அவசரம் என்பது தமிழில் பேச்சு வழக்கில் உள்ள சொல்தான். இது தமிழன்று என்று கொள்ளப்படுகின்றது. இந்தச் சொல் எப்படி அமைந்தது என்று பார்க்கலாம். இதன் பொருள் சுருக்கு ( சுருக்கா(க) ), விரைவு என்பதாகும்.
இது ஒரு கூட்டுச் சொல். அவம் என்பதும் சரம் என்பதும் புணர்த்தி அமைந்தது.
அவம் என்பது அவி+ அம் என்று அவித்தலில் அம் சேர்த்து அமைக்கப்பட்டு உள்ளது. ஒன்றை அவித்தல் என்பது கெடுத்தல், அழித்தல் என்றும், நீரில் இட்டுச் சூடேற்றி வேவித்தல் என்றும் பொருள்தரும்.
ஐந்தவித்தல் என்ற தொடரைப் பாருங்கள். ஐம்புல நுகர்ச்சிகளை விடுத்தல் என்று பொருள். அவித்தல் என்பது அழித்தல். வ- ழ திரிபு. அழி > அசி என்றும் மாறும். த(ன்) + து+ அம்+ அசி = தத்துவமசி என்ற புனைவும் கருதத்தக்கது.
அவம் என்பதில் அவி + அம், இதில் இகரம் கெட்டு அவம் ஆகியது. கேடு -சுருங்கக் கூறும் பொருள்.
சரம் என்பதும் இப்போது வழக்கில் உள்ள சொல்தான். பூச்சரம்.
சரவிளக்கு. சரம் - சரியாக அமைந்த வரிசை. ஒன்றன் பின் ஒன்றாக ஒழுங்குடன் வைக்கப்பட்டிருப்பது.
ஒழுங்காக ஐந்து மணிக்கு வேலைக்குப் போகவேண்டும். நான்கு மணிக்கே வந்துவிடு என்று அலுவலகம் உத்தரவிடுகிறது.
அமைந்த ஒழுங்குப்படி செல்லாமல், முன்கூட்டியே போவதென்றால், அது சரத்தின் கேடு ஆகும். வரிசைக் கேடு. எதன்பின் எது வருதல் வேண்டும் என்ற முன் அமைப்பில் ஏற்பட்ட கேடு ஆகும். ஆகவே சரக் கேடு ஆகும். சரியாக அமையாத கேடு.
ஆகவே சர அவம். சரக்கேடு. அவசரம்.
அவசர என்ற சமஸ்கிருதச் சொல் வேறு. இதற்கு
1 அவசர the dominion or sphere or department of. ..
என்று பொருள். விரைவு என்பது பொருள் அன்று என்றுதெரிகிறது , இது இருக்கட்டும் .
மற்ற சொல் அமைப்புகள்:
அவ மானம் - மானக்கேடு
அவ மரியாதை - மரியாதைக் கேடு.
அவ தூறு - கெடுதலான தூற்றுதல்.
அவத்தம் ( அவம் + து + அம் )
அவதி ( கால அவதி = காலாவதி - காலக்கெடு )
அவ மழை - உரிய நேரத்தில் வராத மழை
அவமாக்கு - கெடுத்திடு வீண் ஆக்கு
எனப் பல .