதில் ஒரு மீனைப் பத்து மீன்களாய் ஆக்கிக் காட்டினதுபோல மாயவித்தை எதுவும் இல்லை. என்றாலும் கூட்டுதல் பெருக்குதல் என்பன‌ பொருத்தமே.

கூடுதல், பெருகுதல் - தன்வினை.
கூட்டுதல் - பெருக்குதல் - பிறவினை.


கூடு, கூட்டு, பெருக்கு  

ஞாயிறு, 29 மே, 2016

குடு - அடிச்சொல் (குடும்பம் குடி )



kutu -   act of humans joining or things joined or tied together to make another object

குடு > கூடு > கூட்டம்.  (அம்)
குடு > கூடு > கூடை.
குடு > குடம்பை
குடு > குடுமி  hair joined together
குடு > குடலை
குடு > குடி  ( இ )
குடு > குடி > குடிமை
குடு   >  குடும்பம்

You may make an analysis of these terms.

அம்மிக்கும் ஆபத்து?

மின்னரைப்பான்   (mixie or mixer-blender )  இருப்பதனால் இப்போது  அம்மியைப் பற்றி யாரும்  நினைப்பதில்லை .

அம்  -   அம்மு .
அம்  -  அமுக்கு.

இம் என்று ஒலி  எழுப்பும்போதே,  இரண்டு இதழ்களும் ஒன்றை ஒன்று தொட்டு அமுக்கியே  ம்  என்ற ஒலி  எழுகிறது.   எனவே,   ம் >  அம்  <  அம்மு -  அமுக்கு  என்பன மிக்கப் பொருத்தமாகவே  அமைந்த சொற்கள் ஆகும்.

அம்முதல் -   குழவியால்  அம்மியில்  அரைக்கும் பொருளை வைத்து அமுக்கி   அரைத்தல்   ஆகும் .

அம்மி என்பது தொழிற்பெயர்  ஆகும்.  அரைகல்லைக்  குறிக்கும்.

நாளடைவில்  அம்மி  மறக்கப்பட மாட்டாது .  காரணம்  "அம்மி மிதித்து அருந்ததி  பார்"  :க்கும் மரபு  இருக்கிறதன்றோ.  !

அதன்மூலம்  அம்மி வாழ்கிறது.

சுற்றுமசி  (mixie or mixer-blender ) வந்ததனால்  அம்மிக்கு  ஆபத்து   இல்லை