திங்கள், 16 பிப்ரவரி, 2015

லீ சியான் லுங் நலம்பெற்று..........


நல்ல முறையில் நகர்நாடு சிங்கப்பூர்

வல்லலீசி   யான்லுங் வளர்க்கின்றார்  --- சொல்லுவனோ

புற்றுநோய்  கண்டறுவை போற்றி நலம்பெற்றுத்

தொற்றின்றித் தோன்றுவார் மீண்டு


PM Lee Hsien Loong's prostate cancer operation a success

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

கொழுக்கட்டை

உகரமும் அகரமும்  ஒன்றுக்கொன்று மாறி நிற்க வல்லவை  என்பதை முன் பலமுறை  இங்கு எழுதியுள்ளோம்.

 இந்நேரம்  நீங்கள் ஒரு பட்டியலே தயாரித்திருப்பீர்கள் என்று நம்பலாம்.

இதோ இன்னொரு சொல்.     குட்டை -  கட்டை.

குள் > குட்டை >  கட்டை  என்ற திரிபுகள் வேறு.  

கடு >  கடுமை;   கடு> கடினம்;  கடு+ ஐ = கட்டை  என்பன வேறு.

குட்டையனைக் கட்டையன் என்றும் சொல்வதுண்டு.   தொடர்பு அறிக.

கட்டை : நீளம் இல்லாதது  என்ற பொருள் படும் சொற்களில் ஒன்று: கொழுக்கட்டை.
கொழுவியது போன்றும் நீளமின்றியும் மாவினால் உள்ளீடு வைத்து ,  அவிக்கப்படுவது  கொழு + கட்டை.

   கொழு ( fat, fat-looking).

பார்க்கக் கொழுகொழு என்றிருக்கிறான் என்பர்.

சனி, 14 பிப்ரவரி, 2015

தாளிகைப் பலம்

மாபெரும் ஆற்றல்
மாநில மீதினில்
அரசுகள்  ஏறவும்
அவற்றின் வாழ்வு தீரவும்
தாளிகை என்னும் தரமுயர் பொருளால்
சாலும் அதற்கே  சரியீடு காண்கிலம். 
வேண்டிய வேண்டியாங்கு விழைந்தது செயவும்
காரணம் அதற்குப் பொருத்தமாய்க் கூறவும்
அவற்றிற் கன்றி  ஆகுமோ பிறர்க்கே?
விரும்பா தாரையும் வேறுவழி இன்றி
கரும்பெனப் போற்றும் கலைகை வந்ததே!
தொல்லை ஈதிவ் வில்லை வளைக்க‌
தொல்பழ மன்னர்க்கு வில்லங் கில்லை!
இதனின் வலிமை அறிந்தே
முதலதை அடக்க முனைந்தனர் சிலரே.