வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

Revealed: What led to destruction of Indus Valley civilisation

 சிந்து  நாகரிகம் ஏன்  மறைந்தது ?

ஐயப்பாடுகள்  அகன்றுவிட்டனவா?



 
alt200-year-long drought wiped out Indus Valley: StudyIn a ground-breaking discovery led by an Indian-origin palaeoclimatologist, researchers have found that a 200-year-long monster drought nearly 4,200 years ago doomed the Indus Valley civilisation in present Pakistan and northwest India.
Based on isotope data from the sediment of an ancient lake, the researchers suggest that the monsoon cycle, which is vital to the livelihood of all of South Asia, essentially stopped there for as long as two centuries to wipe out the Indus Valley civilisation -- also knows as the Harappan civilisation.
"The Indus Valley was characterised by large, well-planned cities with advanced municipal sanitation systems and a script that has never been deciphered.
But the Harappans seemed to slowly lose their urban cohesion, and their cities were gradually abandoned," explained Yama Dixit, a palaeoclimatologist at University of Cambridge.
The team examined sediments from Kotla Dahar-an ancient lake near the northeastern edge of the Indus Valley area in Haryana -that still seasonally floods.
The team assigned ages to sediment layers using radiocarbon dating of organic matter.
In various layers, they collected the preserved shells of tiny lake snails which are made of a form of calcium carbonate called aragonite.
The team also looked at the oxygen in the argonite molecules, counting the ratio of the rare oxygen-18 isotope to the more prevalent oxygen-16.
Kotla Dahar is a closed basin, filled only by rain and runoff and without outlets. During drought, oxygen-16, which is lighter than oxygen-18, evaporates faster so that the remaining water in the lake and, consequently, the snails' shells, become enriched with oxygen-18.
The team's reconstruction showed a spike in the relative amount of oxygen-18 between 4,200 and 4,000 years ago.
The data, published in the journal Geology1, suggests that the regular summer monsoons stopped for some 200 years.
According to Anil Gupta, director of the Wadia Institute of Himalayan Geology in Dehradun, this work fills a gap in the geographic record of ancient droughts.
But large questions still remain.
"What drove this climate change 4,200 years ago? We do not see major changes in the North Atlantic or in the solar activity at that time," he said.

வியாழன், 7 ஆகஸ்ட், 2014

செல்வம்

செல்வம் என்பது மிக அழகான தமிழ்ச்சொல். தமிழ்ச் செல்வி, செல்வ குமாரி என்பன போலப் பெயர்கள் பல, இட்டமுடன் நான் அணுகும் நற்பெயர்கள் இவை. இட்டம் என்றால் மனத்தை அதன்பால் இடும்படிக்கு அமைந்தவை. இடு+அம்.

அது நிற்க:

செல்வம் என்பது  நிலையாது என்கின்றனர்.  நெல்லை அப்படியே வைத்திருந்தால் பூச்சிகள் வண்டுகள் எல்லாம் வந்து நிலையாமையை உணரச் செய்து விடும்.என்னதான் செய்வது? தானம் செய்துவிட வேண்டும். மற்ற மனிதர்கள் ஊணாகக் கொள்வர் அல்லரோ?  கடவுள் படைத்த பூச்சிகளுக்குத் தர மனிதன் ஒப்பான். இந்தத் தொல்லைகள் இல்லாமல் நெல்லை விற்றுப் பணத்தை இருப்பகத்தில் இட்டுவிடலாமே. பனத்தைக் கண்டுபிடித்தது நிலையில்லாத செல்வத்தைச்  சற்று   நிலையுள்ளதாக மாற்றுவதற்குத் தான்.  பூச்சிகளையும் கடவுளையும் ஏமாற்றும் செயலா...?

கூத்தாட்டு அவைக்குழாத்து அற்றாகிய செல்வத்துக்குப்பெயர் ஏற்பட்டது அது செல்லும் தன்மை கொண்டது என்பதால்தான்.   செல்லும் ‍‍ கையைவிட்டுச் சென்றுவிடும்.

செல்>  செல்வு > செல்வம்.

அது சென்றுவிடும் தன்மை உடையது என்பதால் ஏற்பட்ட சொல்.
சொல்லாராய்ச்சி செய்தால் இந்த  நலமற்ற பொருண்மைகளெல்லாம் வெளிப்படும். பின் செல்வம் என்ற பெயரைக் கேட்கும்போதெல்லாம் இந்த நிலையாமைக் கருத்து மனத்துக்குள் வந்துவிடும்.  வரக்கூடாது.  கண்டிப்பாக வரக்கூடாது.  சொற்பிறப்புப் பொருள் வேறு.   அதன் இன்றையப் பயன்பாட்டுப் பொருள் வேறு.

எந்த மொழிக்கும் அதன் இன்றைய வழக்கு முதன்மையும் முன்மையும் உடையதாகும்.

தேகம் என்ற சொல்லைப் பற்றிய ஆய்வு  இடுகை காண்க. அதுவும் செல்வம் போன்ற கருத்திலிருந்து தொடங்கிய சொல்தான். தேய்தல் கருத்து.
  

