செவ்வாய், 15 டிசம்பர், 2015

" வம்ச புத்திரி "

Taman Puteri Wangsa என்ற மலாய் மொழிப்  பெயரைத் தமிழில் சொல்வதானால் வம்சம் என்ற சமஸ்கிருதச் சொல்லை ப் பயன்படுத்தி  "  வம்ச  புத்திரி "  குடியிருப்புப் பேட்டை  என்று  சொல்லலாம்.  குல இளவரசி  ,,,,,,, என்றும் கூறலாம்,  ஒரு தலைமுறைக்கு மட்டுமின்றி  அந்த  அரச குலத்துக்கே  இளவரசிகளுக்கெல்லாம் ஓர்  இளவரசி ஆனவள் .......... என்று புகழுரைக்கலாம் ,

நல்லது.  இப்போது வம்சம் என்ற சொல்லை ஆராய்வோம். இது பற்றி முன்னர் யாம் எழுதியதுண்டு.  இப்போது சொல்வதில் சிறு மாற்ற வளர்ச்சி இருக்கக்கூடும். பெரும்பாலும் யாம் பார்த்து எழுதுவதில்லை. 

வருமின்  அதாவது  வாருங்கள் என்னும் சொல்  வம்மின்  என்று திரியும் .  வந்தான்   என்ற  இறந்த கால வினைமுற்று  வரு என்ற பகுதி  வ  என்று திரிதலைக்  காட்டுகிறது/  

இவை போல  வ  என்ற  பகுதி  வம்மிசம் அல்லது  வம்சம்   என்ற சொல்லில் முன் நிற்கிறது, உண்மையில்  இது  வருமிசம் என்று இருந்து  வம்மிசம் என்று திரிந்தது என்று சொன்னாலும்  உண்மையிலிருந்து தொலைவு  ஆகிவிடாது .

குழந்தைகள் பிறந்து  பல தலைமுறைகள் மென்மேலும் தொடருமானால் 
அதுதான்  வம்சம்  ஆகிறது.  , மேலும் என்ற சொல்லுக்கு ஈடானது  மிசை என்ற பழந்தமிழ்ச் சொல். 

வ  + மிசை + அம்   =  வம்மிசம் ஆகிறது.,

மிசை என்பதில் உள்ள  ஐ  கெட்டது.  ( விடப்பட்டது)

ஆகவே    வ + மிச் + அம்   =  வமிசம்  >  வம்சம் ஆகும்.  ச்  + அ  =  ச .

வருதல் எப்படி பிறப்புகள் தொடர்தலை க் குறிக்கும்.?    தொடர் குறித்தது மிசை என்னும் சொல்.  வருதல் பிறப்பு .

போக்கு வரவு என்ற தொடர்  பிறப்பும் இறப்பும் குறித்ததே சிவஞான போதத்தில்.  அதுபோலவே  ஆகும்.

வம்சம் என்ற சொல் பேச்சில் இன்றும் உள்ளது.  அவன் வம்சம் கருவற்றுப் போக என்று திட்டுகையில்  அது வந்துவிடுகிறது,  

அது மலாய் வரை பரவி மகிழ்வு தருகிறது..

puteri wangsa =  dynasty princess.  A nice phrase to hear.


திங்கள், 14 டிசம்பர், 2015

சிவஞான போதம் பாடல் 3

சிவ ஞான போதத்தின் மூன்றாவது பாடலைக் கண்டு மகிழ்வோம்,

உளதில தென்றலின் எனதுடல் என்றலின்
ஐம்புலன் ஒடுக்கத்து அறிதலின் கண்படில்
உண்டிவினை இன்மை உணர்தலின்
மாயா இயந்திரத் தனுவினுள் ஆன்மா.

ஆன்மா உள்ளது, ஆன்மா இல்லை என்று இருவிதமாகப் பேசப்படுகிறது ஆன்மா இருக்கிறது.

