சனி, 26 ஜூலை, 2014

சிதறுதல் சித்தன் connected words?

சிதறுதல் என்பதும்  முன் இடுகையில் கூறிய "சித்" என்னும் அடியினின்று தோன்றியதே ஆகும்.

முன் இடுகை :-
http://sivamaalaa.blogspot.com/2014/07/blog-post_26.html

சிதறுவதும் சிதைவதும் தொடர்புடைய கருத்துக்கள்..

இனிச் சித்தன் - சித்து என்பனவற்றைச்  சற்று சிந்திப்பதில் தவறில்லை.

சித்தன் என்பவன் இல்லற வாழ்வின் அமைப்பினைச் சிதைத்து,  குடும்பக் கட்டமைப்பிலிருந்து சிதறி வெளியில் சுற்றி அலைந்து,  பிச்சையும் புகுந்து , வெறுக்கத்தக்க சூழ் நிலையைத் தனக்கு உருவாக்கிக் கொள்வோன்  என்று ஒரு காலத்தில்  கருதியிருக்கலாம்.   அதனால் சித் என்ற அடியிலிருந்து  "சித்தன்" அமைந்திருக்கலாம்.  இது  ஆய்வுக்குரியது.

இதற்கு(சித்தன்)  முன்பு யாம் தந்த சொல்லாய்வு வேறென்பதை பழைய இடுகைகளில் கண்டுகொள்க.  No harm toying with this connection.  நிற்க:

சிதடன் - சிதடி  என்ற சொல் சித் என்பதில்  தோன்றீயது என்பதற்கு விளக்கம் தேவையில்லை.  இதற்கு, முட்டாள், பைத்தியக்காரன் .என்றேல்லாம்  பொருள் உண்டு. "புத்தி சிதறிப் போனவன்(/ள் )" என்று கொள்க.  சிதடு  என்பது அறியாதவனை.

சிதடி என்றொரு பூச்சியும் உண்டு.

கந்தைக்கு (கிழிசல் பழந்துணி / ஆடை) யை   "சிதர்வை " எனறு சொல்வர்.

சிதவல் - கிழிந்த துண்டுத் துணி,  வெட்டுத் துண்டு,   தேரில் உள்ள கொடித்துணி,  புரையோடிய புண்,  மட்பாண்ட உடைசல்  .

இவற்றின் கயிறுபோன்ற தொடர்பினைக் கண்டு மகிழவும். 

சிதல்

மண்ணின்  ஈரத்தில் தன்  திண்மை  இழந்து  மெதுவாகிவிட்ட மரக் கட்டைகள்
கரையானுக்கு மிகவும் பிடித்தவை.   நாம் குளம்பிக்கு (காபிக்கு) முறுக்கைக் கடித்துக்கொள்வதுபோல் தின்னத்  தொடங்கி  விடுகின்றன.

கரையான் மரத்தை அரிக்காவிட்டாலும் நாளடைவில் அந்த மரக் கட்டைகள் சிதைந்துதான்   போகும்.  கரையான் அந்தச் சிதைவை விரைவுப் படுத்துகிறது என்கிறார்கள்.

கரையானுக்குச்  சிதல்  என்றும் சொல்வர் . 

இப்போது சிதை(தல் ) என்ற சொல்லுக்கும் சிதல்  என்பதற்கும் உள்ள தொடர்பினை ஆய்வோம்.

(சித்)  >  (சிது ) > சிதை .         : (சிது ) + ஐ . 
(சித் )  > (சிது )  > சிதல்          : (சிது ) +  அல் .

சிதை என்பதன் "ஐ"  வினைச்சொல் ஆக்க விகுதி.

சிதல்   என்பதன்  "அல் "  தொழிற்பெயர் (  வினை பெயராவதற்குப்) பயன்படும் விகுதி.

மனிதன் குகைகளில் வாழ்ந்து திரிந்த ஆக்க அல்லது ஆதி காலத்தில் அடிச்சொல் "சித் " என்று இருந்திருக்கும். இது ஆய்வில் மீட்டுருவாக்கம்.. 

வெள்ளி, 25 ஜூலை, 2014

கீதா சாரம்

எது நடந்ததோ அது நல்லதாகவே நடந்தது;
எது  நடக்கிறதோ அது நல்லதாகவே நடக்கிறது,
எது  நடக்குமோ அது நல்லதாகவே நடக்கும்

உனக்கு என்னாயிற்று?
எதன்பொருட்டு  நீ அழுகிறாய்?
நீ   என்ன  கொண்டு வந்தாய்?---
அதை நீ இழப்பதற்கு!

நீ எதைப் படைத்தாய்?---
அது வீணாவதற்கு !

நீ எதை எடுத்துக்கொண்டாயோ
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது !
நீ  எதைக் கொடுத்தாயோ
அது இங்கிருந்தே கொடுக்கப்பட்டது!

எது  எனதாக உள்ளதோ அது நேற்று
வேறொருவனுடையதாக இருந்தது!
மறு நாள் அது வேறொருவனுடையதாகும் !
இந்த மாற்றமே உலக நியதி !

பகவத் கீதை