ஞாயிறு, 11 அக்டோபர், 2015

சாமிஒன்றாய் இருந்தாலும் வேறு பட்டோர்

மனிதருள்ளே வேற்றுமைகள் கணித்துக் கூற
மாமேதை என்போர்க்கும் இயன்றி டாதே!
புனிதரொடு பாவிகளும் புரட்டர் தாமும்
போலிகளும் புன்மையரும் ஒருபக் கத்தில்!
வனிதையர்கள் ஆடவர்கள் உருக்கு றைகள்
வளர்ந்துயர்ந்த நெட்டையர்கள்  குறளர் மற்றும்
தனியழகில் வெள்ளைமஞ்சள் கறுத்த தோலர்
தனித்தனியே பேச்சில்பல மொழிகள் கொண்டோர்

சாமிஒன்றாய் இருந்தாலும்  வேறு பட்டோர்
சாற்றுங்கால் ஒருமையுறு சாய்வு கொண்டு
பூமிஒன்றாய்ப் புகப்பெற்றுப் போற்றும் வாழ்வைப்
புதைபொருளாய் அடைந்திடவோர் புத்தி வேண்டும்;
ஆமிதுவே புதுமையெனும் புத்தி ஆகும்
ஆழ்ந்தறிந்தார் அமைவினிலே  ஆங்குத் தோன்றும்
ஏமுறவே விழைந்தாரை ஈமக் குண்டால்
இரக்கமறக் கொன்றார்க்கு இல்லை அன்றோ

Our hearts are with the peaceful marchers killed in Turkey with bombs.....

வெள்ளி, 9 அக்டோபர், 2015

தலை நீண்ட பதங்கள்

சொற்களுக்குள்  பொருள் பதிந்து வைக்கப்படுகிறது. அதனால் அவை:

பதி + அம்  =  பதம்   ஆகும் .  பதி  என்பதில் ஈற்றில் உள்ள இகரம் கெட்டது .  
கெட்டது  என்றால்  விடப்பட்டது.

இரும்பு முதலிய கனிமங்கள் வார்த்து   எடுக்கப்படுவது போல  சொல்லும் வார்த்துக்  கொடுக்கப் படுகின்றது . அதனால் அது வார்த்தை.
வாய்  > வார் > வார்த்தை  எனினும் ஆம்.  ர் >< ய்  மாற்றங்கள் மொழியில் உள .

இரு வழிகளில் சென்று ஓர் இடத்தில் சேரும் சாலைகள் உள்ளன. அவை பல. 

இங்கு  தலை நீண்ட பதங்களைப் பார்ப்போம்.

வினைச் சொற்கள் பெயராகும்போது  சுடு  >  சூடு என்பதில்போல முதனிலை  நீளுதல்  உண்டு .

வினை அல்லாத சொற்களும் இங்கனம் நீளும்.

பசு (மை) +  இலை  = பாசிலை. 

பசு(மை) + ஊன் =  பாசூன்.

பசு + அம்  = பாசம் . வழுக்கல் இடங்களில் காணப்பெறும் பச்சைப்  படர்ச்சி.
பசுமையான மனவுணர்வு. 

பச்சைப் புளுகன் என்ற வழக்கு அறிக.  

பச்சைப் பொய் :  an unadulterated lie or pure lie. This means that there is no element of truth or iota of truth in it.  Sometimes a lie may have or may have been set upon a truth.

You a woman were sent home by your cousin brother in his car.  He leaves thereafter. A third party saw that and twists the event saying you have some illicit relationship with one male person.

That is a lie, but based on  a  true  event occurred.

பசு + அம்  +கு  =  பாசாங்கு  (நடிப்பு  )     அம்  >ஆம் )

பசு + இ =  பாசி.

கடற் பாசி :  In Malaysia and Singapore  there is  a  Chinese drink  which is also known as grass jelly drink. A tasty drink.( vegetarian.).   


"பாசிலை வாடா வள்ளியங் காடு."  (குறுந் .216.)

பசு+ இலை =  பச்சிலை என்றும் வரும்.
பச்சை + இலை  > பச்சிலை எனினும் ஆம்,

பாச்சா  -  முழு வலிமை  பயன்படுத்திய முயற்சி.   "பச்சை முயற்சி"   a try with no element of let up.    colloquial. 

பசுமை  ​  ஆ  =  பாச்சா.   ஆ என்பது ஒரு விகுதி. 

will edit. 

செவ்வாய், 6 அக்டோபர், 2015

நெய்யும் பையும்

ஒரு சமயம் கடைக்குப் போய் ஒரு பையில் சீமையிலந்தைப் பழங்களை (ஆப்பிள்) வாங்கி  ஒரு நெகிழிப் பையில்  (பிளாஸ்டிக்) போட்டுக்கொண்டு, வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தேன்

பை கிழிந்து, பழங்களில் ஒன்று சாலையில் உருண்டோடிற்று. வந்த மகிழுந்து அப்பழத்தைச் சப்பட்டையாக்கிவிட்டது. அதாவது பழம் நைந்து போயிற்று,

பாலைக் காய்ச்சித் தயிராக்கி , அதைக் கடைகடை என்று கடைந்து மோராக்கி வெண்ணெய் எடுக்கின்றோம். இதையெல்லாம் செய்யும்போது பால் ஒருவகையில் நைந்துதான் போகிறது. இதை உணர்ந்த நம் முன்னோர், நைந்து உருவாகிய நெய்யை நையிலிருந்தே தோற்றுவித்தனர்.

நை > நெய்.  ( ஐ >  எ )

அல்லது:

ந ய்  > நெ ய்.  (அ -  எ )

பழங்களைப்  பைக்குள் அல்லவோ பெய்து கொண்டு சென்றேன்?   பெய்தல் -  உள்ளே இடுதல்.  இப்படிப் பெய்ய உதவுவதே பை.

பாருங்கள் :

பெய்   > பை.   ( எ > ஐ )

அல்லது 

பெய் > பய் . ( எ  >    அ )

இச்சொற்களை கவனமாக ஒப்பிட்டு நுண்வேறுபாடுகளை உள்வாங்கிக் கொள்ளுங்கள்.

செய்ய உதவுவது கை.

ஆனால் 

மேற்சொன்னபடி பார்த்தால்  செய்  > சை என்று வந்திருக்க வேண்டும் அன்றோ?  பழங்காலத்தில்  சையில் தொடங்குவதில்லை.  ஆகையால், அதற்கு ஒத்து நிகழும் "கை"யில்  அது மாறியமைந்தது.  பல மொழிகளில் 
ச - க-வாக மாறும்  என்பதுணர்க.  ஆகவே சை> கை.

சேரலம்  > கேரளம் என்பதுபோல

நெய்யும் பையும் .