வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

திருடராய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால்

கள்ளன் பெரியோனா
காப்பான் பெரியோனா என்றால்
கள்ளனே பெரியோன் என்றனர்
கருத்துடைய பலர்;

எத்தனை காவலர்கள்
சுற்றிவந்த போதிலுமே
அத்தனை கண்களையும் கட்டிவிட்டு
ஆவனவற்றை போவன ஆக்கிவிடுகிறார்கள் கள்ளர்.

திரை போற்றிய பெருங்கவிஞர்
பட்டுக்கோட்டையார் பாடவில்லையா?
திருடராய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாதென்று

இந்தத் திருட்டிலிருந்து நாம் தெரிந்துகொள்வது என்ன ?


SINGAPORE CAR REPORTED MISSING OUTSIDE JOHOR BARU SHOPPING MALL; SECOND CAR LOST IN 3 DAYS

http://www.stcars.sg/guides-articles/singapore-car-reported-missing-outside-johor-baru-shopping-mall-second-car-lost-in-3-days-146367#

http://www.straitstimes.com/singapore/courts-crime/singapore-car-reported-missing-outside-johor-baru-shopping-mall-second-car

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

சிங்கை வண்டிகள் மலேசியா சென்றிட

சிங்கை வண்டிகள்   மலேசியா சென்றிட
ரிங்கிட் இருபதைச் செலுத்தவேணும்==உங்கள்
பங்கை ஆற்றிடில் தங்கு தடையின்றி
எங்கும் பறந்தோட யார் மறுப்பார்?

முன்பே விதித்தனர் போக  வரக்காசு
முணுமுணுப் பென்னவோ கொடுத்திடுங்கள்----நாங்கள்
நண்பரே கணித்ததில் முப்பதைத் தாண்டுது
நலம்பெறப் பணம்தர நாணம் என்ன?

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

விமரிசை

விம்முதல் என்பதற்கு ஒலித்தல் என்றும் பொருள் உள்ளது. மேலும்  மகிழ்வுறுதல்  பருத்தல் அல்லது பெரிதாதல் என்பனவும் உள.

விம்மு+ அரு+ இசை  >  விம்+ அர் + இசை =  விமரிசை .

விம்மு என்பதில் அடிச்சொல் விம் என்பதே. அள் >  அள்ளு,   எண் ,  எண்ணு  என்பவற்றில் போல்  உ என்பது வினைச்சொல் இறுதி .

அர் என்பதும் ஒரு சொல்லிறுதி   இதை  இடக்கர்  மம்மர் முதலிய சொற்களை ஆய்ந்து  அறிக 

அர்  என்பது  அரு என்பதன் அடி. இங்கு இடை நிலையாய் நின்றது/  இது ஆரென்று திரிதலும் உண்டு    அரு+ உயிர் =  ஆருயிர்.     அரு > ஆர்.     பின்  ஆர்+ உயிர் =  ஆருயிர் எனினும் ஆம்.

விம்    அகிற் புகையின்  மேவி (சீவக. 2667).  விம் =நிறை(தல்.)

விம்: விம்மர் :  விமர் என்ற சொற்கள் தனியாய்க் கிடைக்கவில்லை. தமிழ்போலுமொரு பண்டை மொழியில் வழக்கிறந்தன பல.  


எனவே விமரிசை என்பது மிகுந்தொலிக்கும் இசை;  பேரிசை   மகிழிசை  எனவே கோலாகலம் என்று பொருள் தருதல் அறிக

குறிப்பு:    மரிச   அல்லது மரீச  என்பது பாலென்று பொருள்படும்  சமஸ்கிருத மொழியில்.   வி என்பது பொருத்தமென்று பொருள்படுவது,   ஆகவே  விமரிசையாக  நடைபெற்றது  என்பதை  பொருந்திய பாலாக இருந்தது  என்று  சொல்லலாம் என்றாலும்  பொருந்தவில்லை .  விமரிச  என்ற முழுச்சொல் கிடைக்கவில்லை.  நிங்கள் சங்கத நூல்களில் தேடிப்பாருங்கள்..

இயைதல்   -    இசைதல்        இது  ய  . >  ச  திரிபு.   இயைதலாவது  மிகுந்த பொருத்தமுடையது ஆதல்.   விம் அர்  இசை  எனற்  பாலது   மிகுந்த அரிய  பொருத்தம் உடையது என்றும்  பொருள் கூறலாம்.  தமிழிற்  சிறந்த பொருள் தருகிறது   அறிக