செவ்வாய், 20 அக்டோபர், 2015

மரத்தடி two meanings

சில சொற்களை இரு வகையாகவோ  அதற்கும் மேலாகவோ பிரிக்கலாம். இருவேறு பொருள்கொள்ள இத்தகைய சொற்கள் இடம்தரும்.இத்தகு சொற்கள்ளையும் தொடர்களையும் தேர்ந்தெடுத்து  அவற்றைச்  செய்யுட்களில் அமைத்துக் கவிபாடிக் காலம் கழித்தோரும் உளர்.

இப்போது அத்தகைய ஒரு சொல்லைக் கவனிப்போம்.

சொல்:   மரத்தடி.

 மரக்கிளைகளுக்குக் கீழுள்ள  தரைப் பகுதியைக் குறிப்பது. இது:

மரம் + அத்து + அடி   =   மரத்தடி.

இதில் வரும் "அத்து"  சாரியை.   முன் உள்ள சொல்லையும் பின் வந்த சொல்லையும்  சார்ந்தும்  அவற்றுடன் இயைந்தும் வருதலால்,  "சார்+இயை " = சாரியை எனப்பட்டது,  

சாரியைக்குத் தனிப் பொருளேதும் கூறப்படாது.   எனினும்  "து"  என்பது  உரியது  எனக் கொள்ளுதல் கூடும்.

இதை விரிக்காமல் விடுவோம்.

இனி,

மரம் +  தடி =   மரத்தடி  \\\

அம்  குறைந்து அல்லது மகர ஒற்றுக் குறைந்து,   தகர ஒற்றுத் தோன்றியது. 

கொஞ்சம் நீண்ட  மரக்கட்டை  என்று பொருள்.   சிறிது தடித்ததாயும் இருக்கவேண்டும்.   மெல்லியது  "குச்சி " என்பர்.



Indonesian fires cannot be extinguished

மூச்சுக்கு நற்காற்று கிட்டுமோ இப்போதே
ஆச்சென்ற எண்ணமும் ஆமோவீண்  ----  சீச்சி
இருமல் சளியென்றே எல்லாம்தாக் கிற்றே
வருமோதான் தென்றல் இனி



Indonesia fires can't be put out, Malaysian minister warns


செய்தி இங்கே...................................

https://sg.news.yahoo.com/indonesia-fires-cant-put-malaysian-minister-warns-083942958.html


திங்கள், 19 அக்டோபர், 2015

தாகம்

கம்  என்பதை ஒரு பின்னொட்டாகக் கொண்டு  தாகம் என்ற சொல்லினை ஆய்வு செய்யலாம்.

எடுத்துக்கொண்ட சொல்: தாகம்.

தாகம் என்பதில்  தா மற்றும் கம்  உள்ளன

உடலுக்கு நீர் தேவைப்படும் அறிகுறியாகிய  தாகத்தின் தா என்பதில்  இதற்கேற்ற பொருளில்லை. தா:  நீர்விடாயைக் குறிக்கவில்லை.

ஏன் ?

தண்ணீர் தவிக்கிறது என்கிறோம். தவித்தல் என்ற ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்கொண்ட சொல்லின் திரிபுதான் தாகம்;

தவி + அம் = தாவம்.  இது முதனிலை திரிந்த தொழிற்பெயர்.

தாவம் >  தாபம்,  இது வகர பகரப் பரிமாற்றத் திரிபு.

என் தாபம் நீ அறியாயோ ? என்கிறது ஒரு பாடல்.

மனத் தாபம்  (  மனஸ்தாபம் ) என்பது வழக்கு

தாபம் >  தாகம்.  ப பின் க வாகத் திரிகிறது/

ஆகவே கம்  என்பது இச்சொல்லில் ஒரு பின்னொட்டு அன்று.

Read also:

http://sivamaalaa.blogspot.sg/2015/10/blog-post_19.html

http://sivamaalaa.blogspot.sg/2015/10/blog-post_19.html