புதன், 21 மே, 2014

திரிபு அடைவனவும் அடையாதனவும்

புகையிலை என்ற சொல் போயிலை என்று திரிந்து  வழங்குவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். புகையிலை என்பது எழுத்தில் மட்டும் வழங்குவது. பேச்சில் பெரிதும் "போயிலை" என்பதே ஆட்சி செய்கிறது.

ஆனால், புகை என்ற தனிச்சொல் போ என்று திரிவதில்லை. கூட்டுச் சொற்களைப் பார்த்தல்,  எல்லாக் கூட்டுச் சொற்களும் திரிவதில்லை. புகைவண்டி என்ற சொல், போவண்டி என்று திரிவதில்லை.

அதுபோலவே. புகைமூட்டம்,  புகைமண்டலம், புகைக்கூடு முதலியவை திரியவிலை.

ஒரே சொல் சிலவிடத்துத் திரிந்தும் சிலவிடத்துத் திரியாமலும் வழங்கும்.

திங்கள், 19 மே, 2014

Revelation of tea shop connection


தேநீர் செயும்பையன் என்றார் அவர்மொழியின்
வீணீர்மை விண்ணெரி தீ.   (1)

எடுபடாப்  புன்மொழி எங்கும் இயம்பிக்
கெடுபடல் காத்தல் கடன். (2)

யாவரும் மன்னரே மக்கள் ஆள்  மாண்பினில்
தேதரும் தீதிலார் காண்.  (3)

பொருள் :

இது பிரதம மந்திரி மோடி அவர்களைப் பற்றிய சில வரிகள்.

1.  தே நீர் =  tea. செயும் =  செய்யும். வீணீர்மை =  வீண் தன்மை . விண்ணெரி = ஆகாயத்தில்  எரிகின்ற நெருப்பு  போன்றது.  ஆகவே வீண் பேச்சு என்பது எல்லோருக்கும் தெரியும் .

2 எடுபடா = மக்கள் ஏற்க முடியாத . புன்மொழி = கீழ்த் தரமான பேச்சு . இயம்பி - சொல்லித் திரிந்து.  கெடுபடல் = தீமையுட் படுதல். காத்தல் = (கேடின்றிக்) காத்துக் .  கொள்ளுதல்.  கடன் = கடமை.

3.யாவரும் = எல்லாக் குடிமக்களும் .  மக்கள் ஆள் = மக்கள் ஆட்சி (செய்யும்)  

 தே தரும் -       தே நீர் விற்கும் .  தீதிலார் = தீமை இல்லாதவர்கள். 

Even with the revelation that Mr Modi was a tea boy and that he was marred but not with his wife now,  the Congress still lost.



`

ஞாயிறு, 18 மே, 2014

Terrorists arrested in Malaysia Targeted Indian cities

காவல்துறை  மலேசியா திறமை மிக்கோர்  ‍‍ --- எந்தக்
கள்ளனையும் கண்டுபிடி கடமைத் தக்கோர்.
மேவிடுவார்  வேலைனை செயல்முன் ஏவல்‍‍‍‍-- ‍‍‍‍‍‍‍ இந்த‌
மேதினியில் வேண்டாத மெய்ம்மை மேலோர்!

சென்னையிலே பெங்களூரு நகரந்  தன்னில் ‍‍---  வெடி
சிதறுகுண்டு வைப்பதற்குத்  திட்டம் பண்ணி,
உன்னிப்பாய் ஒளிந்திருந்தார் இரண்டு தீயர் ‍‍‍--- கைது
ஒருமிக்கச் செய்புகழால் உயர்ந்த காவல்!

அங்குமிங்கும் சேற்று நீர் உண்மை போல---- ‍‍ தீர்வு
அடையாத குற்றம்சில  இடையில் மேவும்;
எங்குமொரு குற்றச்செயல் இல்லா நாடு ‍‍‍ ---உலகம்
இனிக்காண வேண்டுவதே  இனிதே தேடு!

Source of news:  The Sun, (Malaysia).  May 16, 2014.

will edit for link etc later