ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

sumangali puja

சிங்கப்   பூர்  போத்   தோங் பசிர் ஆலயத்து,
இனிதே முடிந்தது சுமங்கலிப்  பூசை
இன்னமுது உண்டனர் ஏகினர் மக்கள்
கனிகளும் பூக்களும் கணக்கில் அடங்கா
சேலைகள் துணிமணி சால  அழகின
கணபதி துர்க்கை  தென்  திசை மூர்த்தி
சிவனெனும் தெய்வம்  போற்றித் துதித்தனர்
காலையில் தொடங்கி நண்பகல் காறும்
பத்தி செய்தனர் பரவயம் ஆயினர்
சங்கத மந்திரம் தமிழிசைப்பாடல்
தமிழர் தம்முடன் பிறரும் கலந்து
அமுத மழையில் நனைந்தது
அருஞ்சிறப்புற்ற  அழகிய நிகழ்வே

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

திருடராய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால்

கள்ளன் பெரியோனா
காப்பான் பெரியோனா என்றால்
கள்ளனே பெரியோன் என்றனர்
கருத்துடைய பலர்;

எத்தனை காவலர்கள்
சுற்றிவந்த போதிலுமே
அத்தனை கண்களையும் கட்டிவிட்டு
ஆவனவற்றை போவன ஆக்கிவிடுகிறார்கள் கள்ளர்.

திரை போற்றிய பெருங்கவிஞர்
பட்டுக்கோட்டையார் பாடவில்லையா?
திருடராய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாதென்று

இந்தத் திருட்டிலிருந்து நாம் தெரிந்துகொள்வது என்ன ?


SINGAPORE CAR REPORTED MISSING OUTSIDE JOHOR BARU SHOPPING MALL; SECOND CAR LOST IN 3 DAYS

http://www.stcars.sg/guides-articles/singapore-car-reported-missing-outside-johor-baru-shopping-mall-second-car-lost-in-3-days-146367#

http://www.straitstimes.com/singapore/courts-crime/singapore-car-reported-missing-outside-johor-baru-shopping-mall-second-car

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

சிங்கை வண்டிகள் மலேசியா சென்றிட

சிங்கை வண்டிகள்   மலேசியா சென்றிட
ரிங்கிட் இருபதைச் செலுத்தவேணும்==உங்கள்
பங்கை ஆற்றிடில் தங்கு தடையின்றி
எங்கும் பறந்தோட யார் மறுப்பார்?

முன்பே விதித்தனர் போக  வரக்காசு
முணுமுணுப் பென்னவோ கொடுத்திடுங்கள்----நாங்கள்
நண்பரே கணித்ததில் முப்பதைத் தாண்டுது
நலம்பெறப் பணம்தர நாணம் என்ன?