திங்கள், 15 டிசம்பர், 2014

மங்களம்

வெள்ளை  நிறத்துப் பொருட்கள் நாட்பட்டுவிட்டால், மங்கலாகி விடுகின்றன. அந்த நிலையில் அவை மஞ்சள் நிறத்தை அடைகின்றன.  தமிழில் மங்கல் என்ற சொல்லும் மஞ்சள் என்ற சொல்லும் ஒலிமுறையிலும் நெருக்கமாயுள்ளன. எனவே மஞ்சள் மங்கல் என்பன உறவுடையன என்பது தெளியக்கிடக்கின்றது.

மங்கல் >  (மங்கள் )* > மங்களம்.
மங்கல் > மங்கலம்.

சில சொற்களில் லகரம் *ளகரமாவதும் உண்டு.  செதில் ‍:  செதிள்.

மண்ணுமங்கலம், நாள்மங்கலம் முதலிய வழக்குகள் இலக்கியத்தில் உள்ளன.

ங்கு > ஞ்சு : திரிபு.

மங்கல் :  மஞ்சள்.

தங்கு > தஞ்சு  > தஞ்சம்.

அஞ்சியோ வேறு காரணத்தினாலோ,இடர் இல்லாத விடத்துச் சென்று தங்குதலே  தஞ்சம்  ஆகும்.

தன்னை ஓரிடத்தில் ஒப்புவித்தல் என,  தன் > தஞ்சு எனினும் அது ஆகும்.

தன் > தம் > தங்கு என்பதும் ஆய்வுக்குரியதே.

சனி, 13 டிசம்பர், 2014

வித்தகர்

விதை ஒன்று இட்டால் அது  சிறிது சிறிதாக   வளர்ந்து மரமாகிறது,

ஆசிரியன் ஒரு மாணவனுக்கு ஒன்றை விளக்கினால் அதிலிருந்து அது பெருகி அவனொரு புலவனாகிவிடுதல் காணலாம். விதைகள் சில உடன் முளைத்து வளரும், சில மெதுவாய் அல்லது பிற்காலத்தில் வளரும். கல்வி முதலியன குறிப்பதற்கு வித் (விது )  என்பது ஒரு சிறந்த அடிச்சொல்.

விது (வித்)  >  வித்தை.

விது  > வித்தகம்  (விது + அகம்).

இதை  விது  >  வித்து > வித்தகம் என்றும் காட்டலாம்.  எல்லாம் ஒன்றுதான்.

வித்து > வித்தகர்.  தம் துறை போகிய அறிஞர் .

more functions of suffix thu

து என்னும் பெயர்ச் சொல்லாக்க விகுதிபற்றி முன் இடுகையில் கண்டு மகிழ்ந்தோம்.
அங்கு விளக்கப்பட்ட விகுதி சேர்ப்பு  முறையையும் ஆக்கப்பட்ட சொற்களையும்   நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்  அதன் தொடர்பிலேயே சொற்கள்  சில காண்போம்.

வித் >  விதை.
வித் > வித்து.

இவற்றுக்கு அடிச்சொல் ஒன்றுதான். விதை என்பது ஐ விகுதி பெற்று வினைச்சொல்  ஆயிற்று. வித்து என்பது து விகுதி பெற்று பெயராகி விட்டது.

இங்கு பாருங்கள்;

கத் > கத்து. து பெற்று வினையாம்.

கத் > கதை.  வினையும் பெயரும் ஆகும்   கதை >   கதைத்தல். கதை என்பது முதனிலைத் தொழிற்பெயராகலாம்.

து என்பது வினைக்கும் பெயருக்கும விகுதியாகும்,


வித் என்பது ஆய்வில் வெளிப்போந்த செயற்கை அடிச்சொல்  தமிழ் பேசப்படும் மொழி ஆதலின் சொற்கள் வித்,  கத் புத் என்ற வடிவில் அமையா.
விளக்க்குதற்பொருட்டு பாணினி முறையில் அமைந்தவை இவையாகும்.
தமிழில் இயற்கை அடிச்சொல் விது  கது  குது எ ன்றமையும். தமிழ் முறையில் கது என்பது இரட்டித்துக் கத்து என்றாகும்/ பிறவும் அப்படியே. அப்போது இறுதி து என்பது விகுதி என்று தமிழ் இலக்கணியர்  கொள்ளார். இது தமிழுக்கும்  ஏனை மொழிகட்கும் காணக்கிடக்கும் வேறுபாடு ஆகும்.  ஆய்வில் தெளிவின்பொருட்டு இங்கு வித் கத் என்பன காட்டப்பெறும்.  இதனை முன்பும் விளக்கின நினைவு உள்ளது.