சனி, 21 மே, 2016

Coin a new word for our astrology

கணியம் என்னும் சோதிடக் கலை தமிழருடைய தன்று என்று பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை கூறுவார். அவர் இப்படிக் கூறியதற்குக் காரணம் பணபரம், ஆபோக்லீபம் முதலிய பதங்கள்  கிரேக்க மொழியினுடையவையாக இருந்தமைதான். சில அயற்சொற்களிருப்பதனாலேயே  எல்லாம் கடன் வாங்கியனவாக இருக்கும் என்ற முடிவு  ஏற்புடைத்தன்று.   ஒரு முடிவை நிலைநிறுத்த ஆதரவான  வேறு காரணங்களும்  தேவைப்படும். கோணுகோப்பிய என்ற கிரேக்கச் சொல்  கோண(ல்)  + கோப்பை என்ற தமிழ்ச்சொற்களின் இணைப்பில் உருவானதாகத் தெரியவில்லையோ? இஞ்சிவேர்  என்பது ஜிஞ்சர் வரை செல்லவில்லையா? அது நிற்க.

நிற்க  ஒரு  கலை என்றால்  அதற்கே சிறப்பாக உரிய சொற்களை உருவாக்க வேண்டியுள்ளது. சோதிடம் என்பதும் ஒரு கலை அன்றோ? இராசி என்ற சொல் பற்றாக இருக்குமிடம் என்று பொருள்படும் ராசி1 என்ற சொல்லுக்கு வழிவகுத்தது. இரு + ஆசு+ இ = இராசி ஆகிறது.  இராகு என்ற கோளின் பெயரைப் படைக்கையில்  இர் என்ற அடிச்சொல் முன் நிற்பது தெரிகிறது.   இர் >  இருள் ;  இர் + ஆகு =  இராகு.  இருளான அல்லது நிழற் கோள் என்பது பொருள்.   மதுரை என்பது மடுரை என்று ஆங்கிலத்தில் அழுத்தப் படுவதுபோல  கேடு  என்பது கேது ஆயிற்று.(a reverse corruption).  இதற்குக் காரணம் கேதுவும் ஒளி கெட்ட கோள்தான். கணியர் சிலர் 7 கோள்களையே வைத்து எதிர்காலம் கூறினர்.  சரியாகச் சொல்வதற்கு இன்னும்  இரண்டு கோள்கள் கணக்கில் வராமை கண்டவர்கள்,  அந்தக் கோள்களை வருவித்துகொண்டனர்.  ஆகவே ராகு கேது நிழற் கிரகங்கள் என்பர்.

இப்படிச் சொற்களைப் படைத்துக்கொண்டமை நோக்குங்கால், கணியம் தமிழரின் சொந்தக் கலையாகவே உறுதிப்படுகிறது.  இக்கலையில் சில மேற்பூச்சுகள் வெளிவரவாக  இருக்கக் கூடும்.

சரி,  இப்போது, ஒரு பயிற்சி செய்வோம்.

ஆடு என்பது தமிழ்ச் சொல்.  அதுகூட சமஸ்கிருதத்தில் ஆஜ என்று மாற்றமடைந்து வழங்குகிறது.

ஆடு என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் அதற்குப் பதிலாக  வேறு  ஒரு சொல் உருவாக்க வேண்டும்.   எப்படி?

ஆடு மே மே என்று கத்துகிறது.  ஆகவே மே என்பதைத் தலை எழுத்தாக்கிக் கொள்வோம்.
மே,   அப்புறம்  ஆடு என்பதில் உள்ள டு என்பதை எடுத்துக்கொள்வோம்.

மே+  டு =  மேடு ஆகிறது.

மேடு வேறு;  ஆடு வேறு ,மேடு இருக்குமிடத்தில் ஆடு  மேய்ந்தாலும்  இது மேலும் கவனிக்க வேண்டியதாகிறது.  தொடர்வோம்.

 இப்போது  அம் என்ற விகுதி சேர்ப்போம்.

மே+  டு+  அம் =  மேடம் ஆகிறது.

மேட இராசி என்பது பொருத்தமாக வந்துவிட்டது.

ஓர் எழுத்தை மாற்றினால்,.....

மேஷம் ஆக்கிவிடுவோம்.

ஆகவே ஓர் இராசிக்கு ஒரு சொல் கிடைத்துவிட்டது.

மகிழ்ச்சியாக ஆடுவோம்.  வெறும் ஆட்டை விட்ட நேரம்  மே மே என்று கத்தும்  ஆட்டைக்   கைக்கொண்டிருக்கிறோமே. அதற்காக!


edited.  will review.



வெள்ளி, 20 மே, 2016

பழக்கப்போன்மையும் பழம்பிறவியும் Deja vu and .....


