திங்கள், 1 ஜூன், 2015

சாக்கடை மூடி திருடி

சாக்-கடை மூ-டிகட்-கு  நல்ல  விலை!யே----  அவை
திரு-டியே விற்-பது-வும் என்ன கலையே!
பார்க்-கிற சாலையிரு பக்கம் வேட்டை --- அரசு
பணக்குவை நேர்தலையில் வீசும் சாட்டை.

காவல் துறைமாந்தர் கொண்ட விழிப்பு --- கள்ளர்
தமக்கு விளைத்திட்ட  கம்பி அழைப்பு
மேவும் பொதுவார்க்கு வந்த நலமே  -  நாடு
மேலில் செல்லல்குறிக்  கின்ற  புலமே.


https://sg.news.yahoo.com/red-handed-father-daughter-drain-cover-thieves-caught-224600645.html

Red-handed! Father-and-daughter drain cover thieves caught in the act

the root thodu and its offsprings

தொடு என்பதோர் அழகிய தமிழ்ச் சொல். இதுபோலும் பல சொற்கள் ஒவ்வொரு மொழியிலும் வாழ்கின்றன.  மனிதர்கள்  போலும் அவை  குடும்பமாக வாழ்கின்றன.  ஆகையால் ஒரு சொல்லின் குடும்பத்தை அறிந்துகொண்டால் அச்சொல் எந்த மொழிக்குரிய சொல் என்று  அறிந்துகொள்ளலாம் . குடும்பத்தை அறிய  அடிச்சொல் ஆய்வில் முனைந்து  ஈடுபடுதல் வேண்டும் .

தொடு>.தொடர்

தொடுதல் என்னும் நிகழ்ச்சி பலவாறு நிகழலாம்.  \தொடுகின்ற இடத்திலிருந்து  நீண்டு செல்வதை  தொடர்தல் என்கிறோம்.  அர்  என்னும் வினையாக்க விகுதியைப் பெற்று  இச்சொல் அமைந்துள்ளது.   இப்படி அமைந்த சொற்கள் பலவாம் .   இடு >  இடர்; படு >படர் ;   அடு > அடர்;   அர்  என்பது  பெயர்ச்சொல்லிலும்  வரும் 

தொடு  >  தொடை.

இது  ஐ என்னும் இறுதியைப் பெற்று அமைந்த சொல். உடம்பிலிருந்து தொடர்வது தொடை.
அசை , சீர், தளை  :   தொடுக்கப்படுவது தொடை.  

தொடு  தொ டி

கைகளைத் தொட்டு  நிற்பதுபோல் அணியப்படுவது தொடி  அல்லது வளையல். அன்றித்    தொடுதல் என்பது  தோண்டுதல் என்றும் பொருள்  பெறும் ஆதலின்  தோண்டப் பெற்று வளையமாக்கப் பட்டது  என்றும் பொருள் அமைதல் கூடும்.   நடுவில் உள்ளதைத் தோண்டி எடுத்துவிட்டால் சுற்றி இருப்பதோ வளையமாகிவிடும். இதற்கு மூங்கில் போலும் வட்டமான பொருள் வேண்டும் , பண்டையர் எப்படித்  தொடிகளைச் செய்தனர் என்பதை  இதிலிருந்து சொல்லலாம்  குறுக்கில் அறுத்து நடுவில் உள்ளீடுகளைத் தோண்டி எடுத்திட வேண்டும் .

தொடர்வோம்


வெள்ளி, 29 மே, 2015

இது என்ன குழப்படி

இது என்ன குழப்படி என்று விளங்கவில்லை. நீங்கள் படித்துப் பார்த்துப் புரிகிறதா என்று தெரிவியுங்கள். அமைச்சரவைக்கே  நேரம்  தேவைப்படுமாம்.
கட்டுரை எழுதியவர் சொல்கிறார்

http://blog.limkitsiang.com/2015/05/29/cabinet-should-be-given-adequate-time-for-ministers-to-understand-and-study-the-save-1mdb-roadmap-before-a-cabinet-decision-is-taken-while-najib-should-tell-all-about-his-1mdb-dealin/#more-31301



மண்டை  குழம்ப மசியாத வாசிப்பால்
கண்டதும் யாதென்று கண்டார்க்குத் தேனதுவாம்
பண்டு பொருட்கல்வி பற்றினார் பார்த்துரைத்தால்
உண்டு செரித்தாராய் நாம்

இப்பாடலின் பொருள்: 

மசியாத  வாசிப்பால்  -    வாசித்துப் பொருள் விளங்காமையினால் ; 
மண்டை குழம்ப  -   ஐயப்பாடுகள் மலிந்து தலை நோவு மிகுந்தது; ஒருவருக்கு   அப்படியாக இன்னொருவருக்கு ;,
கண்டதும் -   வாசித்து  முடித்தவுடன் ;
யாதென்று கண்டார்க்கு --  அதன் பொருள் கண்டுகொண்டவர்க்கு ;
தேன் அதுவாம்  -  அப்பொருள் அறிந்தமையினால்  அஃது இனிமை  உடையதாகும் ;
பண்டு  போருட்கல்வி பற்றினார்  -  முன்பே  பொருளியலைப் பயின்றவர்  ;
பார்த்து உரைத்தால் -   இக்கட்டுரையைப் படித்து  நமக்குப் பொருள் கூறினால்;
உண்டு  செரித்தாராய்  நாம் ---  உண்டபின் உணவு செரிமானம் அடைந்ததுபோல் பொருளை அறிந்துகொள்வோம் , பயன்பெறுவோம்  நாம்.
என்றபடி.