திங்கள், 23 நவம்பர், 2015

வள்ளுவர் மதத்தைக் கண்டுபிடிக்க......

திருவள்ளுவர்  எந்த மதத்தைச் சார்ந்தவர்  என்பதுபற்றி  சில \ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வாதம் நடந்தது.  அதில்  நானும் கலந்துகொண்டு  எழுதினேன்.  அங்கு எழுதியது:  29th August 2006, 10:02 PM

ஆய்வு என்றால் என்ன?

கவிஞர் பாபநாசம் சிவன், திருவள்ளுவரின் வழியைப் பின்பற்றித் தம் பாடல்களின்வாயிலாகப் பல நல்லறங்களைப் போதித்துள்ளார்!!
ஆனால், சிவனின் மதத்தை அவர் பாடல்களின் வழி நாம் நிறுவினால், PhD வாங்குவதுடன், உலகப் புகழும் அடைந்துவிடலாம்.

காந்தியைப் பற்றி எழுதிய சிவன். " அகிம்சைதனிலே புத்தரவர்" என்று ஒரு பாட்டில் எழுதியிருக்கிறார்.

இன்னொரு பாடலில் "புத்தரைப் போற்றுதல் நம் கடனே" என்றும் பாடியுள்ளார்.

ஆகவே, அவர் பௌத்தர் அல்லது, புத்த மதத்தின்பால் மனச்சாய்வு உள்ளவர்.

வள்ளுவர் மதத்தைக் கண்டுபிடிக்கச்  சிலர் கையாண்டுள்ள வழியைப் பின்பற்றி, எல்லாருடைய மதங்களையும் கண்டுபிடித்துவிடலாம்.

இதற்காக ஒரு தனித்திரி தொடங்கினால் பௌத்தர்கள் மகிழ்வார்கள். எப்படி என் கண்டுபிடிப்பு? ஆய்வு என்றால் இதன்றோ ஆய்வு

------------------------------------------------------------------
கீய்வு


அப்படியானால் பாடலை வைத்து, வள்ளுவன் என்ன மதம், இளங்கோ என்ன மதம், பாபநாசம் சிவன் என்ன மதம், கம்பதாசன் என்ன மதம், கண்ணதாசன் என்ன மதம் என்றெல்லாம் கண்டுபிடிக்க முடியாது என்று நீங்கள் கூறுவதுபோல் தெரிகிறதே?

அப்படியானால், இங்கு நடந்துவரும் ஆய்வு உங்களுக்கு உடன்பாடில்லை என்கிறீர்களோ?

ஒரு பாடலை வைத்து, பாரதிதாசன் என்ன மதம் என்று கண்டுபிடித்துவிட்ட நிலையில், இது ஒரு பின்னடைவுதான்!!

பாருங்கள்:

"பின்னை ஒரு கடவுளைப் பேண நினையார்,
பேரொளியைக் காணுவாரென் றாடு பாம்பே!"

என்று பாரதிதாசன் பாடியுள்ளதால், அவர் பௌத்தர் என்று முடிவு செய்யலாம் என்றலவோ எண்ணிக்கொண்டிருந்தேன்!! பேரொளி என்றால் புத்தர்!! The Light of Asia என்றும் ஆங்கிலத்தில் கூறுவர்!!

கம்பதாசன்  - கண்ணதாசன் கிறிஸ்தவர்கள்!!
காளிதாசன் மட்டும் காளிபக்தர்!

பாரதி மட்டும் எந்த மதத்திலும் இல்லைபோலும். அவர்:

""யாரும் பணிந்திடும் தெயவம் -- பொருள்
யாவினும் நின்றிடும் தெயவம்.
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று - இதில்
பற்பல சண்டைகள் வேண்டா!"

என்று பாடி, எல்லா மதமும் ஒன்றுதான் என்கிறார்.

எப்படி என் ஆய்வு?

name as indicator of religion

என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.

