செவ்வாய், 10 நவம்பர், 2015

vAlmiki and his mother tongue,

இந்தப் பெயர்களைப் பாருங்கள்:

இர்  >  இராமர் >  ராமர்.
இர் >   இரா வண்ணன் > இராவணன் >  ராவணன்.
விழு + பீடு + அணன் >  வி + பீடணன் = விபீடணன்.>  விபீஷணன் 
கை கேசம் இ  > கைகேசி >< கைகேயி.
ஆழ்ந்த நேயம் >  ஆழ்ந்தநேயர் >  ஆஞ்சனேயா
ஆய்ந்த நேயர் > ஆஞ்ச நேயர்  என்றும் வரும்,  
ஆய்ந்த =  தேர்ந்தெடுத்த;  "  ஆய்மயில் கொல்லோ?":  குறள். 
மரை  ​+ ஈசன் =  மரையீசன் >  மாரீசன்   ;  மரை -  என்பது மான்  தமிழ்.
இறைவர் >  இஷ்வர் > ஈஷ்வர் > ஈசர் /  ஈசன் 

காட்டு வாசியான வால்மீகி  பிராமணர் அல்லர் .  பால்மீகி >  வால்மீகி  என்பது  ஒரு  தாழ்ந்த சாதியின் பெயர்,   அன்று உயர்வானவர்களாய்  இருந்தனர்!?  இதில்  நமக்குக் கவலை இல்லை.  அவர் என்ன மொழி பேசினார்?   சமஸ்கிருதம்  பேசினர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.  சமஸ்கிருதத்தை  அவர்தம் காட்டுவாசிக் குடும்பம் பேசியதா?

அண்மைக் காலம்வரை பல்வேறு  திராவிட மொழிகள் வட இந்தியாவில் வழங்கி  வந்தன.  இவை பலுச்சிஸ்தானம் வரை நீண்டு வழங்கின.  எழுத்து  இல்லாத மொழிகள்.  அவற்றுள் பல அழிந்தன.  1970ல் வழங்கின  சில 
இப்போது  இல்லாதொழிந்தன .

இந்த ஆதிப்புலவர் எந்த மொழியில் எழுதினார்?   சம்ஸ்கிருதத்துக்கு அப்போது  எழுத்துக்கள் இல்லையே!.

ஏன் தமிழில் பிரிக்க,  பொருள் கிடைக்கிறது?

இவற்றைக்  கண்டு  தெரிவிக்கவும்.    
   

வேசி சொல்லமைப்பு

வேசி என்ற சொல் ஓர் இழிவழக்கு என்று சொல்லத் தக்கதாகும்.தமிழரிடைச் சிற்றூர்களில் இன்னும் வழக்கில் உள்ள பதம் ஆகும்.  பொருள் பதிந்தது  பதம். பதி + அம்  =  பதம். பதிதல் -  உள்புகுந்து இருத்தல். 

முன் இடுகைகளில் யகரம்  சகரமாகத் திரியும் என்று கண்டோம்.  மயக்கு > மயக்கை>  மசக்கை  என்பது  முன் இடுகைகளில் நீங்கள் கண்டவற்றுடன் கூடுதல் ஒன்றாக வைத்துக்கொள்க.

வேய்தல் என்றால்  மேல்  போடுதல் ;   மேல்  அணிதல் .  மேலிட்டுக்கொள்ளல்.  .  கூரை வேய்தல் ஓர்  எடுத்துக்காட்டு.   பொது மகளிர் தங்கள் மேனியில்  வாசனைப் பொருள்களைப்  பூசிக்கொள்வதும்,  அழகிய ஆடைகளை  அணிந்துகொள்வதும் மை இன்மணக் குழம்புகள் முதலியவை பூசிக்கொள்வதும் ஆகியன செய்வர்,  தலையிலும்  கழுத்திலும் மார்பிலும்  கைகளிலும் அணிகள் கூடுதலாகத்  தரிப்பர்   இதனால் இவர்கள் வேய்ந்து கொள்பவர்கள் .  மைவிழியார் மனையகல் என்றாள்  ஔவைப்பாட்டி,

