வெள்ளி, 12 டிசம்பர், 2014

The birthday of a Tamil King.

பிறந்த நாட் கொண்டாட்டம் எனில் சிறாருக்கு மகிழ்வு பொங்கிடும். சிறந்த ஆடைகள் அணிந்து, சுவையான உணவு உண்டு ஆடிக்களிக்கும் நாள் அது. இப்படித் தனிப்பட்டவர்கள் மகிழ்ச்சிக்கடலில் மிதந்த கொண்டாட்டத்தைப்  பழந்தமிழ் இலக்கியங்களில் தேடிப்பாருங்கள்.  உண்டோ இல்லையோ, அரசர் பெருமக்கள் கொண்டாடியது பற்றிக் குறிப்புகள் காணக்கிடைக்கும்.  புறப் பொருள் இலக்கணத்தில் இது "நாள்மங்கலம்"  என்று சிறப்பித்துக் கூறப்பெறும்.  

"சிறந்த நாளினிற் செற்றம் நீங்கி 
பிறந்த நாள்வயிற் பெருமங்கலமும்."

என்பார்  தொல்காப்பிய  முனிவர்.

அரசன் பிறந்த நாளைப் பாடினால்  புலவரின் பாட்டு "நாள் மங்கலம்" என்னும் துறையுட்   படும் என்பது.   ( பாடாண் திணை.)

அறந்தரு செங்கோல் அருள்வெய்யோன் 
பிறந்த  நாட்  சிறப்புரைத்தன்று.

என்பது புறப்பொருட் கொளு.  (பு  வெ மாலை -  24:  212.)

இந்த விழா நாட்களில் அரண்மனைக் கதவுகள் திறந்து விடப்பட்டு,  உணவு விருந்துகள் நடைபெறுதல் மட்டுமின்றி,  அரசர்  பெருமானின் நட்பு விழைந்த பெண்டிரும் வரவிடப் படுவர். இத்தகைய நாட்களில் அரசருடன் நெருக்கம் விழைந்து திரிந்த பெண்களும் பலரென்பது தெரிகிறது. எனினும் அரசர்கள் கவனமாய் இருந்தனரென்று நாம் ஊகிக்கலாம்.

அரசன் -   அருள் வெய்யோன்.  அவனிடம் குளிர்ந்த அருளும் இருந்தது. கடத்தற்கரிய  வெம்மையும்  இருந்தது. 


I have not come across any narration of a woman  assasinating a Tamil king on an "Open House" occasion such as the above. We can therefore safely assume that the kings were careful and they properly screened persons entering the palace on such days.






தமிழனே கட்டினான் ஓர்கோவில்

தமிழனே கட்டினான் ஓர்கோவில் == அது
தங்கிடும் கீர்த்தியில் மக்கள்நாவில்;
இமிழ்கடற் க‌ப்பால் ஒருதீவில் == கொலை
இழைத்தோற் கருளுமோ இந்த நாளில்?

ஒப்பார் உலகினர் எங்கெங்குமே == மக்கள்
ஒன்றெனக் கொள்வதே தங்கமென்க;
நற்பார் அமைந்திட நன்மைபெற == மேலோர் 
நாடும் அதுவழி புன்மையற.

இம்மா உணர்வில் இழிகொள்கையன் ‍‍== அவற்
கிடமோ தேவனின் சிந்தைதன்னில்;
தம்மா றதன்தவ றாய்ந்துபோற்றான் == கோயில்
தன்னில் இறையருள் பெற்றதுண்டோ?

கீர்த்தி


மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரிது என்பர்.   கீர்த்தி என்னும் சொல் அமைந்தது எவ்விதமோ?  இதுபோது காண்போம்.

சீர் > சீர்த்தி.  (தி - விகுதி)
இது பின்பு கீர்த்தி என்று மாறியது.

சகர வருக்க எழுத்துக்கள் (ச, சா, சி ....எனும் தொடக்கத்தன )
ககர வருக்கமாகத்  திரிபும்.

எ-டு :  சேரலம்  >  கேரளம் .
            ( சீர்வாணி ) >  கீர்வாணி.
            தக்கிணை >  தச்சிணை > தட்சிணை.  (சேவைக்குத் தக்க  இணை  என்று பொருள் )

பல மொழிகளில் இத்தகு திரிபுகள் உண்டு.