திங்கள், 14 டிசம்பர், 2015

சிவஞான போதம் பாடல் 3

சிவ ஞான போதத்தின் மூன்றாவது பாடலைக் கண்டு மகிழ்வோம்,

உளதில தென்றலின் எனதுடல் என்றலின்
ஐம்புலன் ஒடுக்கத்து அறிதலின் கண்படில்
உண்டிவினை இன்மை உணர்தலின்
மாயா இயந்திரத் தனுவினுள் ஆன்மா.

ஆன்மா உள்ளது, ஆன்மா இல்லை என்று இருவிதமாகப் பேசப்படுகிறது ஆன்மா இருக்கிறது.

எனது உடல் என்றும் சொல்வர். எனது எனப் படுதலால் நான் என்பது இவ்வுடல் ஆயின் என் உடல் என்று கூறுவதென்ன? நான் என்பதில் வேறுபட்டதாகவன்றோ உடலைச் சொல்கின்றனர். ஆகவே நான் உள்ளேன்; எனக்கு உடலும்  இருக்கிறது. நான் என்பது உடலினை வைத்திருக்கும் ஆன்மா ஆகிறது.   ஆன்மா  தேகி .  தேகத்தை உடையது,

கனவின்போதும்  ஐம்புலன்களும் ஒடுங்கி விடுகின்றன.அப்போது நான் இருக்கிறேன்,( உடல் செயலற்றுக் கிடக்கிறது. உறங்குவது போலும் சாக்காடு., இரண்டும் ஒப்புமை உடையன ) ஆதலின், உடலின் வேறான ஆன்மா இருக்கிறது.


உறங்குங்கால் உண்ணுதல் முதலிய ஏனைச் செயல்கள் நடைபெறுவதில்லை. நன்மை தீமைகளைப் பட்டறிய முடிவதில்லை. ஆனால் மூச்சு ஓடுகிறது. அதனாலும் ஆன்மா உள்ளது. மூச்சு வேறு; ஆன்மா வேறு.



யாராவது ஒன்றை நமக்கு உணர்த்தினால் அதனை நாம் உணர்ந்துகொள்கிறோம். அதனாலும் ஆன்மா உள்ளது என்பர் . ஒரு அறிவியலாளர், தாம்  அனுப்பிய துணைக்கோளம் செவ்வாயில் இறங்கிற்று என்கிறார். அவர் சொன்னதும் உங்களுக்கு விளங்குகிறது. அது புரிந்தது உங்களுக்கா? அல்லது உங்கள் உடலுக்கா? உணர்த்தியவுடன் நீங்கள் உணர்ந்தீர்கள் . ஆகவே உங்கள் உடலின் வேறான உங்கள் ஆத்மா உள்ளது. தற்கால முறைப்படி ஒரு மனிதனின் மூளையை அறுவை செய்து தேடினால் இந்த உணர்ந்த செய்தியை மூளையின் அணுத்திரள்களில் கண்டெடுக்க முடிவதில்லையே. அது  எங்கு பதிவாகியது

இவற்றை விளக்குகிறது இந்தப் பாடல். இதன் பொருளை அடுத்த இ
டுகையில் ஆராய்வோம் .
will edit 

சனி, 12 டிசம்பர், 2015

புத்திரி etc

மகள் என்பது குறிக்கும் புத்திரி,  மற்றும்  ஆண்பால் புத்திரன்,  பலர்பால் புத்திரர்  முதலியன  தமிழில் வழங்கும், இவற்றைத் தமிழாக ஏற்றுக்கொள்ளவில்லை   தமிழ்ப்புலவர்.

இவற்றின் அடிச்சொல்லைக் கண்டு பிடிப்போம்.

புதல்வன் என்பதன் அடியை முன் இடுகையில் ஒரு பத்தியில் குறித்துள்ளோம்.

http://sivamaalaa.blogspot.sg/2015/12/blog-post_63.html

இதுவும் அதே புது என்னும் அடியினின்று வருவதே.

