வெள்ளி, 18 டிசம்பர், 2015

சிவஞான போதத்தின் 4‍வது பாடல் preliminary notes.

ஆன்மா உள்ளதென்று காட்சி அளவையால் நிறுவியபின்,  ஆன்மா உளதாயின் அதன் தன்மைகள்  யாவை என்ற கேளவி எழல் இயல்பு ஆகும்.  சிவஞான போதத்தின் 4‍வது  பாடல், இதற்குப் பதிலாக அமைகின்றது. 

ஆன்மாவிற்கு ஐந்து அவத்தைகள் உள்ளன. அவத்தையாவது, அதன் உள்ளெழும் இடர்ப்பாடு.  

அவத்தை என்ற சொல் அவம் என்பதினின்று எழுகிறது.   அவி+ அம் = அவம்.  அவிப்பதாவது, கெடுப்பது. பயன் குறைப்பது.   அவி+ அம்+ தை = அவத்தை,   அம் தை என்பன தொழிற்பெயர் விகுதிகள். நட > நடத்தை என்பதில் தை விகுதி வந்தது.   அறம் என்பதில் அம் விகுதி வந்தது. இந்த அவத்தை என்ற சொல்லின்மூலப் பொருளையயும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.  இது, அவஸ்தை என்று மாறும்.  


அந்தக் கரணம் அவற்றின் ஒன்று அன்று அவை 
சந்தித்தது  ஆன்மாச் சகச மலத்து உணராது
அமைச்சர் அரசு ஏய்ப்ப நின்று அஞ்சு அவத்தைத்தே.

இது  நான்காம் பாடல்.  பாடல் பொருள் காணுமுன்  சில கருத்துகளைக் கவனிப்போம்.


பொருளல்லவற்றைப் பொருளென்றுணரும் புல்லறிவாண்மை கடை என்றார் திருவள்ளுவ நாயனார். ஆன்மா அதன் இயற்கையான தன்மையில் மிகவிரிந்ததாகும். (வியாபகம் உடையது.)  ஆணவம் காரணமாக அது அணுப்போலும் மிகச் சுருங்கியதாகிவிடுகிறது. இத்துறை அறிஞர் கருத்தின்படி  அணு + அவம் =  ஆணவம் என்கின்றனர்.(சொல்லமைந்த விதம்‍ ‍‍: முதனிலை நீண்டது. உகர ஈறு கெட்டது ).  விரிபொருள் ஒன்று அணுப்போல் குறுகிவிட்ட கெடுதல்.
தன் விரிவுணராது குறுக்கம்பெற்று பொருளல்லவற்றைப்   ொருளென்று திரிபுணர்ச்சியில் மூழ்கி அல்லாடுதலே ஆணவ மா கும் என்பது காண்க. இது ஒரு கடைகெட்ட நிலையாம்.


ஆன்மாவிற்குச் சகசமாக அல்லது இயல்பாக உள்ள கேடாக ஆணவம்  உண்டாயிற்று.  ஆகவே அது ஆணவமலம் எனப்பட்டது. அதாவது ஆணவமாகிய கேடு. அது எதனால் ஏற்பட்டது  ? உண்மையில் மிகவிரிந்த நிலையில் நிற்கவேண்டிய ஆன்மா, அணுவளவில் குறுகிப்போய்,  அந்தக் குறுக்கத்தை ஆன்மா உணராது நிற்பதனால் ஏற்பட்டது.இதுவே அதன் அறியாமை அல்லது அஞ்ஞானம்


இவ்வுடலினுள் ஆன்மா நிற்குங் கால மட்டும் இது தொடரும், இதனைச் சகசமலம் என்றார் சகசம்  -  இயல்பு நிலை.

ஆன்மா உடலுள் புகுந்து வதியும் ஞான்று அது தனது முன் நிலையை மறந்து இயல்கின்றது. அந்த மறதியே அதன் அறியாமையை விளைக்கின்றது.

அந்தக்கரணம் என்பது மனம், புத்தி, சித்தம்,  அகங்காரம் என்பனவற்றை  உள்ளடக்கியது.இவை உட்கருவிகள்.  அந்தக்கரணம் <  அந்தர்க்கரணம்,   அந்தர் = உள். கரணம் = கருவி.
ஒரு விடையத்தை (பொருளை) நினைக்குங்கால்,  அக்கருவி மனம் எனப்படும்,

ஒரு விடையத்தை உறுதிகொள்ளுங்கால் அக்கருவி புத்தி எனப்படும்.

ஒரு விடையத்தைச்  சிந்திக்குங்கால்  அக்கருவி சித்தம் எனப்படும்.  

ஒரு விடையத்தை விரும்புங்கால், பற்றுங்கால்  அக்கருவி அகங்காரம் எனப்படும். 

தொடரும்.  Editor generates problems. Will continue later. Stay tuned and will be back as soon as possible.

புதன், 16 டிசம்பர், 2015

சிவஞான போதம் 3: பொருளை.......

