வெட்சித் திணையில் ஆகோள் என்பதும் ஒரு துறை. ஆ+ கோள் = ஆகோள் ஆயிற்று. இங்கு வல்லெழுத்து மிகவில்லை. இதேபோல், ஆதரவு (ஆவினைக் கொடுத்து ஒருவனை ஆதரித்தல்), ஆதாரம் ( ஆவினைத் தருதலாகிய அடிப்படைத் துணை நிற்றல் ) என்பவற்றிலும் மிகவில்லை. இவற்றுள் இப்போது ஆவை மறந்துவிட்டோம். மறந்துபோதலும் நல்லதுதான். மொழியும் கருத்துகளும் வளர்ந்து வேறுபாடுறுங்காலை, ஆக்களை மறந்து பொதுப் பொருளில் சொற்கள் வழங்குவனவாயின. இதற்கு ஒர் எடுத்துக்காட்டு வேண்டின், எண்ணெய் என்பதைக் கூறலாம். இது எள்+ நெய் என்பதன் திரிபு (புணர்ச்சியினால் வந்தது). என்றாலும் எள் தொடர்பு இல்லாத பல எண்ணெய்களைப் பார்க்கிறோம். ஈராக் ஓர் எண்ணெய் வள நாடு என்றால், அங்கு எள்ளிருக்கிறது என்பது அர்த்தமில்லை. சொல்லில் புகுந்துகொண்டிருக்கும் எள்ளுக்கு அதன் பொருள் மறைந்துவிட்டது. அது வெறும் சொல்லாக்கத் துணையாக நிற்கிறது.
எள் மறந்து எண்ணெய் பெற்றோம்.
எண்ணெய் என்ற சொல்லுக்குப் பொருள் மாறிவிட்டதால், " நல்லெண்ணெய் " என்று நல் இணைத்துச் சொன்னால்தான், எள்ளின் பொருள் வருகின்றது.
எண்ணெய் என்பதைக் கொஞ்ச காலம் எண்ணை என்று எழுதிப்பார்த்தனர். ஆனால் தமிழ் வாத்தியார்கள் விடவில்லை. எண்ணை என்று ஒரு சொல்லே இல்லை என்று மறுத்தார்கள்.
நெய் ணெய்யாகி நிற்கவேண்டும் என்று அடம் பிடித்தனர். அதனால்
எண்ணெய் எண்ணை ஆக முடியாமற் கிடக்கிறது. புதிதாகத் தலையெடுத்த வடிவம் ஆட்சி பெற முடியவில்லை.
எண்ணெயும் ஆதரவும்