புத்திரி புதியவளாக  வந்து இருப்பவள்.  அதாவது   குடும்பத்தில்   பிறந்து  புதிய உறுப்பினளாய்  இவ்வுலகில்  வந்தவள்-.   தாய்  தந்தையர்  முன்னரே தோன்றிப்   பழமை எய்திவிட்டவர்கள். முதலில்  பிறந்த குழந்தையைக்  குறித்துப்  பின் வளர்ச்சி பெற்றுப்  பெரியவர்கள் ஆனோரையும் குறித்தது இச்சொல்.  

புது + இரு + இ =  புத்திரி.  ( தகரம் இரட்டித்தது. )
புது + இரு + அன் =  புத்திரன் .
புது + இரு+ அர்  = புத்திரர்.  

இரு என்ற சொல்லை இடையில் செருகி அமைந்த இன்னொரு சொல்:

நம் + புது+  இரி =  நம்பூதிரி.

இதில் பூதிரி  என வந்தது  முதலெழுத்து நீண்டதனால். 

முதனிலை திரிதல் தொழிற்பெயரிலும் பிற பெயரிலும் வரும்,,

புத்திரி  என்ற சொல் மலாய் மொழியிலும் உள்ளது.  அங்கு அதற்கு "இளவரசி " என்று பொருள்.  பல மொழிகளிலும் புகுந்துள்ள இந்தப் புத்திரச் சொல்லை அமைத்து வழங்கிய  பெருமை தமிழினது ஆகும் . 

வெள்ளி, 11 டிசம்பர், 2015

பிற மதங்களும் சிவஞானமும்

முன் இடுகையிலிருந்து  தொடர்வோம்.

http://sivamaalaa.blogspot.sg/2015/12/blog-post_11.html


இதனைச் சிறிது ஒப்பாய்வு செய்வோம்.


இஸ்லாமிய மார்க்கத்திலும் கிறித்துவ சமயத்திலும்கூட,   ஆன்மா இருப்பது ஒப்புக்கொள்ளப்படுகிறது,   ஆனால் இந்து மதத்துக்கும் அவைகட்கும் ஒரு வேறுபாடு உண்டு,     அவற்றின் கூற்றுப்படி  ஒருவன் பிறக்குமுன் அவன்தன்  ஆன்மா இருக்கவில்லை.  அவன் பிறக்கும்போதுதான் அவன் ஆன்மாவும் உண்டாகி அவனுள் இருக்கத் தொடங்குகிறது.முன்பிறவி  இல்லையாகையால், முன் அவன் ஆன்மாவும் இல்லை.


அவன் இறக்கும்போது, அது அவனைவிட்டுப் போய்விடுகிறது. எங்கு போயிற்று என்பது தெரியவிட்டாலும்,  இறைவனிடம் சென்றுவிட்டது என்பர் அம் மதத்தினர்.


இந்து மதத்தில் நம் ஆன்மா முன்னும் இருந்தது. பின் இந்த உடலை எடுத்தோம். இதைப் பிறவி என்றும்  சென்மம்  (ஜென்மா)   என்று,ம் கூறுவர்.  இந்த உடலை விட்டுச் சென்றுவிட்டபின்னும் இருப்போம்.  ஆன்மா என்றும் இருப்பது.  கடவுளும் என்றும் இருப்பவர்.    இதில் கடவுளுக்கும் ஆன்மாவுக்கும் உள்ளதோர் ஒற்றுமை.தெளிவுபடுகிறது .


கடவுள் என்பவர் பெரிய ஆத்மா.  நாமோ சிறிய துண்டு ஆதாமாக்கள். எப்படித்  துண்டுகள் ஆனோம்?  அதை வேறொரு சமயத்தில் சொல்வோம்


We shall also look at the Christian concept of purgatory  later.