வியாழன், 22 மே, 2014

வையாபுரி

வையாபுரி என்ற சொல்லினைப் பார்ப்போம். ஆய்வின் பொருட்டு, முதலில் "வையகம்" என்ற சொல்லைக் கவனியுங்கள்.  "வையம்"  மற்றும் "வையகம்" என்பன இறைவனால் வைக்கப்பட்டதாகிய இவ்வுலகம் என்று பொருள்படும். வீடு வைத்தல் என்ற  பேச்சு வழக்கினையும் நோக்குக. இவற்றினை  விளக்கி, முன் இடுகைகளில் பதிவு செய்துள்ளேன்.

இறை (நகரம் அல்லது) நகரங்கள், மனிதனால் கட்டப்படாதவை.  அவை இறையருளால் தாமே தோன்றியவை என்பது கருத்து. எனவே, அமைக்கப்படாமல், மனிதனால் கட்டப்படாமல், தாமே முகிழ்த்த நகரம்  அதுவே வையா ‍ -- கட்டப்படாத ;  புரி -- ‍  நகரம்.

பழனி இங்ஙனம் தானே முகிழ்த்த நகரம் என்று கருதியதால்,  அதாவது மனிதனால் அமைக்கப்படாமல் இறைவனால் தோன்றிய நகரம் என்பதால், அது வையாபுரி ஆயிற்று.

பொருள்  -   முருகன்  அருளிய  நகர்,  இடம்   , கோவில் .   அவன்  அமர்விடம் 


More on words using "vai" and  formation of words:.

http://sivamaalaa.blogspot.com/2014/04/ii_24.html.

http://sivamaalaa.blogspot.com/2014/04/blog-post_24.html

http://sivamaalaa.blogspot.com/2014/04/blog-post_25.html





படைத்தலைவர் அரசினை மேற்கொண்டார்

படைத்தலைவர் அரசினை மேற்கொண்டார்

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு  உறுப்பினர்கள் சிலர் கைது.

http://www.voanews.com/content/crisis-talks-continue-in-thailand/1919959.html


ஆட்சி அமைத்தார் படைத்தலைவர் ;  ஆகையால் 
மீட்சி  எதிர்தரப்பு மேற்றாகும் ---- வீழ்ச்சி 
அடையும் எனச்சொல்வார் ஆண்டோர்  தரப்பாம்  !
உடைவதோ மக்கள் அணி ?


குறிப்புகள்:

மீட்சி  -  மீண்டும் அதிகாரத்துக்கு வருதல் போன்ற  நடவடிக்கைகள்.
எதிர்தரப்பு  -  opponents to the last ruling govt which was deposed.
மேற்று  -  மேலது ,  சேர்ந்தது  (ஆகும்).
ஆண்டோர்  தரப்பு:   முன்னைய அரசு சேர்ந்தவர்கள்.
மக்கள்  அணி  -   ஜன நாயக அணி   மக்கள் ஆட்சி அணியினர்.

 படைத்தலைவர்  -  refers to the Army  General and his command who staged the coup. 




புதன், 21 மே, 2014

திரிபு அடைவனவும் அடையாதனவும்

புகையிலை என்ற சொல் போயிலை என்று திரிந்து  வழங்குவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். புகையிலை என்பது எழுத்தில் மட்டும் வழங்குவது. பேச்சில் பெரிதும் "போயிலை" என்பதே ஆட்சி செய்கிறது.

ஆனால், புகை என்ற தனிச்சொல் போ என்று திரிவதில்லை. கூட்டுச் சொற்களைப் பார்த்தல்,  எல்லாக் கூட்டுச் சொற்களும் திரிவதில்லை. புகைவண்டி என்ற சொல், போவண்டி என்று திரிவதில்லை.

அதுபோலவே. புகைமூட்டம்,  புகைமண்டலம், புகைக்கூடு முதலியவை திரியவிலை.

ஒரே சொல் சிலவிடத்துத் திரிந்தும் சிலவிடத்துத் திரியாமலும் வழங்கும்.