நேற்றோ அதற்கு முந்தியோ நடந்தவைகளையும் அவை நடந்த இடங்களையும் நாம் நினைவு கூர்கிறோம். இந்த இடங்களில் நாம் உலவியது உண்மை; ஆனபடியால் அவை இப் பிறவியில் நாம் சென்ற இடங்கள்.
முன்னர்
நாம் சென்றிராத இடங்களில்
நாமிருக்கையில் எப்போதோ
அங்கிருந்ததாக மிக்கத் தெளிவான
உறுதியான நினைவு ஏற்படுகின்றது.
உண்மையில்
நாமங்கு சென்றதில்லை.
எப்படி
இந்தத் திறமாமான எண்ணம்
உண்டாகின்றது?.
இதற்கும்
உளநூலார் சில விளக்கங்களை
அளிக்கிறார்கள் என்றாலும்
அது
மன நிறைவு தருவதாக இல்லை..
சுவாமி
விவகாநந்தரைக் கேட்டால்,
நீ
முற்பிறவியில் அங்கிருந்ததற்கு
அது சான்று என்பார்.
முற்பிறவி
உண்டென்பதற்குப் புத்தமத
அறிஞர்கள் பல ஆய்வுகளைச்
செய்து
நிறுவியிருக்கின்றனர்.
இந்
நூல்கள் ஆங்கிலத்தில் உள்ளன.
ஒருவற்கு
எல்லாம் தெரிந்துவிட்டதென்று
கூறுவது மடமை ஆகும்.
ஆகவே
அப்படித் தான் அனைத்தும்
கண்டுவிட்டதாக எண்ணிக்கொண்டு
முற்பிறவி இல்லை என்று
வாதாடுவதும் தவறே.
இந்தியாவில்
புத்த மதம் பயின்றவராகச்
சில மேலை ஆசிரியர்களால்
கருதப்படும் இயேசு பெருமானும்
முன் பிறவியில் எலையஸ்
என்னும் இறைமுன்னுரைஞராய்
இருந்தார் என்று
அவர்காலத்திலேயே சிலர்
கருதியுள்ளனர்.
Art thou Elias come again என்று
அவர் வினவப்பட்டார்.
விவிலிய
நூலில் முன் பிறவிகள் பற்றிய
குறிப்புகள் உள.
இவை
ஆயும் நூலகளும் சில உள.
இருக்கலாம் ,
இல்லாமலும்
இருக்கலாம் என்பது அறிவுடைமை.
முற்பிறவி
உண்டென்பதே எம் நூல்
துருவல்களிலிருந்து யா ம் அறிந்தது.
நீங்கள்
நம்பலாம்,
நம்பாமலும்
இருக்கலாம்.
அதனால் ஒன்றுமில்லை இப்போது
பழக்கப்போன்மை பற்றிய ஒரு
கட்டுரையையும் படித்தறிவோம். டித்தறியுங்களேன்.
https://www.psychologytoday.com/blog/ulterior-motives/201001/what-is-d-j-vu