ஞாயிறு, 1 ஜூன், 2014

திலகம்.

பேச்சு வழக்குத் திரிபுகளாயினும், சில திரிபுகள் எப்போதும் நினைவிலிருத்திக்கொள்ளத் தக்கவை. இப்போது இவற்றைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

புரள்  ‍  பிறழ்*.  (ர <> ற;  ள் <> ழ்).  இவ்விரண்டு சொற்களும் இலக்கிய வழக்கிலும் பேச்சிலும் உள்ளன.  இங்கு  உ  (பு)  என்பது  இ (பி) என்று மாறியுள்ளமை காணலாம்.

இனி:

சுண்ணாம்பு : சின்னாம்பு.
துன்னு  :  தின்னு.
புள்ள   : பிள்ளை
புண்ணாக்கு :  பிண்ணாக்கு.
புரளி  :  பிரளி,  பெரளி.

இவற்றிலெல்லாம் ,  முதலெழுத்தில்  (மெய்) நின்ற உகரம், இகரமாய்த் திரிதல் காணலாம். சோடிச் சொற்களில்  ஒன்று பேச்சு வழக்கினது.

துலங்கு என்பதை நோக்கின், பொருள் ஒளிவீசுதல் என்பது புரியும். இலங்கு என்பதும் அதுவே.

உ <> இ  துலங்கு <> இலங்கு.
து > தி;  த் + உ  > த் + இ


துலங்கு என்பதன் அடிச்சொல் துல என்பது. கு என்பது  வினைச்சொல்லாக்க விகுதி.

துல > தில.
துலகு > திலகு > திலகம்.

நெற்றி துலங்குவதற்கும் ஒளிபெறுவதற்கும் இடுவது: பொட்டு.

திலகம்  :  ஒளி வீசும் பொருள் அல்லது ஆள்.   ஒளி  ‍ பெரும்புகழுமாகும்.



அடிக்குறிப்பு:

* புரள் - பிறழ்  :  இவை ஒரே மூலத்திலிருந்து ஆனால் வெவ்வேறு அடிகளிலிருந்து பிறந்தவையாய் இருக்கக்கூடும். We would not  delve into that for this submission.


சனி, 31 மே, 2014

பூர்விகம்

ஓரிடத்தில் உள்ள ஒன்று பிறிதோரிடத்துப் போய் அடங்குமாயின் அதனைப் "புகுதல் '  என்கிறோம். பலர் இதனைப் "பூர்(தல் )  என்கிறார்கள்.

இந்த உறைக்குள் தலையணை பூரமாட்டேன் என்கிறது:" என்பர்.

ஒன்று ஓரிடத்தில் பூர்வதுதான் (புகுவதுதான்)  அதற்குத் தொடக்கம் ஆகும்.

பூர் > பூர் +வ் ​ + இகம் > பூர்விகம்.
பூர் + வ்  +அம்  =  பூர்வம். (தொடக்கம்.)

பூர் என்பது புகு என்பதன் திரிபாதலின், பூர்வம் என்பது புகவம் என்று இருக்கவேண்டும்.  அப்படி இல்லை; அதுவும் ஒன்றும் நட்டமில்லை.

இது பேச்சு வழக்குத் திரிபுச் சொல்லாகும்.  இகம் ஒரு விகுதி.
  

virus

Some virus program is preventing new posts.  This will be looked into and rectified.