செவ்வாய், 13 மே, 2014

கைகேசி

கைகேசி என்ற இராமாயணத்தில் வரும் பெயரைப் பார்க்கலாம்.


கேசம் என்ற சொல்லை முதலில் நோக்கினால்,  அது முடி (மயிர்) குறிப்பது என்பது புரியும்.

கை  கேசி எனின், கையின் நீட்டத்திற்கு முடி தொங்க விட்டிருப்பவள் என்று பொருள்.  வாயில் <> வாசல் என்பது  போல,  கேசி <> கேயி என்று ஒன்றுக்கொன்று மாறுபடும். இன்னொன்று  ஆகாயம் <> ஆகாசம்.  மற்றும் வாயித்தல் > வாசித்தல்.  மலையாள‌த்தில் வாயிச்சு என்றுதான் சொல்வர்.

வான்மீகி ஒரு  தமிழறிந்த புலவர் என்பதற்கு அகச்சான்றுகள் பல.  கை என்ற சொல் பயன்படுத்தியதும் ஒன்றாம்.

திங்கள், 12 மே, 2014

If BJP Alliance wins in India....

இரு நூற்றின் மேற்பட்ட  இருக்கை யோடு
ஏறிவிடும்    பாஜக    எனச்சொல்  கின்றார்
வரு நாளில் முஸ்லீம்கள் சலுகை குன்றும்
வற்றுமவர்  வளங்களெலாம் என்கின் றார்கள்
குறுவானைக் கற்பனையில் கண்டு சொல்வார்.
கூறியவை எதனையுமே  நம்பற் கில்லை.
அரும் அப்துல் கலாம்வந்த தெந்த ஆட்சி?
ஆகையினால் வந்தாலோ குறைவொன் றில்லை.

BJP and allies may come in with majority but no religious group will be adversely affected. People in politics know their job.....!

ஆஞ்ச நேயர்

ஆஞ்ச நேயர் என்பது முன்னர் இராமர்பால்  "ஆழ்ந்த நேயம்" உடையவர் என்ற தொடரின் திரிபு என்று  கூறப்பட்டது.

ஆனால் "ஆழ்ந்த" எனற்பாலது "ஆஞ்ச" என்று திரிதற்குரிய சாய்நிலை குறைவு என்று தெரிகிறது.

இந்தத் திரிபுகளை நோக்குக.

பாய்ந்த  >  பாஞ்ச.
ஆய்ந்த >  ஆஞ்ச.    (ஆஞ்ச கீரை).
ஓய்ந்த >  ஓஞ்ச    (ஓஞ்ச வாய்).
காய்ந்த >  காஞ்ச    (காஞ்ச துணி)
தேய்ந்த > தேஞ்ச   (தேஞ்ச பல்லு).

ஆகவே, ஆய்ந்த நேயர் என்பதன் திரிபே "ஆஞ்ச  நேய" என்பது, மிகத் தெளிவாகின்றது.

இதன் பொருள்,  நண்பராக முன் வந்த  பலருள், ஆராய்ந்து எடுத்த நேசனே "ஆஞ்ச  நேயர் என்பது தெள்ளத் தெளிவாகின்றது.