நேற்றோ அதற்கு முந்தியோ நடந்தவைகளையும் அவை நடந்த இடங்களையும் நாம் நினைவு கூர்கிறோம்.  இந்த இடங்களில் நாம் உலவியது உண்மை; ஆனபடியால் அவை இப் பிறவியில் நாம் சென்ற இடங்கள்
முன்னர் நாம் சென்றிராத  இடங்களில் நாமிருக்கையில்  எப்போதோ அங்கிருந்ததாக மிக்கத் தெளிவான உறுதியான நினைவு ஏற்படுகின்றது.
உண்மையில் நாமங்கு சென்றதில்லை. எப்படி இந்தத் திறமாமான எண்ணம் உண்டாகின்றது?.

இதற்கும் உளநூலார் சில விளக்கங்களை அளிக்கிறார்கள் என்றாலும்
அது மன நிறைவு தருவதாக இல்லை..

சுவாமி விவகாநந்தரைக் கேட்டால்,  நீ முற்பிறவியில் அங்கிருந்ததற்கு அது சான்று என்பார்.

முற்பிறவி உண்டென்பதற்குப் புத்தமத அறிஞர்கள் பல ஆய்வுகளைச்
செய்து நிறுவியிருக்கின்றனர். இந் நூல்கள் ஆங்கிலத்தில் உள்ளன.

ஒருவற்கு எல்லாம் தெரிந்துவிட்டதென்று கூறுவது  மடமை ஆகும்.
ஆகவே அப்படித் தான் அனைத்தும் கண்டுவிட்டதாக எண்ணிக்கொண்டு முற்பிறவி இல்லை என்று வாதாடுவதும் தவறே.

இந்தியாவில் புத்த மதம் பயின்றவராகச்  சில மேலை ஆசிரியர்களால் கருதப்படும்  இயேசு பெருமானும்  முன் பிறவியில்  எலையஸ்  என்னும் இறைமுன்னுரைஞராய்  இருந்தார்  என்று  அவர்காலத்திலேயே  சிலர் கருதியுள்ளனர்.  Art thou Elias come again  என்று அவர் வினவப்பட்டார்.

விவிலிய நூலில் முன் பிறவிகள் பற்றிய குறிப்புகள் உள.  இவை ஆயும் நூலகளும் சில உள

இருக்கலாம் , இல்லாமலும் இருக்கலாம் என்பது அறிவுடைமை.

முற்பிறவி உண்டென்பதே எம் நூல் துருவல்களிலிருந்து யா ம்  அறிந்தது. நீங்கள் நம்பலாம், நம்பாமலும் இருக்கலாம்.  அதனால்  ஒன்றுமில்லை    இப்போது பழக்கப்போன்மை பற்றிய ஒரு கட்டுரையையும்   படித்தறிவோம். டித்தறியுங்களேன்.

https://www.psychologytoday.com/blog/ulterior-motives/201001/what-is-d-j-vu






வியாழன், 19 மே, 2016

சில் என்ற அடிச்சொல்


சில் என்ற அடிச்சொல் தமிழில் இன்னும் அறியக்கூடிய வகையில் இருக்கின்றது.

ஒரு கல்லை உடைக்கும்போது அதிலிருந்து ஒரு துண்டு பறந்துவந்து விழுந்தால்  ஒரு சில் வந்து விழுந்தது என்போம்..  இந்தச் சொல் இன்னும் வழக்கிலுள்ளது.

சில் என்பதிலிருந்து சிலாம்பு என்பது அமைகிறது.  இது சில்+ பு என்ற பகுதி  விகுதிக்கிடையில் ஆம் (அம்)   என்ற இடையீடு பெற்றது.

சில்> சில்+ ஆ,ம்+ பு =  சிலாம்பு.  

இது மீன் செதிளையும்  மரப்பொருக்கையும் குறித்தது.

இது சில் > சிலுக்கு  என்று  கு விகுதி பெற்றும் வரும். இடையில் ஒரு உகரச் சாரியை வந்தது.  மரப் பொருக்கையும்  அறுக்கும் வாளின் பல்லையும்  குறிக்கும்.    வேறு பொருள்களும் உள.

சில் > சிலும்பு என்றுமாகும். மரச் சிராம்பையும் குறிக்கும்.

சில் >  சில்லம்:    இது துண்டு என்றும் பொருள்படும்.

சில் > சில்லி என்றுமாகும். பொருள் துண்டு. பிற பொருளும் உள,

மரத்தைச் சில்லுகளாக   ( அதாவது மிக மிகச் சிறிய சில்லுகளாக
அரித்தெடுக்கும் கறையானுக்குச்  சில்லான் என்பர்.

சுள்ளான் என்ற மாதிரியில் அமைந்தது சில்லான்.


சில் > சில்லு என்றுமாம்.

சலித்தெடுக்கும்  வலைக்கண்கள் அமைந்த  கருவிக்குச் சில்லியடைஎன்பர். சல்லடை எனவும் படும்.

சில் >  சிலை.   சில்லுச் சில்லாய்   அடித்தெடுத்து   ஓர் உருவில் அமைவது.

சில் > சில்லி > சல்லி   ( உ - அ  திரிபு)     சல்லிக்கல்

செந்தமிழ் இயற்கை சிவணிய  நிலத்து வாழ்நர் இச் சில்  சொல்
மறப்பரோ?