வியாழன், 26 மார்ச், 2015

பட்டாளம் என்ற சொல்

படை என்ற சொல்  படு+ ஐ  என்று பிரியும்.  இது போரிடுவோரைக்குறிக்கும் சொல்.  படுதல்   என்பதற்குப் பொருள் பல.  போரிடுதல் (தாக்குதல்) என்பதும் ஒன்று.

பட்டாளம் என்பது  படு + ஆளம் என்று பிரியும்.  ஆளம் என்பது இங்கு தொழிற்பெயர் விகுதியாய் வருகிறது.  இந்த "ஆளம்"  வினைச்சொல் அல்லாத வற்றுடனும்  இணைந்து சொற்களைப் பிறப்பிக்கும்.  "மலையாளம் "  எனல்போல.

பட்டாளம் என்பதில் டகரம்  இரட்டித்தது.

பட்டாளம் என்பதும் போரிடுவோரைக் குறிப்பதே.

அயினி food.

அயிலுதல் என்றால்  உண்ணுதல்  அல்லது நீர்  அருந்துதல்.

லகரம் னகரமாய்த் திரியும் என்பதை முன் ஓர் இடுகையில், அண்மையில்தான் எழுதியிருந்தேன்.  மறந்திருக்க மாட்டீர்கள். Click here:-http://sivamaalaa.blogspot.com/2015/03/blog-post_14.html

அயில் > அயிலி > அயினி.

அயினி:  பெண்வீட்டார் மாப்பிள்ளை வீட்டாருக்குத் தரும் விருந்து.  
இது தமிழ் நாட்டில் வழக்கில் உள்ளதாகத் தெரியவில்லை. கேரளாவில் உள்ளது.

தீண்தேர் நன்னற்கும் அயினி சான்மின் என்ற மலைபடுகடாம்  (பத்துப்பாட்டு)  காண்க.

சான்மின்  :   சால் + மின் .   சாலுதல் =  நிறைதல் ;   சான்மின்  -  நிறைக்க  என்பது. திண்தேர்  - திண்மையான தேரை உடைய ;  பலம் பொருந்திய தேரை உடைய 

நாம் எத்தனை சொற்களைத்தாம் இழந்திருப்பது.......

புதன், 25 மார்ச், 2015