தாழ் என்ற சொல்லுக்குப் பல பொருள் உண்டு . இதனுடன் தொடர்புடைய தாழ்தல், தாழ்த்தல் என்ற வினைகளும் உள. நாம் இங்கு கருதும் "தாழ் " ஆங்கிலத்தில் bolt, bar, latch; என்று பொருள்தருவதாகும் .
இப்போதெல்லாம் கதவுகளில் மேல் நடு கீழ் என்று முந்நிலைகளிலும் தாழ்ப்பாள்கள் பொருத்தப்படுகின்றன. ஆனால் தாழ் என்பதன் அடிப்படைப் பொருள் கீழ் என்பதே. பண்டையர் பெரும்பாலும் தாழ்ப்பாள்களைக் கதவின் கீழ் நிலையிலேயே அமைத்தனர் என்பது தாழ்ப்பாள் என்ற சொல்லைச் சற்று அணுகி ஆய்ந்தாலே எளிதிற் புலப்படுவதாகும் .
தாழிடுதல் என்ற சொல் bolting என்பதற்கு நேரானதாகும் . தாழ் என்ற பகுதியும் தாழ்ப்பாள் என்று பொருள்படும் .
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்றார் திருவள்ளுவர். அடைக்கும் என்று மிகுத்துச் சொன்னதால் ( qualified ) தாழ் என்பதன் வேறு பொருண்மைகள் சென்று பொருள் மாறுபாடு செய்யாவென்க,
இனித் தாழ்ப்பாள் என்ற சொல்லைக் காண்போம்.
தாழ் > தாழ்ப்பு > தாழ்ப்பு +ஆள் = தாழ்ப்பாள் .
ஆள் என்பது ஆட்சி அல்லது மேலாண்மை குறிக்கிறது. ஆங்கிலத்தில் control என்பதற்கு இஃது ஈடானது ஆகும். பு என்பது விகுதி .
பாளம் என்பது நீண்டு தடித்துத் தட்டையான பக்கங்களைக் கொண்ட பொருளைக் குறிக்கும் ..
அடிப்படைக் கருத்து நீட்சி என்பதாகும்,
பாள் > பாளம்.
ஒப்பு நோக்குக :
பாள் > வாள் ( இதுவும் அடிப்படை நீட்சிக் கருத்துத்தான் ) அரிவாள் கொடுவாள் முதலியன .
வாள்> வாளம் : கடிவாளம் . Something long and is put in place. or "bites in"
தண்டவாளம் . அதாவது தண்டு நீட்சி .
எனவே நீட்சி கருத்தும் பொதியப்பெற்று தாழ்ப்பாள் என்பது மிகு அழகாக அமைந்த சொல் ஆகும்.