வியாழன், 22 அக்டோபர், 2015

தந்திரம் - மற்றொரு முடிபு

இனித் தந்திரம் என்ற சொல்லுக்கு மற்றொரு முடிபும் கூறுவோம்.

ஓர் இக்கட்டான  நிலையில் அதைத் தவிர்க்கும் வழியைத் தந்து  தன் இருப்பு எப்படியும் குலைந்துவிடாதிருத்தல்  ஒரு தந்திரம் ஆகும்.   தன் நிலைபோல்  பிறர் நிலை காத்தலும்  அதுவே.

ஆகவே  தந்து + இரு + அம்  =  தந்திரம்  ஆகிறது.

இனி  இரு  என்ற சொல்லினை இறு  என்பதன் திரிபாய்க் கொள்ளினும் இழுக்காது.

இறுதல்  எனின்  முடிதல் இறுத்தல் எனின் முடித்தல்.

தந்திறம்  தந்திரம் ஆயிற்று என்று   அறிஞர் \கூறுவதால்  தந்திறம்  தந்து முடித்தல் என்று கொள்ளுதலும்  ஆகும் என்று அறிக .

ஒரு காரியத்தில் ஏற்படும் தடைக்கு அல்லது இடையூற்றுக்கு தீர்வு தந்து முடித்தலாம்..


செவ்வாய், 20 அக்டோபர், 2015

தந்திரம்.

தந்திரம்.

இப்போது தந்திரம் என்ற சொல்லை ஆய்வு செய்வோம்.

றகரத்துக்கு ரகரம் பரிமாற்றமாக வரும் சொற்கள் உள.  தமிழின் வரலாற்றில் ரகரமே முன் தோன்றியதென்று தெரிகிறது. பின்னரே றகரம் தோன்றியது.   

இரு ரகரங்களை இனைத்து  றகரம் அமைக்கப்பட்டது. எழுத்துருக்களை ஆய்வு  செய்தாலே இது புலப்படும்.

ர >  ரர > ற.

மலையாளத்தில் ற என்பது இரு ரகரமாய் எழுதப்படும்,

 எனவே,  ர <> ற.

திறம் >  திரம்.

தன் + திறம் >  தந்திரம்.

தன் சொந்தத் திறத்தைப் பயன்படுத்துவதே  தந்திரம் ஆகும்.

சொல்லமைப்பில் ஒரே சொல்லாக உருவாக்குகையில் தன்றிரம் எனறு அமையாது.  தனித்தனி முழுச்சொற்கள் நிலைமொழியும் வருமொழியுமாய்ப் புணர்கையில் தன்றிறம் என்று வரும்.

தம்+ திரம் = தந்திரம் எனினுமாம் .  தந்திரம் என்ற சொல்லின்  நுண்பொருள்  இப்போது  சற்று  வேறுபட்டுள்ளது..    இதிலிருந்து தோன்றிய  அயன்மொழிக் கருத்துகளின்  காரணமாக   பொருள் விரிவுற்றுள்ளது   நாம் இங்கு கருதியது  சொல்லமைப்புப் பொருளையே. தன்  தம் என்பவற்றின்  எண்ணிக்கைக் கருத்துகள்  (ஒருமை பன்மை)   தந்திரம் என்பதில்  அறுந்தொழிந்தன. 


This has been also said by other scholars before.

மரத்தடி two meanings

சில சொற்களை இரு வகையாகவோ  அதற்கும் மேலாகவோ பிரிக்கலாம். இருவேறு பொருள்கொள்ள இத்தகைய சொற்கள் இடம்தரும்.இத்தகு சொற்கள்ளையும் தொடர்களையும் தேர்ந்தெடுத்து  அவற்றைச்  செய்யுட்களில் அமைத்துக் கவிபாடிக் காலம் கழித்தோரும் உளர்.

இப்போது அத்தகைய ஒரு சொல்லைக் கவனிப்போம்.

சொல்:   மரத்தடி.

 மரக்கிளைகளுக்குக் கீழுள்ள  தரைப் பகுதியைக் குறிப்பது. இது:

மரம் + அத்து + அடி   =   மரத்தடி.

இதில் வரும் "அத்து"  சாரியை.   முன் உள்ள சொல்லையும் பின் வந்த சொல்லையும்  சார்ந்தும்  அவற்றுடன் இயைந்தும் வருதலால்,  "சார்+இயை " = சாரியை எனப்பட்டது,  

சாரியைக்குத் தனிப் பொருளேதும் கூறப்படாது.   எனினும்  "து"  என்பது  உரியது  எனக் கொள்ளுதல் கூடும்.

இதை விரிக்காமல் விடுவோம்.

இனி,

மரம் +  தடி =   மரத்தடி  \\\

அம்  குறைந்து அல்லது மகர ஒற்றுக் குறைந்து,   தகர ஒற்றுத் தோன்றியது. 

கொஞ்சம் நீண்ட  மரக்கட்டை  என்று பொருள்.   சிறிது தடித்ததாயும் இருக்கவேண்டும்.   மெல்லியது  "குச்சி " என்பர்.