சில நாட்களின் முன்பு, பாக்கு பற்றி எழுதியிருந்தேன். பகுக்கப் படுவதால் பாக்கு ஆயிற்றென்பதை விளக்கியிருந்தது அவ் இடுகை. மற்றொரு பெயர் கமுகு என்பதும் கண்டோம்.
வெற்றிலைக்கு வேறு பெயர் "சருகு" என்பதும் பின் ஓர் இடுகையில் சொல்லப்பட்டது.
வெற்றிலை பாக்குப் போடுவதை "சருகு பிளகு" போடுவது என்பதுண்டு. இப்போது இவ்வழக்கு இன்னும் உளதா என்பது தெரியவில்லை. இதில் பிளகு என்பது பாக்கைக் குறிக்கும். ஆனால், தமிழ்ப் பேரகராதிப் படி, பாக்குமர வேரைக் குறிப்பதே "பிளகு" என்னும் சொல். வேரை யாரும் போடுகிறார்களா என்று தெரியவில்லை. முன் போட்டதற்கான ஆதாரம் ஏதும் கிட்டவில்லை.
பகு என்பதிலிருந்து பாக்கு வருதல்போல். பிளத்தல் என்பதிலிருந்தே, "கு" என்னும் விகுதி பெற்று பிளகு என்னும் சொல் அமைகிறது.பேச்சு வழக்கின்படி, பிளகு என்பது பாக்கையே குறிப்பதாகும். மலேசியாவில் பாக்கு விளைந்த இடங்கள் உண்டு. "பினாங்கு" என்றாலே பாக்குத்தான்.
இந்தோனேசியாவில் தஞ்சோங் பினாங் என்றோர் இடம் உண்டு. இந்த இடமும் பாக்கு விளைந்த பெருமை உடையதேயாம்.
பிளகு என்பது பிளத்தல் எனும் வினையடியாகப் பிறந்த சொல் என்பது காண்க.