சிவஞான போதம் 3-ம்  பாடலின் முன்னுரை இவ்விடுகையில்  http://sivamaalaa.blogspot.sg/2015/12/3.html கண்டு மகிழ்ந்தோம்.  

இப்போது அதன் பொருளை அறிந்துகொள்வோம்.


உளதில தென்றலின் எனதுடல் என்றலின்
ஐம்புலன் ஒடுக்கத்து அறிதலின் கண்படில்
உண்டிவினை இன்மை உணர்தலின்
மாயா இயந்திரத் தனுவினுள் ஆன்மா.

உடம்பு  கண்ணால்  காணப்படுவது  ஆகும் .   ஆனால்   ஆன்மாவோ   கண்ணுக்குப்  புலப்படாததாய்  இருக்கின்றது.   புலப்படும்  உடலைக்கொண்டு    புலப்படாத  ஆன்மா வை    அறியும் வழியை  இப்பாடல்   தெரிவிக்கிறது.  இதை  அனுமானப் பிரமாணம்   என்பர்   பணடிதன்மார். 

மாயா  இயந்திரத் தனுவினுள்   ஆன்மா  உளது.   -   மாயையின்  விளைவினால் இயங்குவதாகிய  இவ்வுடம்பினுள்   ஆன்மா  இருக்கின்றது . மாயை  காரணம்;   உடம்பு   காரியமாகிறது, 


தனு   என்பது  உடல்.    தன் + உ =  தனு ,  தன்  -  தன்னுடைய .   உ  என்பது உடல்  என்பதன்  முதலெழுத்து .  தன்  + உ  ,  இரண்டும் கூட்டி  தனு  ஆனது.  ஒரு முழுச் சொல்லும் ஒரு குறைச்சொல்லும்    கலந்த  கலவை. தனு  எனவரும்  வேறு  பொருள்தரு  சொற்களும் உள்ளன.  அவை வேறு   இது வேறு.    ஆகவே  தனு  -  ஒரு இனிய புனைவுச் சொல்  ஆகின்றது.   தன்னுடல்  என்பதை  ஒரு மறைமுக வழியில்  குறிப்பிடுவது.    தேகம்  (தேய்+கு+  அம்  = தேய்கம் >  தேகம் ) தேய்தல் உடையது ;  அழிவுடையது .  அழி  உடலில்   அழியா  ஆன்மா  உள்ளிருக்கிறது.   இதைச்   சற்று  மறைவாகத் தனு  என்றது  மிக்கப் பொருத்தமாகும்.

  இலது என்றலின்   =   இல்லை  என்று சொல்வதனால்  .
இல்லாததை  எப்படி இல்லை என்று சொல்வது?   ஆன்மா இல்லை என்று சொல்லும் போதே   ஆன்மா  என்ற சொல் வந்துவிடுகிறதே  , உலகம்  அறியாத ஒன்றைக்  குறிப்பிட்டு  அதை இல்லை என்று சொல்ல இயலாது. முடியுமா என்று பாருங்கள்.

எனது  உடல்  என்றலின்  =   என்னுடைய உடம்பு  என்று சொல்வதனால் .
இவ்வுடல்  ஆன்மாவின் உடைமை  என்பது     பொருள் ஆகிறது அன்றோ.? 


ஐம்புலன் ஒடுக்கத்து அறிதலின்  -   கனவின் போது  கண்,  மூக்கு, செவி   வாய்,  தோல்  (மெய் ​) ஆகியவை ஒடுங்கி   விடுகின்றன.   ஐந்து உணர்ச்சிகளும் ஒடுங்கிப் போகின்றன.  ஆன்மா இருப்பதனாலன்றோ இப்படி நடக்கிறது என்றபடி.  சமாதி  பழகும் போதும்  ஐம்புலன்களும் ஒடுங்கி விடுகின்றன.  உடல் கட்டைபோல் கிடக்கிறது.   அப்போது   அறிவதனால் .(ஆன்மா   உள்ளது )

சமாதி  <  சம + ஆதி.     ஆதியில்  ஓர் உடலினுள்  ஆன்மா  இருக்கவில்லை.  அது பின்புதான்  உடலை எடுத்தது.  அது  ஆதி நிலைக்குத் திரும்புதல் போல  உடலினின்றும்   ஆன்மா  பிரிந்து எழுந்து  நிற்பதே  சமாதி. ( நிருவிகற்ப  சமாதி  முதலியவை நோக்குக ).   ஆதியின் ஒத்த  சம நிலை  சமாதி.  


  கண்படில்  உண்டிவினை இன்மை உணர்தலின் =   கண் படும்போது  (உறங்கும்போது)   உணவு  மற்றும் வேறு   எல்லாமும்  விட்டு க்   கிடக்கிறோம்.   உடல் அற்ற நிலையைப் போல   ஆதலினால்.

கண்படல்  = உறங்குதல்.

