வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

வைடும் (wide) வீதியும்

இந்த இரு சொற்களுக்கும் உள்ள ஒலி அணுக்கத்தை நீ ங்கள் கூர்ந்து உணர்ந்திருக்கலாம்.  Wide எனற்பாலதை வீ  டி (தி)  என்று சொல்லிப் பார்த்தால், வீதி என்ற சொல்லுடன் உள்ள நெருக்கம் நன்கு புலப்படும். 

வீதி என்ற சொல் சங்கதத்தில் இருந்தாலும், விரிவு என்ற பொருளில் உளதா என்பதைக்  கவனிக்கவேண்டும்.  தமிழில் விரிவுப் பொருளில் வருகிறது. ஏனைத் திராவிடமொழிகளிலும் இவ் வுண்மை ஆராயத் தக்கது.

விரி > விரிவு.
விரி > விரிதருதல்.
விரி> விரி + தரு + அம் > விரிதாரம் > விஸ்தாரம்
ரி என்பதை எடுத்துவிட்டு, ஸ்  / ஷ்  இட்டு அமைக்கப்பட்டது. 

கௌளி

இனிக் கௌளி என்ற சொல்லைப் பார்ப்போம்.

இதனை நீங்கள் இந்தோ‍ஐரோப்பிய மூலச் சொற்களின் அகரவரிசையில் தேடிப்பாருங்கள். சங்கதத்தில் kIlAlin   என்றொரு சொல்லும் உளது. இது கௌளியுடன் தொடர்பு பட்டதாகத் தெரியவில்லை.  கீலா தமிழில் கௌளி ஆயிற்று என்று வாதிக்கலாம்.

கௌளி பூச்சி புழுக்களைக் கௌவித் தின்கிறது. அதற்குப் பல் இல்லை. கவ்வி உள் இழுத்துக்கொள்கிறது. கவ்வு முன், நாக்கை நீட்டுகிறது என்றாலும், ஒரு சொல்லுக்குள் எல்லாச் செயல்களையும் படம்பிடித்தமாதிரி வரணிக்கத் தேவையில்லை, சொற்கள் அங்ஙனம் அமைவது அரிதாகும்.

கவ்வு + உள் + இ > கவ்வுளி > கவுளி. வகர ஒற்று இடைக்குறைந்துள்ளது, 

இது கவ்வி விழுங்குகிறது என்பதே பெயர்க்காரணம். அதாவது மெல்லப் பல் இல்லை.  ஆகவே கவ்வு+ உள்+ இ.  உள் என்பது உண் என்பதனோடு தொடர்பு உடையது.

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

vIthi வீதி


வீதி என்ற தமிழ்ச்சொல்லை இங்கு ஆய்வோம். வீதி என்பது விரிவு என்ற அமைப்புப் பொருளை உடையது.  இப்போது  ஸ்தீரீட்  street   என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான பொருள்கொண்டு வழங்குவதாகும்.

விர் > விய்  (வியல், வியன், வியப்பு)'  விய் > வியா > வியாபாரம்;)
விர் > வில் > விலை. (ரகர லகர திரிபு);  வில்+தல் = விற்றல்.

விர் > விரி என்பது முன் இடுகைகளில் கூறப்பட்டது.

இவற்றை மறந்துவிடலாகாது.

விர்> விய்  > விய்தி  > வீதி.

ஒப்பு நோக்குக: செய்தி >  சேதி.