தைத்தல், தையல் , தயிர் . தைரியம் ( வேறு விதமாக எழுதியமைக்க வேண்டுமானால் "தயிரியம் " என்றெழுதலாம் [ வீரமாமுனிவர் "தயிரியம்" என்றே எழுதியுள்ளார் ] எனினும், நாம் அப்படி எழுதுவதில்லை `) என இவற்றின் அடியறிந்து இன்புற்றோம். இதன் தொடர்பில் ஒரு பழந்தமிழ்ச் சொல்லை அறிந்து மகிழ்வோம்.
தைவருதல் என்றால் தடவிக் கொடுத்தல் என்று பொருள்.
சிறிய கள் பெறினே எமக்கீயும் மன்னே என்னும் ஔவையாரின் புறப்பாடலில் "என் தலை தைவருமன்னே " என்பது காண்க. .
இவற்றுளெல்லாம் அடிப்படைக் கருத்து,தொடுதல் என்பதுதானே யன்றி வேறன்று.
இரு துண்டுத் துணிகளைத் தைக்கும்போது, ஒரு துண்டு இன்னொரு துண்டைத் தொடவேண்டும். தொட்டபின்புதான் தைக்க அல்லது இணைக்க முடியும்.
தயிர் என்பதில் பால் கட்டிப் படுகிறது. தைரியம் என்பதில் மனம் கட்டிப் படுகின்/றது அல்லது கெட்டிப் படுகிறது. எனவே, இதன் அமைப்புப் பொருளை நன்கறியலாம். உறைவதில் சிறு திரள்கள் ஒன்றை ஒன்று தொட்டுத்தான் இணைந்து உறைகின்றது. தைரியம் என்பது பருப்பொருளுடன் ஒப்பீடு செய்து உருவான சொல்.
பெண்ணைக் குறிக்கும் தையல் என்ற சொல்லும் "தொடற்குரிய பருவத்தினள் " என்ற கருத்தில் அமைந்த சொல்.
தொடர்புடைய .இடுகைகள் :
தைரியம் :http://sivamaalaa.blogspot.com/2014/05/blog-post_27.html
தைரியசாலி : http://sivamaalaa.blogspot.com/2014/05/blog-post_3822.html