செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

இராமேஸ்வரம்

ஈஸ்வரன்  என்ற சொல் அமைந்த விதம் எளிமையானதே.

இறைவர் என்ற தமிழ்ச்சொல்லை எடுத்து, "றை"க்குப் பதில் ஷ்  அல்லது  ஸ் போடுங்கள்.  இகரத்தை ஈகாரம் ஆக்குங்கள்.

இறைவர் >  ஈஷ்வர் அல்லது ஈஸ்வர்.

இங்கு பலர்பால் அர் விகுதி  இருப்பது காணலாம்.

ஒருமை அன் விகுதியின் மேல் பணிவுப் பன்மையாகிய பலர்பால் அர் சேர்வது
பரவலாகக் காணப்படுவதொன்று. எ‍ டு:

இறையன் > இறையனார்.

இங்கே மாற்றமாக, அர் மேல் அன் சேர்ந்து ஈஸ்வரன் என்ற சொல் அமைகிறது.

இங்ஙனம்  "ஈஸ்வரன்" என்பதமைந்தது.1

அர் விகுதியின்மேல் அம் விகுதியும் சேரும்.

இராமேஸ்வர் > இராமேஸ்வரம்.

திங்கள், 18 ஆகஸ்ட், 2014

Hina Rabbani Love Story

ஈனா ரபானி இணையம் வளர்காதல்
யானும் படித்து வியப்படைந்து ‍‍ வீணிலே 
ஏனிவர்கள் கெட்டபெயர் ஏற்கின்றார் என்றெண்ணித்
தானிருந்தேன் ஆனாலும் தக்கமுடி‍‍‍ வானபடி
காணும் எனவிருந்த போதினில் அந்நாட்டில்

வந்தது தேர்தலே வாணுதல் ஈனாவும்
சொந்தவூர் சென்றபின் சொல்கதையும் நின்றுபோய்,
அங்கே அரசியல் மாற்றம் அடைந்துவிட‌
பங்கம் பயவாமல்  முற்றிற் றெனவிருந்தேன்;

இன்னும் அதேகதை செல்வதைக் காண்கின்றேன்!
என்னும் நிலையிலே  இன்றென்ன ஆனதென‌ப் 
பாதிப் படம்பார்த்து  மீதியைப் பார்க்காத 
நோதல் நிலையே ! நுதலழகி ஈனா

முகிலிடைச் சென்று மறைந்த நிலவாம்
அகிலம் அறிய வெளிப்பட்டால் அன்றி
கதைமுடி  யாதஓர்  காட்சியாய் நிற்க,
இதைஇனித் தேடுதல் இல். 

Click:
http://www.youtube.com/attribution_link?a=PKibMh_Xzac&u=/watch?v%3DhNCLQ_qu5vY%26feature%3Dem-subs_digest-vrecs

வியப்பு , வியன் வியல் ( <"விர்" )

இத்திரிபுகளைக் கவனியுங்கள்:


(விர்) > விரி.
(விர்) > விய் > வியல்.  (விரிவு)
(விர்) > விய் > வியன்   (விரிவு)

விரிநீர் வியனுலத் துள் நின் றுடற்றும் பசி.  (குறள்)

"மாயாப் பல்புகழ் வியல் விசும்பு ஊர் தர"    (பதிற். 90: 20)

வியல் =  வியன்.  ல்>ன் திரிபு.  (அல் > அன் (விகுதிகள் ))

விர்> விய் > விய > வியப்பு. ஆச்சரியத்தில் மனம், கண் முதலியன விரிதல்.

விர் >  விய் > விழி.  ( கண் இமைகள் விரிதல்.)

வியி என்று அமைதல் இல்லை. விழி என்றுதான் தமிழில் அமையும்.

விரைவு குறிக்கும் அடிச்சொல் "விர்"  வேறு.