viruththam.
ஐயர் அரசர் அங்கிருந் தகன்றபின் இலங்கையிலே
செய்ய நினைத்த அனைத்தும் செய்யச் சிறிசேனரும்
உய்யத் தகுவன ஓங்கிட யாவும் ஒருங்கிணைத்துப்
பைய நடப்பன பாய்ச்சல் உற்றிடப் பணிசெய்வரே.
ஐயர் அரசர் : போப்பாண்டவர்; சிறிசேனர் : புதிய அதிபர்; பைய = மெதுவாக.
ஐயர் என்பது பாதிரிமாரையும் குறிக்கும். போப்பையர், கால்டுவெல் ஐயர் என்பன வழக்கு. இவர்களுக்கு அரசர் போப்பாண்டவர். இதனையே ஐயர் அரசர் என்று குறிக்கப்பட்டது. பாய்ச்சல் to denote speedy action.
With some changes. the above stanza is not viriththam.
ஐயர் அரசர் அவணிருந் தேகஇ லங்கையிலே
செய்ய நினைத்த அனைத்தும் செயச்சிறி சேனவரும்
உய்யத் தகுவன ஓங்கிட யாவுமொ ருங்கிணைத்துப்
பைய நடப்பன பாய்ச்சல் உறப்பணி செய்குவரே.