புதன், 16 செப்டம்பர், 2015

Suffix aNam அணம்

அணம் என்ற   தொழிற்பெயர் விகுதி தமிழில் பல சொற்களில் வருகிறது.
அவற்றுள் சிலவற்றைச் சிந்திப்போம்.  வினை அல்லாதனவும் இவ்விகுதி பெறுதல்  உ ண்டு. இவ்விகுதி பெற்ற சொற்கள் சில பிற மொழிகளிலும்  சென்று ஆட்சி பெற்றுள்ளன.

ப ட்டணம்
ஆரணம்
கட்டணம்
ஏரணம்
காரணம்
(சாரணம்)>   சாரணர்

தோரணம்
வாரணம்

என்று அவை பலவாம்.

இங்கு  அணம் என்ற விகுதியைமட்டும் ஆய்வு செய்வோம்.

அ என்பது சுட்டு. இச்சுட்டு அந்த அது , எனல் தொடக்கத்துப் பலவற்றின் மூலம்.   

அ >  அண்.

அண் என்ற அடிச்சொல் அடுத்திருத்தலையும் குறிக்கும்

அண் > அண்முதல்.  அண்மித்தல்.
அண் > அண்டை.
அண் > அண்மை.
அண்> அணிமை.
அண்> அணை.

அண் >  அணைத்தல்.
அண் >  அணை>    அணைக்கட்டு.
அண் > அணி >   அணிதல்.
உடலை அடுத்து நிற்பது ஒருவன் ஆடையும் அணிகலன்களுமே.

சேலை முதலியன உடலை அணைத்துக்கொண்டு நிற்பன.  சேலை இடையையும் கால்களையும்  அணைத்து நிற்பது. = >  >

கருவி  >   செய்தற்கு உதவும் பொருள்.
கரு    செய்தற்கருத்து உள்ள பழஞ்சொல்.

கரு+ அணம் =  கார்+ அணம் =  காரணம்.1
கரு+ இயம் > கார்+இயம் =  காரியம்.

வருமொழி முதல் உயிர்வர கரு கார் ஆனது.

செயலை அடுத்து நிற்பது அதன் காரணமே.

அணம்  -    அடுத்தற்கருத்து உள்ளமை காண்க.

அண்+ அம் =   அணம்.

இங்ஙனம்  அமைந்த்ததுவே  அணம் விகுதி.



--------------------------------------------------------------------------------------
1.  Expounded by Dr  G Devaneyap Pavanar.

திங்கள், 14 செப்டம்பர், 2015

Pak neither Nation nor State!!

This is a good book to read. It is written by  Sumit  Ganduly. You may wish to read and enjoy:


Pakistan :  Neither a State nor a Nation.


What is then the definition of a State or a Nation?  Any difference in meaning?

https://books.google.com.sg/books?id=UDi9e0F-zoIC&pg=PA95&lpg=PA95&dq=the+strength+of+pakistan+claim+on+kashmir&source=bl&ots=YqKpxAZTiL&sig=w8ZxSF1tB6oLZg1dv0jtxGM0v3o&hl=en&sa=X&ved=0CDwQ6AEwBWoVChMI17zilIj4xwIVUo6OCh0drQKz#v=onepage&q=the%20strength%20of%20pakistan%20claim%20on%20kashmir&f=false

ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

ANOTHER WORD FOR EXAMPLE காண்மானம்

காண்மானம் என்ற  சொல்  பேச்சு வழக்கில் இருந்த சொல்.   இது ஏறத்தாழ எடுத்துகாட்டு,  உதாரணம் என்பவை  போன்ற பொருளை உடைய சொல் ஆகும்.

மானம் என்பது ஒரு தொழிற்பெயர் விகுதி.  மான  என்பது ஓர் உவம உருபாகவும் இருக்கின்றது. மானுதல் என்பது ஒத்திருத்தல் என்னும் அடிப்படைப் பொருளை உடையதென்பதையும் கவனிக்கவேண்டும்.

மா என்ற மூலச்சொல்  அளவு என்றும் பொருள்தரும்.

வெப்பமானி  என்ற கருவியின் பெயரில்  "மானி":   அளவுக்கருத்து உள்ளது/

காண்மானமென்பது  காமானம் என்று பேச்சில் திரியும்.

ஆங்கில அறிவு படைத்தோரின் வழக்கில் இச்சொல் இல்லை என்னலாம்.

"மானம்"  விகுதி பெற்ற வேறு சொற்கள்
--------------------------------------------------------------
39. மானம்  3189)
(தேவா. 1200, 10).
மானம்
; தொறுப்பொருளில் வரும் இடைச்சொல். தினமானம் இது நடந்து வருகிறது.


 தீர்மானம்,  பிடிமானம்,  சாய்மானம் பெறுமானம்    எனப் பல உள.