சனி, 31 அக்டோபர், 2015

திரிபுகள் தரு வரு, அரு & ors

வரு என்னும் பகுதி வார் என்று திரியும்.  இதை வாக்கியமாக எழுதாமல் இப்படிக் காட்டலாம்:

வரு >  வார்.

இதனை,  வாராய், வாரான் (வர மாட்டான்) முதலிய வடிவங்களில் காணலாம்.)

இதேபோல் 

தரு >  தார்.  ( தாரீர் ,  தாராய் )

இரு என்ற எண்ணுப்பெயரும் ஈர்  என்று திரியும்.


இரு >  ஈராயிரம்.   ஈருருளி .

இருத்தல் என்ற வினையும்  "உள்ளிழுத்தல் " என்ற பொருளுக்கு  மாறும்போது ஈர்த்தல் என்று   திரியும்.   இரு>  ஈர் . வெளியிலிருப்பது  உள்ளில் இருக்கச் செய்தல் நிகழ்கையில்  ஈர்த்தல்  நிகழ்கிறது.  ஈர்த்தல்  என்பது ஓர்  இடை நிகழ்வு,   இரு >  ஈர்  :   இரு. an intermediate act.   தமிழ் உள்ள சொல்லையே  திரித்து இன்னொரு சொல்லை அமைக்கும் திறனுடைய மொழி  

தேவ நேயப் பாவாணர் விளக்கம்:

அரு  >  ஆர் >   ஆரி.

:ஆரிப் படுகர் :   (  மலைபடு .  161.)    ஆரி -  அருமை.
ஆரி ஆகவம் சந்தத் தளித்தபின், ( சீவக . 139.)  ஆரி - மேன்மை .
ஆரி  (  சூடாமணி )    -   அழகு
ஆரி  borrowed by Greek,  aristos   best, noble.

from: வடமொழி வரலாறு ,  பக். 24. இளவழகனார் பதிப்பு. 1

தரு வரு, அரு திரிபுகள் 
--------------------------------------------------------------------
Notes:  editor's
1, 491.109.
2 894,8115 முத்துக்குவியல், 

வியாழன், 29 அக்டோபர், 2015

3 - 5 God functions

இறைவனின் முத் தொழில் யாவை,  அவன்றன்   ஐந்தொழில்  யாவை என்பதைப் பார்ப்போம்.

படைத்தல்  காத்தல்  அழித்தல்  என்ற முத்தொழிலுடன்,  மறைத்தல், அருளல்  என்பவற்றையும் செய்வோன் இறைவனாகிய சிவம்.  ஆகவே ஐந்தொழிலாகிறது.  மறைத்தலாவது, மாயைகளை உண்டாக்கி உண்மைத் தன்மையை  ஒளித்துவிடுதல். (தெளிவாக்காதிருத்தல்)
திரோபவித்தல், ஆன்மாவை மயக்கஞ் செய்தல். திரோதானம்  என்றும் கூறுவர்.1

சிவஞான போதம் முத்தொழிலைக் குறிப்பிடுகிறது.  அம்பலவாணன் ஐந்தொழில்புரிகுவன் எனினும்  முத்தொழில்களே அவற்றுள் முன்மை பெற்று நிற்பவை..

உலகு தோன்றுதலும் ஒடுங்குதலும் இந்த முத்தொழில்களின் பயனே என்பார்,   இப்பயன் அல்லது விளைவைக் குறிக்க மூவினைமை என்ற சொல்லாட்சியை முன்வைக்கிறார்.,

அவன், அவ:ள்  அது:    உலகிலுள்ள பொருள் மூன்று.
படைத்தல், காத்தல், அழித்தல் =    மூவினை. இங்கு வினை என்றது  தொழிலை,  எனவே முத்தொழில்.
தோன்றுதல்  ஒடுங்குதல் :  மூவினைமை.  அதாவது மூவினைகளின்  பயன். அதாவது முத்தொழில்களின் நேர்விளைவு .
திதி அல்லது நிலை. அந்தம். ஆதி.
மலம்:   (தீவினை) .காரணம்.

திதி : இது ஸ்திதி எனவாகும்.

மூவினைமை :  இதில் "மை" விகுதி என்ன குறிக்கிறது?   பயன் அல்லது விளைவு குறிக்கின்றது.  மை என்பது உண்மையில் மெய் என்பதன் திரிபு என்கிறார்  டாக்டர் மூ. வரதராசனார் . ஆகவே முத்தொழில்களின் வெளிப்பாடு,  போந்த உருவம்  அல்லது பயன் . நல்வினை தீவினை என்ற வினைகள் வேறு.

===============================================
Notes:

1. also: திரோபவம் tirōpavam
n.  (Šaiva.) Function of veiling or darkening, designed to keep the souls engrossed in the experiences of the world until their karma is completely worked out Tam.Lex.

அந்தமாதியும் ஆதியந்தமும்

அந்தமாதி என்மனார் புலவர் என்கிறது சிவஞான போதம்.  நாம்  நாடோறும்   கேள்விப்படுவது  "ஆதி  அந்தம்"  என்பதுதானே!

அந்தம் ஆதி என்று தலைமாறி  வந்தது ஏன் ?  இதற்குக்  கடவுள் என்று  பொருள் கூறினர் அறிஞர் சிலர். இதை  யாம் குறித்துள்ளோம்.

http://sivamaalaa.blogspot.sg/2015/10/httpsivamaalaa.htmll

http://sivamaalaa.blogspot.sg/2015/10/blog-post_27.htmll


தோன்றியதே  ஒடுங்கும்  (அழியும் ) என்று  நூலாசிரியர்  முன்வரிகளில்  கூறியுள்ளபடியால் அதை விரித்து விளக்கவே  " அந்தம் ஆதி " என்கிறார் என்பது எம்  கருத்து ஆகும்.  உலகம் அழிந்து  இவ்  அழிவிலிருந்தே மீண்டும் ஆதி ( ஆகுதல்,  உருவாக்குதல் ) ஏற்படும் என்பது பொருளாம்.

முட்டையும் கோழியும் போல  அந்தம் ஆதி மாறி மாறி  வருகிறது.

இதற்கு மறுப்பு உண்டாகலாம். கூறியதே எப்படி மீண்டும் கூறலாம் என்பதுதான் அது, உறுதிப்படுத்தி உரைத்தற்  பொருட்டு இது நிகழலாம் என்று கொள்ளுதல் கூடும். 

நீங்கள்  சிந்தித்து இதை ஏற்கவோ தள்ளவோ செய்துகொள்க.