எனது உடல் என்றும் சொல்வர். எனது எனப் படுதலால் நான் என்பது இவ்வுடல் ஆயின் என் உடல் என்று கூறுவதென்ன? நான் என்பதில் வேறுபட்டதாகவன்றோ உடலைச் சொல்கின்றனர். ஆகவே நான் உள்ளேன்; எனக்கு உடலும்  இருக்கிறது. நான் என்பது உடலினை வைத்திருக்கும் ஆன்மா ஆகிறது.   ஆன்மா  தேகி .  தேகத்தை உடையது,

கனவின்போதும்  ஐம்புலன்களும் ஒடுங்கி விடுகின்றன.அப்போது நான் இருக்கிறேன்,( உடல் செயலற்றுக் கிடக்கிறது. உறங்குவது போலும் சாக்காடு., இரண்டும் ஒப்புமை உடையன ) ஆதலின், உடலின் வேறான ஆன்மா இருக்கிறது.


உறங்குங்கால் உண்ணுதல் முதலிய ஏனைச் செயல்கள் நடைபெறுவதில்லை. நன்மை தீமைகளைப் பட்டறிய முடிவதில்லை. ஆனால் மூச்சு ஓடுகிறது. அதனாலும் ஆன்மா உள்ளது. மூச்சு வேறு; ஆன்மா வேறு.



யாராவது ஒன்றை நமக்கு உணர்த்தினால் அதனை நாம் உணர்ந்துகொள்கிறோம். அதனாலும் ஆன்மா உள்ளது என்பர் . ஒரு அறிவியலாளர், தாம்  அனுப்பிய துணைக்கோளம் செவ்வாயில் இறங்கிற்று என்கிறார். அவர் சொன்னதும் உங்களுக்கு விளங்குகிறது. அது புரிந்தது உங்களுக்கா? அல்லது உங்கள் உடலுக்கா? உணர்த்தியவுடன் நீங்கள் உணர்ந்தீர்கள் . ஆகவே உங்கள் உடலின் வேறான உங்கள் ஆத்மா உள்ளது. தற்கால முறைப்படி ஒரு மனிதனின் மூளையை அறுவை செய்து தேடினால் இந்த உணர்ந்த செய்தியை மூளையின் அணுத்திரள்களில் கண்டெடுக்க முடிவதில்லையே. அது  எங்கு பதிவாகியது

இவற்றை விளக்குகிறது இந்தப் பாடல். இதன் பொருளை அடுத்த இ
டுகையில் ஆராய்வோம் .
will edit 

சனி, 12 டிசம்பர், 2015

புத்திரி etc

மகள் என்பது குறிக்கும் புத்திரி,  மற்றும்  ஆண்பால் புத்திரன்,  பலர்பால் புத்திரர்  முதலியன  தமிழில் வழங்கும், இவற்றைத் தமிழாக ஏற்றுக்கொள்ளவில்லை   தமிழ்ப்புலவர்.

இவற்றின் அடிச்சொல்லைக் கண்டு பிடிப்போம்.

புதல்வன் என்பதன் அடியை முன் இடுகையில் ஒரு பத்தியில் குறித்துள்ளோம்.

http://sivamaalaa.blogspot.sg/2015/12/blog-post_63.html

இதுவும் அதே புது என்னும் அடியினின்று வருவதே.

புத்திரி புதியவளாக  வந்து இருப்பவள்.  அதாவது   குடும்பத்தில்   பிறந்து  புதிய உறுப்பினளாய்  இவ்வுலகில்  வந்தவள்-.   தாய்  தந்தையர்  முன்னரே தோன்றிப்   பழமை எய்திவிட்டவர்கள். முதலில்  பிறந்த குழந்தையைக்  குறித்துப்  பின் வளர்ச்சி பெற்றுப்  பெரியவர்கள் ஆனோரையும் குறித்தது இச்சொல்.  

புது + இரு + இ =  புத்திரி.  ( தகரம் இரட்டித்தது. )
புது + இரு + அன் =  புத்திரன் .
புது + இரு+ அர்  = புத்திரர்.  

இரு என்ற சொல்லை இடையில் செருகி அமைந்த இன்னொரு சொல்:

நம் + புது+  இரி =  நம்பூதிரி.

இதில் பூதிரி  என வந்தது  முதலெழுத்து நீண்டதனால். 

முதனிலை திரிதல் தொழிற்பெயரிலும் பிற பெயரிலும் வரும்,,

புத்திரி  என்ற சொல் மலாய் மொழியிலும் உள்ளது.  அங்கு அதற்கு "இளவரசி " என்று பொருள்.  பல மொழிகளிலும் புகுந்துள்ள இந்தப் புத்திரச் சொல்லை அமைத்து வழங்கிய  பெருமை தமிழினது ஆகும் .