உண்டி வினை :   இது  உண்டியும்  வினையும்  என்று   உம்மை   (உம்  என்ற இடைச்சொல் )  விரியும்.   எனவே உண்டி வினை  என்பது உம்மைத் தொகை .  உண்டி - உணவு.      வினை  -  உடலுக்குத் தேவையான  மற்றெல்ல்லா  நுகர்வுகளும்,   (போகங்கள்  யாவும் ),  உடல்  உடையவன் வேண்டிப் போகும்  யாவும்  போகங்கள்.  ஆகவே  வினை  என்பது   ஏனைப்   போகங்கள்    என்று   பொருள்தரும்,

 இவ்வாறு   ஆன்மா  உள்ளதென்பதை சிவமதம்  நிலை நாட்டுகிறது,

இது  ஆன்மா இல்லை என்றாருக்கு அறிவுறுத்துவதாகிறது.

ஆன்மா இல்லை என்போனுக்குச் சூன்யாத்மவாதி  என்று பெயர்.
எனது உடல் என்பவனுக்குத் தேகாத்மவாதி என்று பெயர்.
ஐம்புலன் அன்றிப் பிறிதில்லை என்போன்  இந்திரியாத்மவாதி
கண்படுதல் காலத்து  அறிதல் ஒப்பாதவன் பிரணாத்மவாதி.
உணர்த்த உணர்தலின் ஆத்மா உண்மை மறுப்போன் அஞ்ஞானாத்மவாதி.

தான் ஆத்மா  இல்லை என்பதால் தான் இறந்தபின்  ஒன்றுமி ல் லை   என்பான்  சூன்யாதமவாதி .

இவர்கள் கொள்கைகளையெல்லாம் இந்நூல் மாறுத்து நிற்கின்றது. 

Some typos corrected and re edited.  Some  virus has made changes ,   These have been reverted.   கண்படும்போது   not  காணப்படும்போது.    Pl note comments if any  by readers do not reach us. 

செவ்வாய், 15 டிசம்பர், 2015

" வம்ச புத்திரி "

Taman Puteri Wangsa என்ற மலாய் மொழிப்  பெயரைத் தமிழில் சொல்வதானால் வம்சம் என்ற சமஸ்கிருதச் சொல்லை ப் பயன்படுத்தி  "  வம்ச  புத்திரி "  குடியிருப்புப் பேட்டை  என்று  சொல்லலாம்.  குல இளவரசி  ,,,,,,, என்றும் கூறலாம்,  ஒரு தலைமுறைக்கு மட்டுமின்றி  அந்த  அரச குலத்துக்கே  இளவரசிகளுக்கெல்லாம் ஓர்  இளவரசி ஆனவள் .......... என்று புகழுரைக்கலாம் ,

நல்லது.  இப்போது வம்சம் என்ற சொல்லை ஆராய்வோம். இது பற்றி முன்னர் யாம் எழுதியதுண்டு.  இப்போது சொல்வதில் சிறு மாற்ற வளர்ச்சி இருக்கக்கூடும். பெரும்பாலும் யாம் பார்த்து எழுதுவதில்லை. 

வருமின்  அதாவது  வாருங்கள் என்னும் சொல்  வம்மின்  என்று திரியும் .  வந்தான்   என்ற  இறந்த கால வினைமுற்று  வரு என்ற பகுதி  வ  என்று திரிதலைக்  காட்டுகிறது/  

இவை போல  வ  என்ற  பகுதி  வம்மிசம் அல்லது  வம்சம்   என்ற சொல்லில் முன் நிற்கிறது, உண்மையில்  இது  வருமிசம் என்று இருந்து  வம்மிசம் என்று திரிந்தது என்று சொன்னாலும்  உண்மையிலிருந்து தொலைவு  ஆகிவிடாது .

குழந்தைகள் பிறந்து  பல தலைமுறைகள் மென்மேலும் தொடருமானால் 
அதுதான்  வம்சம்  ஆகிறது.  , மேலும் என்ற சொல்லுக்கு ஈடானது  மிசை என்ற பழந்தமிழ்ச் சொல். 

வ  + மிசை + அம்   =  வம்மிசம் ஆகிறது.,

மிசை என்பதில் உள்ள  ஐ  கெட்டது.  ( விடப்பட்டது)

ஆகவே    வ + மிச் + அம்   =  வமிசம்  >  வம்சம் ஆகும்.  ச்  + அ  =  ச .

வருதல் எப்படி பிறப்புகள் தொடர்தலை க் குறிக்கும்.?    தொடர் குறித்தது மிசை என்னும் சொல்.  வருதல் பிறப்பு .

போக்கு வரவு என்ற தொடர்  பிறப்பும் இறப்பும் குறித்ததே சிவஞான போதத்தில்.  அதுபோலவே  ஆகும்.

வம்சம் என்ற சொல் பேச்சில் இன்றும் உள்ளது.  அவன் வம்சம் கருவற்றுப் போக என்று திட்டுகையில்  அது வந்துவிடுகிறது,  

அது மலாய் வரை பரவி மகிழ்வு தருகிறது..

puteri wangsa =  dynasty princess.  A nice phrase to hear.