கிண்கிணி தண்டை சதங்கை சிலம்பொலி 
எங்கும் இசையுடன்  முழங்க ----  கால்கள் 
தகதிமி தகதிமி தகதிமி தகவென தாளம் போட 
மைவிழி  கைவளை யாட 
மரகத மணி வளை ஆட 
உம்முடன் ஆடுவேன் 
புதுமலர்  சூடுவேன் 
புலவி மன மகிழக் குலவி  அனுதினமும்
புதுமலரணைதனில்  கூடிடுவேன் 

என்பது  கவிஞர்  சந்தானம்  வரைந்த பாடல்.   தேவரடியாள்  தன்    வாடிக்கையாளனிடம்  மலர்க்கணை தொடுப்பவள் என்கிறார்  கவி பாப நாசம்  சிவன் .

ஆகவே :

வேய்தல் >(  வேயி  ) >  வேசி    

என்றமைந்ததே  வரைவின்மகளிரை ( வரம்பு கடந்த மகளிரை ),  பரந்து  ஒழுகும்  பரத்தையரைக்  குறிக்க வந்த  குறைதரம் உடைய சொல்.

வேய்ந்து  மயக்கும் வேயியரை  வேசியர் என்று கண்டுகொள்க .  

இப்போது  மேல் யாம் குறித்த "வரைவின்மகளிர் " என்ற தமிழ்ச்சொல்லை, சமஸ்கிருதத்தில்  எதிர்கொண்டு  மகிழ்ச்சி கொள்வோம்,    வரைவு  =  வரம்பு,  வரையறை.  இல் = இல்லாத,  மகளிர் =  பெண்கள்.  வரைவின்மகளிர் என்பது தமிழில் அமைந்த ஒரு சொன்னீர்மைப் பட்ட தொடர்,  இதை vAravanitA  "வாரவனிதா " என்று   கிருதமொழி  எடுத்துக்கொள்கிறது. இல் என்ற நடுச்சொல்  இல்லையானதுடன், மகளிர் என்பதுக்குப் பதிலாக "வனிதா " என்ற அழகிய சொல் கூட்டப்பெறுகிறது,  வனிதா என்பதும் வனப்பு என்ற தமிழுடன் தொடர்பு உள்ள சொல்.  வாரவனிதா ஈரானிய மொழியில் உள்ளதா என்று தேடிப்பார்க்கவும்.

 வேசி  என்ற தமிழ்ச்சொல்லும்  கிருதத்தில் சென்று  பொருதுகின்றது,  இதனால் கிருதவளம்  பெருகுவதாயிற்று,  வேசி  குறிக்க   27  சொற்கள்  கிருதத்தில்        உள்ளன ,
  ஷுண்டா  என்ற கிருதமொழிச் சொல் மலாய் மொழியில் "ஸுண்டால் "  (பொருள்  வேசி )   என்று திரிந்து வழங்கும்.   "பெரெம்புஅன்  சுண்டால் "
என்பர்

ய  -  ச  திரிபு:    கூடுதல்   எடுத்துக்காட்டுகள் 
http://sivamaalaa.blogspot.sg/2015/11/blog-post_5.html 

http://sivamaalaa.blogspot.sg/2015/11/blog-post_5.html

Tamil words for screw and spanner etc

இவற்றுக்கான   தமிழ்ப்பெயர்கள் இப்போது  மறக்கப்பட்டு வருகின்றன.

இவைகளைப் பயன்படுத்துங்கள்.

screw nail  = மறையாணி ,   திருகாணி 

spanner =  மறைமுடுக்கி   (  மறைமுடிக்கி என்கிறது தமிழ்ப் பேரகராதி )

screw  driver  -   திருகுகோல்,  திருகி,  திருகோட்டி,  மறைக்கோல்.  தக்கைமுறுக்கி. மறையிறுக்கி.