புதன், 29 அக்டோபர், 2014

A post content got lost

குதிரை  மறமென்ப தொன்றை எழுதிட‌
கோதற நெஞ்சம் முனைந்ததே
அதனை எழுதிப் பகுதி கழிந்தபின்
சட்டென் றதுசென்று மறைந்ததே
இதுவென்ன என்று‍நான் காணப் புகுந்தேனே
ஏதும் அறியாமல் ஒழிந்ததே
மதுவுண்டு விட்டதோ மடியின் கணினியே
மாலுமென் நெஞ்சிதே உண்மையே.

மீண்டும் எழுதிடும் ஆர்வம் உள்ளதோ
மேல்துன்பில் உள்ளம் நனைந்ததே,
ஈண்டு மணிநேரம் ஓடிக் கழிந்தபின்
ஏலுமேல்  காண்!பழம் கனிந்ததே !
மூண்ட நினைவலை மோதும் கரைதனில்
முன் அது வந்திடும் ஒதுங்கியே
தாண்டி வருமெனத் தக்க படிநம்பு
தமிழ்வெல்லும் இன்றிதே உண்மையே


There was a service disruption  causing some problems.

திங்கள், 27 அக்டோபர், 2014

வாஸ்து

வாயிலும் (வாசலும்)சுற்றும்  (மேல், கீழ், பக்கச் சுவர்கள்) யாவும் ஒரு வீட்டுக்கு முறைப்படி அமையவேண்டும்.இடர் தருவதாக இருத்தலாகாது.

வாயிலும் சுற்றும் > வாயிற் சுற்று  > வாசுற்று >  வாஸ்து என்றானது.

இவை  போல்வன  வழக்கமான திரிபுகளே.  

உயர்த்தி  >  ஒசத்தி  >  ஒஸ்தி . என்னும்  திரிபைக் கவனத்தில் கொள்ளவும்

அந்தச் கற்று >  அந்தச் சுத்து  > அந்தஸ்து.  அந்த என்பது   அரசனைக் குறிக்கும் கமுக்கக்  குறிப்பு.  பின்னர்   மேன்மக்களாகிய பிறரையும் குறித்தது.

இதேபோல் அந்தப்புறம் > அந்தப்புரம்.   அரசனின் அலுவலறைக்குப்  புறமாகிய பகுதி.  .


ஞாயிறு, 26 அக்டோபர், 2014

காதல் உலகம்

எல்லையில் இந்தியா பாக்கிஸ்தானி‍‍‍===படைக்குள்
ஏற்பட்ட சண்டையில் இடர்கள் உண்டு.
நெல்லையில் கிட்டாது பசுமதியென் பதனாலே
நீயுண்ணத் தடையுண்டோ பாக்கின் அரி?

கொல்லையில் காய்த்திட்ட கத்திரி வெண்டைகள்
குழம்புக்குக் கிட்டாத் கோலம் நேர,
வல்லை நீ வாங்கினை சீனத்துக் காய்கறி
வைத்திட்ட சாம்பரில்  வான்மை கண்டாய்.

அழகான பாக்கிப்பெண் அவள்மேலே மெய்க்காதல்
அதனால்சேர் இந்து ஆண் திருமணத்தில்
முழங்காதோ இன்னிசை வாத்தியங் கள்பந்தி
முழுவதும் புன்னகை குறைகள் உண்டோ?

பாக்கின் = பாக்கிஸ்தானின்.

அரி  :   அரிசி .

வல்லை  =  விரைவாக 

பாக்கிப்பெண் =  பாக்கிஸ்தான் பெண்..