என் சொந்தக்காரன் ஒருவன் - பெயர் சுப்ரமணியந்தான். ஒரு மலாய்ப்பெண்ணை மணந்துகொண்டான். இரகசியப் பெயர் ஹாசான் அப்துல்லா!! அலுவலகத்தில், வெளியில் பெயர் சுப்ரமணியன். மலாய்க்காரி (விரிவுரையாளர் ) மனைவி: "abang hasan! abang hasan" என்று கூப்பிடுவாள்.

இன்னும் பல உதாரணங்கள் உள்ளன. இவனை விடக்கூடாது என்று நாங்கள் கோயில் பூசைக்கு வரி கேட்டோம். 61 மலேசிய வெள்ளி கொடுத்தான். கோவிலுக்கு வந்து எங்களைப் பார்த்து "ஹலோ" சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

நாடறியாத, இறுதி நாளில் வெளிப்பட்ட மதமாற்றங்கள் பல உள்ளன.

இந்திய நாடு போற்றிய ஒரு பெருந்தலைவர், திருமணத்தின்போது மதமாறிக்கொண்டார், பின்னர் அது மறைக்கப்பட்டது என்று இணைய தளத் தகவல்களில் முன் வந்தது அறிவேன்.

பெயர் ஓர் அடையாளக் குறியாகலாம். ஆனால், முற்றிலும் நம்பத் தகுந்தது அன்று.

இப்படி எழுதியபின் வாதம் ஓரளவு அடங்கிவிட்டது.
------------------------------------------------------------------------------------------------------------
கம்பதாசன் :   அருள்தாரும் தேவமாதாவே என்ற  புகழ்பெற்ற பாடலை  எழுதியவர்.

கண்ணதாசன் :  ஏசு  காவியம் பாடினார் .


சனி, 21 நவம்பர், 2015

mUshikam மூஞ்சூறு

உறுதல் என்ற சொல் தமிழில் மிகுதல் என்று பொருள்படுதல்.அறிவீர் .

மூஞ்சி  உறு >  மூஞ்சூறு  :  மூஞ்சி நீண்ட சிறு விலங்கு.1

இது கதவாணர்க்கு விளங்கியதோ இல்லையோ,  அவர்கள் அந்த விலங்குக்கு ஒரு சொல்லைப் படைக்க விழைந்து:

மூஞ்சி + இகம்1 ‍ மூஞ்சிகம்  அதாவது மூஞ்சி சற்று விரிந்த  விலங்கு என்ற பொருளில் ஒரு சொல்லைப் படைத்தனர். இச்சொல்லும் அழகுடன் அமைந்திருந்தது.  மூஞ்சிகம் என்பது வெளிப்படையாகத் தமிழாக இருக்கவே, 2

மூஞ்சிகம் >  மூசிகம் ஆனது. நன்றாக இல்லை. இறுதியில் மூஷிகம் ஆயிற்று,

ஒரு புதிய இனிய சொல் கிட்டியது......

குறிப்புகள்:


1. மூஞ்செலி   நச்செலி  என வருவன காண்க .

2. இகுத்தல் -  (பல பொருள் உடையது ).  இதிலொன்று:  விரிதல் (to spread out).  இகுத்தல்  >  இகம்  (இகு + அம் )

3 முன் > மூன் >  மூஞ்சி   தலை நீண்டு விகுதி பெற்ற சொல்.  இப்படித் தலை நீண்ட பலவும்  முன் இடுகைகளில் கண்டு பட்டியலிட்டுக் கொள்க.


மறப்புமங்கை

நினைப்பதை விடுப்பதோ மனமே‍=== நீ
மறப்பதில் ஒப்புயர்வு இலாதவளே!
இணைப்புறக் கருத்துகள் வாராமல் நிற்கையில்
முனைப்புற இழுத்துவா முன்னவற்றை


நினைப்பறைக் கதவுகள் சாத்திவிட்டாய்
மறப்புமங் கையுடன் கூத்தடித்தாய்
உனை ந‌ம்பி செயல்படத் தொடங்கிய எனை வெம்பிக்
கரைந்தழச் செயல்தகுமோ முறையோ


This is not about anything relating to my output for this blog or literary work.
It is about something you may never be able to guess. Just enjoy the riddle.