வியாழன், 12 மே, 2016

பரிகாசம் என்றால் என்ன?

இதனை இப்போது அறிந்துகொள்வோம்.

கிண்டல் என்று பேச்சு வழக்கில் சொல்வர். இது கிண்டிவிடுவது என்ற சொற்பொருளை உடையது.  அதாவது அடக்கமாக இருப்பதைக்  கிளறி
மேல் எழுப்புவது என்று எடுத்துக்கொண்டால் தவறில்லை என்று சொல்லலாம். கேலிப்பேச்சு என்றும் சொல்வதுண்டு. கேலி என்பதோ கேளிக்கைப் பேச்சு என்பதன் சுருங்கிய வடிவம்.  கேளிக்கை >  கேளி > கேலி.  Now : " gElli " just like cheeni has become "jeeni!!


வக்கணைப் பேச்சு என்றும் சொல்வதுண்டு. இவை நிற்க:

பரிகாசம் என்பதில் பரிதலாவது அன்பு காட்டுதல், இரங்குதல் என்றெல்லாம் பொருள்  கொள்ளக்கூடிய சொல்.

காய்தல் என்பது சூடேற்றுதல் என்றும் ஒளிர்தல் என்றும் பலபொருட்சாயல்களை உடையது. "காய்தல் உவத்தல் இன்றி ஆராயவேண்டும் "  என்ற வாக்கியத்தில்,  வெறுப்பு விருப்பு என்று
பொருள்கொள்ளலாம். எரிச்சல் அல்லது பொறாமைப்படுதல் முதலியவையும் காய்தலில் அடங்குவன.  காய்மை என்ற வடிவமும் உளது.  சினமும் கண்டிப்பும்கூட இவற்றுள் அடங்கும்.
காய்தல் என்ற சொல்லுக்குப் பிறபொருள்களும் உள.

காய்>  காயம் >  காசம் என்று மாறும்.  யகரம்> சகரம் ஆகும்.

ஆகவே பரிகாசம் என்பது, பரிவு ஒருபுறமிருக்க, காய்தலை மேற்கொண்டு பேசுதல் என்ற அழகான பொருள் தருகிறது.

பரிகாசம் என்பதன் மூலங்கள் பரிதல், காய்தல். இவை தமிழ்.  Well, if father and mother are Tamils,  the offspring can be Indo-European?

இதிகாசம்

இதிகாசம் என்பது நாம் வழங்கும் சொல். இதற்குப் பிறர் எப்படிப் பொருள் கூறினாலும்.  நாம் ஆய்வு செய்யலாம்.

இது +  இகு  + ஆய் +  அம்.

இவற்றுள் கடைசி இரண்டு துண்டுகளையும்  புணர்த்தினால் ஆயம் என்று வரும. யகரம் சகரமாகத் திரியத்தக்கது ஆதலின்  இது ஆசம் என்று முடியும். ஆகவே இந்த இறுதி நிலையின் பொருளாவது: ஆயப்படுவது அல்லது ஆய்வு என்பதாகும்.


இகு என்பது தன்வினையாகவும் பிறவினையாகவும் வரும், இவற்றுள் இகுத்தல் என்பது பல பொருளது ஆகும். அழைத்தல், ஈதல் இசை வாசித்தல் என்பனவும் இவற்றுள் அடங்குவன.

ஆகவே கதைகளைத் தந்து வாசித்தல் அல்லது ஆய்தல் என்று
பொருள்படுவது இகுத்தலென்பது.

இது இகு ஆசம் என்பது இதிகாசம் என்று கோவைப் பட்டு  நிற்கும்.

இனி இகு என்பது இங்கு என்பதன் இடைக்குறை வடிவமும் ஆம்.

வெறுமனே  இது இங்கு ஆயப்படுகின்றது என்றும் பொருள்.

தமிழில் சொல்லை அமைத்தபின் வேறுவழிகளில் பொருள் கூறுதல்
ஒரு மொழி நாகரிகம் ஆனபடியால் பிற பொருள்களும் கூறுவர்.



சரித்திரம் - சொற்பொருள்

சரித்திரம் என்ற சொல்லைப் பற்றித் தெரிந்துகொள்வோம். இதற்குத் தமிழில் " வரலாறு " என்று சொல்கிறோம். வரலாறு என்பதை "நடை பெற்றதைச் சொல்வது " என்று சொல்லலாம். சரித்திரம் என்பதும் அதையே குறிக்கிறது என்றாலும் அச்சொல்லில் மற்றொரு பொருளும் உள்ளது.. அது யாது?  

சரித்திரம் -  சொற்பொருள் :

நடைபெற்றதைச் சரியாகவும் திறம்படவும் உரைக்கும் கலையே சரித்திரம். சரி + திறம் = சரித்திறம் > சரித்திரம் ஆனது. திறம் - திரம் என்ற முன்னொட்டாய் ஆனதைப் பல இடுக்கைகளில் முன் குறித்துள்ளேன்.

ஆனாலும் சில எடுத்துக்காட்டுகள்: 


என்று வெகுண்டு எழுந்து திறமாக ஒன்றை எதிர்கொள்வது ஆத்திரம். இது வெகுண்டோன் நடக்கும் விதத்தைக் கவனித்தமைந்த வழக்குச் சொல் ஆகும். இங்கு திறம் என்பது
திரமானது -   அதாவது  ‍ ஒரு பின்னொட்டு ஆனது.

வேண்டுதல்கள் பலித்து நிலைபெற ஓதப்படுவது மந்திரம் 2   . மன்னும் ( நிலைபெறும்) திறத்தை வழங்கும் வலிமை உடையது என்னும் நம்பிக்கைப் பொருளது. மன்(னு) + திறம் = மன் திறம் > மந்திரம். ஆனது இது முன்னும் ( thinking, meditating) திறம்; பின் மன்+திறம் > மந்திரம். ஆயது எனறு பொருள் கூறினும் ஒக்கும். எப்படியாயினும் தமிழே. 1

இதிகாசம் என்ற சொல்லை அடுத்து அறிவோம்.

குறி ப்புகள் 

ஐந்திறம்  என்பதே  ஐந்திரம்  ஆகிவிட்டது .   இது  இந்திரன் எழுதிய  இலக்கணத்தைக்   குறிக்கும் என்று  கூறப்படுகிறது.  உண்மையில்  எழுத்து. சொல் பொருள் யாப்பு அணி என்ற ஐந்தியலே  ஐந்திரம்.  தமிழிற் சொற்கள் சில  றகர ரகர வேறுபாடு இன்றி வழங்கும். 
அறிஞர்  கா  சு  பிள்ளையும்  இங்ஙனமே   கருதினார் .

2 தொல்காப்பியம் கூறும்பொருள்  இதுவன்று.
மறைமொழி தானே மந்திர மென்ப (தொல். பொ. 491)