புதன், 6 ஆகஸ்ட், 2014

கபிலர் & செல்வக்கடுங்கோ

இது செல்வக்கடுங்கோ வாழியாதனைப் பற்றிய  சங்கப் புலவர் கபிலரின் வண்ணனை.  இத்தமிழைச் சிறிது நுகர்வோம்.


இழை அணிந்து எழுதரும் பல் களிற்றுத் தொகுதியொடு
மழை என மருளும்  மா இரும் பல் தோல்
எஃகுப் படை அறுத்த கொய் சுவற் புரவியொடு
மைந்துடை ஆர் எயில் புடை பட வளைஇ 
வந்து புறத்து இறுக்கும்;  பசும்பிசிர் ஒள் அழல்.
ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர் திகழ்பு
ஒல்லாமயலொடு பாடு இமிழ்பு உழி தரும்
மடங்கல் வண்ணம் கொண்ட கடுந்திறல்....

(பதிற். 7.63. 1 முதல் 8 வரை.


இழை அணிந்து எழுதரும்  ‍=  அணிகலன்கள்  பூண்டு கிளம்பும்;
பல் களிற்றுத் தொகுதியொடு = பல ஆண்யானைகள் கொண்ட கூட்டத்துடன்;
மழை என மருளும் =  மழை வந்துவிட்டதோ என்.று அஞ்சித் திமிறுகின்ற;
 மா இரும் பல் தோல் = மிககப் பலவாகிய  யானைகளும்;
எஃகுப் படை அறுத்த = எஃகினால் ஆன ஆயுதங்கள் கொண்டு நடந்த படையை வென்ற‌
கொய் சுவற் புரவியொடு =  கழுத்து மயிர்க்கொத்து (ஆடும்) குதிரைகளுடன்
1.
மைந்துடை ‍  வலிமை யுடைய. ( மைந்து என்னும் சொல் யானை மதத்தையும் குறிக்கும்.)  எனவே, மிகு வலிய என்க.2

ஆர் எயில் = கூரான அம்பு.
மதம்பிடித்தது போல் வலிமையுடன் விடப்படும் கூர் அம்பு என்க.
புடை பட  = சூழ்ந்து வர,   வளைஇ ‍ வளைந்து
வந்து புறத்து இறுக்கும் ‍ ‍= வந்து வெளியில் இறுக்கம் அல்லது நெருக்குதல் செய்யும்.
பசும் பிசிர் == பசுமையான மழைத்துளி.
(தண்ணீர் பசுமை என்பது பச்சைத் தண்ணீர் என்னும் உலக வழக்கால் அறிக).
ஒள் அழல் =  தீப் பிழம்பு  போன்ற  (அழல் எனத்தகும் ஒளி  வீச என்பது பொருள். )  அடுத்த  தொடரும் இதை விளக்கும்.
ஞாயிறு  பல்கிய ‍= சூரியன் தன் வெப்பத்தை மிக்கு (ஒளிவீச)

மாயமொடு சுடர் திகழ்பு  ==  புரிந்துகொள்ளவியலாத (கடுமையான) சுடராய்த் திகழ;
ஒல்லா மயலொடு ‍  =  ஏதும் செய்யவியலாத மயக்கத்துடன்;
பாடு = துன்பம்.  (செய்து முடித்தலை எதிர்நோக்கி ஒரு  செயல்வீரன் படும் "துன்பம்" அல்லது "துடிப்பு".)

 இமிழ்பு =  மிகுந்து;  உழிதரும் = திரிகின்ற.
மடங்கல் = அரிமா(வின்);  வண்ணம் = (விதமாகத்)    தன்மை ;
கொண்ட கடுந்திறல் =  உடைய கடுமையான திறன் அல்லது செயலாக்கம்.

இங்ஙனம் கபிலர் புகழ்ந்து பாடுகிறார்.
சங்கப் புலவர்கள் இயற்கையைப்  புகழ்ந்து ஷெல்லி போல் தனிச் செய்யுள்கள் -  கவிகள் பாடுவதில்லை. பெரும்பாலும் அரசர் முதலானோரைப் புகழுமுகத்தான் இயற்கை அழகைத் தொட்டுக்கொண்டனர்.  உரூவகமாக   உவமையாக மேற்கொண்டனர்



தொடரும்.

----------------------------------------------------------------------------------------------------------
சொல்லாக்கக் குறிப்புகள்:

1    (கொய் > கொய்+து > கொய்த்து > கொத்து) யகர ஒற்றுக் கெட்டது. இப்படி யகர ஒற்று கெட்ட சொற்களைத் திரட்டுக). து இங்கு பெயர்ச்சொல் (தொழிற் பெயர்) விகுதியாகப் பயன்பட்டது)

2     (ஒப்பீடு: மை > மையல்; மைந்து < மை+து.  து  பெயராக்க விகுதி.  கொய்> கொத்து என்பது மேலே கூற‌ப்பட்டது.    மை> மய் > மயங்கு,  இது பை> பய் > பயல் என்பது போல.)