வெள்ளி, 30 மே, 2014

ஓதம் : noise, uproar.

ஓதம்  :  noise, uproar.  .

ஓதுங்கால், பலத்த ஒலி ஏற்படுவதுண்டு.  கூடியிருப்போர் யாவருக்கும் கேட்கும்படியாகவே  ஓதப்படும்.  பலர் அமர்ந்து ஓதுகையில் பேரொலி எழுமாதலின் ஓதம்  (ஓது+ அம்) பேரொலி எழுப்புதலைக் குறிக்கலாயிற்று.

"ஓ" என்னும் ஒலிக்குறிப்படியாய்ப் பிறந்த சொல்லே  ஓது என்பது. இதில் "து ‍ வினைச்சொல்லாக்க விகுதி.

நோய் குறிக்கும் ஓதம் என்ற சொல் ஊது என்பதிலிருந்து தோன்றியது.  இங்கு ஆயப்பட்ட ஓதமென்பது ஒலிக்குறிப்புச் சொல். இவற்றின் பிறந்தகங்கள் வெவ்வேறாம்.

வியாழன், 29 மே, 2014

ஓதம் disease: hydrocele

"ஓதம்"   சொல்  அமைந்த  விதம் அறிவோம்.

 வீக்கத்தை "ஊதிவிட்டது "  என்பது பேச்சு  வழக்கு.  "ஊதலான " உடம்பு  என்ற  வழக்குமுண்டு.

ஊது   >  ஊதம்  >  ஓதம்  என்பது திரிபு.

பருத்துவிட்டது என்பது பொருளாம்.    .

விவாகம்

முஸ்தீபு  என்ற சொல்லமைப்புக்  கண்டு இன்புற்றோம்.   இங்கே:

http://sivamaalaa.blogspot.com/2014/05/blog-post_29.html

இஃது ஒரு குறுக்கச் சொல் என்பது அங்கே விளக்கப்பட்டது.

தமிழ் மொழி முழுவதிலும்  இப்படி  ஒரே ஒன்றுதான் உள்ளதோ ?  அப்படியாயின் எப்படி நம்புவது?

இதோ இன்னொன்று  தருகிறேன். முன்பே  நான்  எழுதி வெளியிட்டதுதான்.

இல்லறம் என்பதே விழுமிய வாழ்வு ஆகும். 

விழுமிய வாழ்க்கை ஆகும் .

வி- வா -  ஆகும்   >  விவாகம்.  ஆகும் >  ஆகம் .

வி வா என்பது  viva  என்று இலத்தீன் மொழி வரை  பரவிவிட்டது.

viva il  papa!       See also the roots of  vitamin  ,  vita,  etc

ஏன் ?  அழகு தமிழ் என்பதால்.!