புதன், 14 ஜனவரி, 2015

Partaking in "பொங்கல் மகிழ்ச்சி"


தொழுதுண்டு செல்வோராம் நாமெல்லாம்  நாட்டில்
உழுதுண்டு வாழ்வோரின் பொங்கல் மகிழ்ச்சியில்
ஒன்றிணைந்து கொண்டாடிப் பொங்கலும் உண்டோமே
என்றும் இனித்தங்கும் இன்பு.

Ponggal greetings.

நிறுத்து > நிறுத்த nirudhdha skrt

நிறு > நிறுத்து என்பது நில் என்பதிலிருந்து திரிந்தமைந்த சொல் ஆகும்.
நில் என்ற அடிச்சொல் பல சொற்களைப் பிறப்பித்துள்ளது.

நிறுத்து என்பது நிறுத்தம் என்றாகி, பல்வேறு வகைகளில் பயன்பெறும்.

இது பின் பிற மொழிகளிலும் சென்று புகுந்தது.

நிறுத்து > நிறுத்தம் > நிறுத்த.

நிறுத்த (அல்லது நிருத்த ) skrt. niruddha
mfn. held back , withheld , held fast , stopped , shut , closed , confined , restrained , checked , kept off , removed

நிறுத்து > நிறுத்த என்பது பிறமொழியிலும் இடம்பெற்றுள்ளது, தமிழின் முந்தியன்மை காட்டுகிறது.


Happy ponggal to all our readers.

மூர்த்தி.

முகிழ் என்ற வினைச்சொல் மூர் என்று திரியும்.  புகு என்பது பேச்சு வழக்கில் பூர் என்று திரியவில்லையா?

அந்தப் பூனையால் அந்த இடுக்கிலே "பூர"  முடியலே

என்று பேசுவர்.

முகிழ்த்தலாவது :  தோன்றுதல்.  மேலெழுதல்.  

முகிழ் > மூர் >  மூர்த்தி.  

மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரிது.

"வாரும் வடமுந் திகழு முகிழ்முலை வாணுதலே " என்பதும் காண்க.  (யாப்.)