ஞாயிறு, 26 அக்டோபர், 2014

வருது வருது விரைவுத் தொடர்வண்டி

இந்தக்== காலத்தில் வரப்போகும்  தொடர்வண்டிகள்
எந்த=== ஓசையும்  இலாது படர்வண்டிகள்!
உந்தம்=== காதிற்கே ளாதினி சிக்குப்புக்கு.
ஓடும்=== பாதைகேள் வழக்கம்போல் வடக்குத்தெற்கு.

கோலாலம் பூர்முதல் நூசா ஜெயா‍‍=== செல்லும்
கோலஞ்சேர் சிங்கப்பூர்,   காசும் தயார்!
ஏலாத உந்துகள் நெருக்கடி தீர் ‍‍=== பயன்
ஏற்றிடும் ஒருதிட்டம் வந்திடப் பார்!

உந்துகள் நெருக்கடி  :  traffic jams and other woes.
நூசா ஜெயா‍‍ :  A place in Johor Bahru, in the  new Iskandar Project.
 காசும் தயார்!  =  the funds for the project is ready,  I suppose.


சனி, 25 அக்டோபர், 2014

லகரம் னகரமாய் ...........

பல சொற்களில் லகரம் னகரமாய் மாறியிருத்தலை யாம் பல இடுகைகளில் சுட்டிக்காட்டியுள்ளோம். அறிஞர் பிறரும் எடுத்துக்காட்டியுள்ளனர்.

எடுத்துக்காட்டு:

கல் >  (கன்) > கனம். (கல் கனமானது).
கல்லுதல்  தோண்டுதல்.
கல் > கன் > கன்னம் > கன்னக்கோல். 

பேச்சு வழக்கில் நல்லா என்பது நன்னா என்று வருகிறது என்பது நீங்கள்
அறிந்தது

அன் விகுதிக்கு முந்தியது அல். பல சொற்களில் இன்னும் அல் விகுதி காணப்படுகிறது:

வள்ளல் ‍;  இளவல்.  தோன்றல் (தலைவன் என்ற பொருள்).

நல் என்பதன் அடிப்பிறந்த நன் > நன்னா என்பதை மேலே  குறித்துள்ளேன்.

நல் என்பது ந என்று குறையும்.

நப்பிள்ளையார், நச்செள்ளையார் என்ற சங்கப் புலவர்களின் பெயர்களில்  வரும்  ந என்பது நல் என்பதன் கடைக்குறை.

அதனிலும் இது பெரிது, அதனினும் இது பெரிது என்பனவற்றில் 
லகரத்திற்கு ன்கரம் ஈடாக நிற்றல் அறிக.

எனில்  > எனின் .
இதனாலே < இதனானே.

வெள்ளி, 24 அக்டோபர், 2014

On conviction and appeals

பொதுவாழ்வில் ஈடுபட்டால் === சிறை
புகவேண்டி நேர்ந்தாலும் நேரலாமே!
இதுவீழ்ச்சி என்றிடாமல் == வெளிவந்து
என்றும்போல் இன்றுமிரு, சோரலாமோ?

சாட்டுபவர் தம்வழக்கில்‍‍‍=== சான்று
காட்டுதலோ அன்னார்தம்  கடமையாமே  1
மீட்டுமுறை யீட்டில்புக‍‍===சாட்சி
கூட்டுதலோ ஆற்றலரி  தென்றுசொல்வார் .2

வழக்குரைஞர் வாதம்கேட்டு == மன்றம்
விலக்கிடுமோ தண்டனையை  யாமறிந்ததில்லை3
இழக்கும்நிலை வாராதென்று ‍‍=== எங்கள்
இளம்நெஞ்சு இன்றினியே நம்பிநிற்கும்,


1.
This line is on burden of proof: It is the legal duty of prosecution to prove its case beyond reasonable doubt
2 In appeals, witnesses are not recalled.  If recall is necessary then a retrial may be ordered
3 We cannot predict results except that we wish the party well.