செவ்வாய், 17 மே, 2016

.A GIFT OF LOVE FOR POPE'S WORKERS

கட்டளைக் கலித்துறை


பெற்றவை முட்டைகள் பெற்றியர்  அப்பனார்   தம்முளத்தே
உற்ற மகிழ்வினில் உண்டன ரோவெனின் உண்ணவில்லை
நற்றவத் தண்ணலர்  வீட்டின் நலம்பெறு  ஊழியர்கள்
முற்றும் மிசையக் கொடுத்தனர்  மூண்ட த‌ருட்கொடையே.


அப்பனார்  :   போப்பாண்டவர்
நற்றவத்தண்ணலர்  :   அவரிடத்தே ஊழியராய் வேலைபார்க்கத்தவர்கள்; :  அது மேலைத் தவத்தினால் என்பது குறிப்பு.
மிசைய  =  உண்ண
மூண்டது :  உண்டானது

\

ஞாயிறு, 15 மே, 2016

A great act in diplomacy

சுகத்து லாந்தில் சொந்தக் கோழிகள்  இட்டமுட்டை
அகத்தி லன்பின் கொடையாய்  மேதிரு வப்பருக்கே
தகைத்த கும்முடி  அரசி  எலிசபெத்  தந்தநலம்
நிகர்த்த  அரச நல்லுற வாவதோர் நிகழ்விலையே .

அரும்பதவுரை: 

சுகத்து லாந்தில்  -  in Scotland
மேதிரு வப்பருக்கே -   Most Holy Father the Pope as he is most of the time addressed/\
தகைத்த  கும் முடி   =  தகைத்தகும்  முடி.    தகை -  மேன்மை ;  தகும் -  தகுந்த 
இது ஒரு மீமிசைச் சொல்லாட்சி.  மிக்க மேன்மை பொருந்திய என்று கொள்க. 

இது  ஒரு கலித்துறைப் பாட்டு.  பெரிதும்  ஆசிரியத் தளையால் ஆனது.


சொல் : அர்த்த நாரீஸ்வரர்.

  அர்த்த நாரீஸ்வரர். அமைந்த விதம்:


அர்த்த    பொருள்:  பாதி .    மூலம்:   அறுத்த.

(  அரை என்று பொருள்படும் பாதி என்ற சொல்லும்  பகு >  பகுதி > பாதி  என்று வந்ததுதான் . இதற்கு அரை என்ற பொருள் வரக் காரணம் மக்கள் பேச்சு வழக்கு, )

நாரி   பொருள்:  பெண்.

நர்  >  நருள் ;   நர் >  நரன்;   நர்  >  நாரி  (  முதனிலை நீண்டது )

இறைவர் >    இஸ்வர்  >  ஈஸ்வர்
முதனிலை  நீண்டது.
றை  என்பது  ஸ்  என்பதற்கு வழிவிட்டது.

ஆம்  புதிய சொல் பிறந்தது.   மகிழ்வோம் .

இவை பிறரும் முன் அறிந்தவைதாம்.