விகடம் என்ற பதத்தை முன் இடுகையில் கூறியவாறு வடமொழி வழியாகக் காட்டாமல் தமிழிலேயே காட்டுவோம்:
விழு+ கடம் : விழுகடம்> விகடம்.
இதில் ஒரு ழு மறைந்துள்ளது. விழு என்ற சொல்லை வி என்ற முன்னொட்டாகக் காட்டி கடம் என்று கொண்டு சேர்த்தாலும் அதன் உள்ளீடு தமிழ் என்பதை மறைக்கமுடியவில்லை
விழுகடம் என்பதில் ழு மறைவது ஓர் இடைக்குறை.
இயல்பு கடந்து விழுமியதாக நிற்பது என்று பொருள். வழக்கில் இது நகைச்சுவையைக் குறிக்கிறதன்றோ?
வேங்கடம் என்ற சொல்லிலும் கடம் உள்ளது, கடத்தல் அரிய வெம்மையான இடம் என்பது பொருள் கட அம் கடமாயிற்று,
இப்படி இடை ழுகரம் மறைந்த சொற்கள் உள ; இன்னொன்றைப் பார்ப்போம்.
ஆடு > ஆடை; இங்கு ஆடை என்பது விகுதி பெற்ற தொழிற்பெயர்,
ஆடு என்பது மட்டுமே நின்று பெயரானால் அது முதனிலைத் தொழிற்பெயர் எனப்படும் /
முழுக்கு ஆடு : முழுக்காடு > முக்காடு, அதாவது தலை முழுவதும் மூடிய ஆடை; தலை முழுக்காடை. முக்காடு என்ற சொல்லுக்கு இறுதி ஐ விகுதி
தேவைப்பட வில்லை; ஆடு என்ற தனிச்சொல் மட்டும் ஆடையைக் குறிக்கவருமானால் பொருள் தெளிவின்றிப் போமிடங்களும் தோன்றுதற்கு வாய்ப்பு உண்டு . முக்காடு என்பதில் அவ இடையூறில்லை/
பிற பின்